அழகான செல்பீ எடுக்கனுமா, இந்த ஆப்ஸ் பயன்படுத்துங்க.!

Written By:

தகவல் பரிமாற்றத்தைக் கடந்து அழகான செல்பீ எடுக்கவே பெரும்பாலானோரும் புதிய ஸ்மார்ட்போன்களை வாங்குகின்றனர். ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் எனச் சமூக வலைத்தளங்களின் வரவு மற்றும் ஸ்மார்ட்போன்களின் கேமரா தரம் உள்ளிட்டவை செல்பீ மீதான மோகம் அதிகரிக்கச் செய்திருக்கின்றன.

ஸ்மார்ட்போன் கேமரா எப்படியிருந்தாலும் அதனை எப்படிப் பயன்படுத்திகறோம் என்பதைப் பொறுத்தே புகைப்படங்கள் அமையும். இங்கு அழகான செல்பீ எடுக்கச் செய்யும் சில பயனுள்ள ஆப்ஸ் எவை என்பதைப் பார்ப்போமா.??

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
பிரிஸ்மா (Prisma)

பிரிஸ்மா (Prisma)

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் இந்தச் செயலி கிடைக்கின்றது. சமீபத்தில் வெளியான ஆப் என்றாலும் அதிகப் பிரபலாகி விட்டது. புகைப்படங்களை அழகிய ஓவியம் போன்று மாற்றும் இந்தச் செயலியில் மொத்தம் 36 ஃபில்ட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஃபிரன்ட்பேக் (Frontback)

ஃபிரன்ட்பேக் (Frontback)

சில சமயம் செல்பீ எடுக்கும் போது முன்பக்கம் இருக்கும் லேண்ட்ஸ்கேப்களை மறந்திடுவோம். இந்த ஆப் மூலம் இதற்குச் சாத்தியமாகிடும். இந்த ஆப் மூலம் செல்பீ எடுக்கும் போது பிரைமரி கேமரா மற்றும் முன்பக்க கேமராவும் படம் எடுத்து விடும். இதனால் முன்பக்கம் செல்பீயும், பின்பக்கம் இருக்கும் அழகிய லேண்ட்ஸ்கேப் புகைப்படமும் இருக்கும். இந்த ஆப் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் கிடைக்கின்றது.

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

யுகேம் (YouCam)

யுகேம் (YouCam)

யுகேம் ஆப் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் கிடைக்கின்றது. அழகான செல்பீ எடுப்பது ஒருவித வரம் ஆகும். அப்படி ஏதோ ஒரு செல்பீ அழகாகக் கிடைக்கும் போது அதன் பேக்கிரவுண்டு மோசமாக இருக்கும். இந்தக் கவலையைப் போக்கும் ஆப் தான் யுகேம். இந்தச் செயலியில் சில கிளிக்களைச் செய்து செல்பீயின் பேக்கிரவுண்டு அம்சங்களை நீக்கி விட முடியும்.

கேண்டி கேமரா (Candy Camera)

கேண்டி கேமரா (Candy Camera)

இந்த ஆப் செல்பீக்களை அழகாக்கும் 100க்கும் அதிகமான பிக்சர் எஃபெக்ட் மற்றும் ஃபில்ட்டர்களைக் கொண்டுள்ளது. அனைத்து ஆண்ட்ராய்டு பதிப்புகளிலும் வேலை செய்யும் இந்த ஆப் குறைந்தளவு ரேம் பயன்படுத்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பியூட்டி கேம் (BeautyCam)

பியூட்டி கேம் (BeautyCam)

அழகான செல்பீ எடுக்கும் இந்தக் கேமரா ஆப், பல்வேறு எஃபெக்ட் மற்றும் ஃபில்ட்டர்களையும் கொண்டுள்ளது. மேலும் செல்பீக்களை எடிட் செய்வும் ஆப்ஷன்களையும் கொண்டுள்ளது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
Perfect Apps to capture beautiful apps
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot