பெட்ரோல் டீசல் செலவை மேலும் குறைக்க பேடிஎம், மொபிக்விக், போன்பே செயலிகள் வழங்கும் கேஷபேக்.!
குறிப்பாக பேடிஎம் நிறுவனம் இந்த 7500 ரூபாய் மதிப்பிலான சலுகையை 2019 ஆகஸ்ட் 1-ம் தேதி வரைவழங்குகிறது.
தற்சமயம் சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.84.70 ஆகவும் பின்பு டீசல் விலை லிட்டருக்கு ரூ.77.11-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பேடிஎம், மொபிக்விக், போன்பே போன்ற செயலிகளை பயன்படுத்தி பெட்ரோல், டீசல்
நிரப்பும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த கேஷ்பேக் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மும்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.5.50 வரை பெட்ரோல் குறைக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. பின்பு சென்னையில் மட்டும் ரூ.2.50 மட்டும் பெட்ரோல் டீசல் விலைகுறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பேடிஎம்:
பேடிஎம் நிறுவனம் சார்பில் ரூ.7500 மதிப்பிலான சலுகையை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பேடிஎம் வாலெட்
பயன்படுத்தி பெட்ரோல் நிலையங்கயில் குறைந்தப்பட்டசம் ரூ.50 என்ற கட்டணத்தை பேடிஎம்.காம் இணையதளத்தில்
செலுத்த வேண்டும்.

ஒவ்வொரு 10 பரிவர்த்தனைக்கு பிறகு
குறிப்பாக பேடிஎம் நிறுவனம் இந்த 7500 ரூபாய் மதிப்பிலான சலுகையை 2019 ஆகஸ்ட் 1-ம் தேதி வரை வழங்குகிறது. பின்பு ஒவ்வொரு 10 பரிவர்த்தனைக்கு பிறகு தான் பேடிஎம் வழங்கும் சலுகையை பெற முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மொபிக்விக்:
மொபிக்விக் செயலியைப் பயன்படுத்தி பெட்ரோல், டீசல் நிரப்பும் வாடிக்கையாளர்களுக்கு 25சதவீதம் வரை சூப்பர் கேஷ்பேக் சலுகையை வழங்குவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பிட்ட பெட்ரோல்
நிலையங்களில் மட்டுமே இந்த செயலியைப் பயன்படுத்தி பெட்ரோல் டீசல் நிரப்ப முடியும், அதுவும் இந்நிறுவனம் டிசம்பர் 31, 2018 வரை மட்டுமே சலுகையை அறிவித்துள்ளது.

போன்பே:
போன்பே செயலியைப் பயன்படுத்தி ரூ.100 மற்றும் அதற்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளில் ரூ.40 வரை கேஷ்பேக் பெற முடியும்
என்று தெரிவிக்க்ப்பட்டுள்ளது. பின்பு இந்த நிறுவனமும் டிசம்பர் 31, 2018 வரையில் தான் சலுகையை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications