Home
Apps

மிகவும் எதிர்பார்த்த பேடிஎம் பிஸ்னஸ் செயலி, தமிழ்நாட்டில் அறிமுகம்.!

பேடிஎம் பிஸ்னஸ் செயலி பொறுத்தவரை அனைத்து வணிகர்களுக்கும் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதைத் தொடங்குவதற்கான ஒரு பயன்பாடாகும்.

By Prakash S

வியாபாரம் செய்யும் மக்கள் மிகவும் அதிகம் எதிர்பார்த்த பிஸ்னஸ் செயலி ஒன்றை தற்சமயம் அறிமுகப்படுத்தியுள்ளது பேடிஎம் , இதற்கு முன்பு வாட்ஸ்ஆப் நிறுவனம் பிஸ்னஸ் செயலி அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த வாட்ஸ்ஆப் பிஸ்னஸ் செயலி முக்கிய அம்சம் என்னவென்றால் வியாபாரம் செய்வோர் தங்களது வாடிக்கையாளர்களிடம் தகவல் பரிமாற்றம் செய்ய ஏதுவாக வெளியிடப்பட்டுள்ளது.

மிகவும் எதிர்பார்த்த பேடிஎம் பிஸ்னஸ் செயலி, தமிழ்நாட்டில் அறிமுகம்.!

அதேபோன்று தமிழ்நாட்டில் உள்ள வணிகர்களுக்கு பயன்படும் வகையில் பேடிஎம் நிறுவனம் பேடிஎம் பிஸ்னஸ் செயலியை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் பயன்பாடு பல்வேறு மக்களுக்கு உபயோகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிளே ஸ்டோரில் கிடைக்கும்

பிளே ஸ்டோரில் கிடைக்கும்

பேடிஎம் பிஸ்னஸ் செயலி பொறுத்தவரை ஆண்ட்ராய்டு பிளே ஸ்டோரில் கிடைக்கும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு ஸ்மார்ட்போனில் பயன்படுத்துவதற்கு மிக எளிமையாக இருக்கும் இந்த பேடிஎம் பிஸ்னஸ் செயலி.

டிஜிட்டல் முறையில்

டிஜிட்டல் முறையில்

பேடிஎம் பிஸ்னஸ் செயலி பொறுத்தவரை அனைத்து வணிகர்களுக்கும் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதைத் தொடங்குவதற்கான ஒரு பயன்பாடாகும். மேலும் உறுதிப்படுத்தல் எஸ்எம்எஸ் அல்லது ஈ-மெயில் மூலம் காத்திருக்க வேண்டிய அவசியமின்றி அவற்றின் பரிமாற்றங்களை உடனடியாக பார்வையிட முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வணிகர்களுக்கு

வணிகர்களுக்கு

ஒவ்வொரு பரிமாற்றத்தின் விவரங்களையும் சரிபார்த்து, தினசரி அல்லது வாரந்தோறும் முக்கிய தகவல்களை பதிவிறக்கம் செய்ய முடியும். மேலும் வங்கி சார்ந்த முக்கிய தகவல்களைப் பெற வணிகர்களுக்கு இவற்றில் வசதி செய்துதரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வணிக சமூகத்திற்கு

வணிக சமூகத்திற்கு

பேடிஎம் என்பது நாட்டின் பரந்த மற்றும் மாறுபட்ட வணிக சமூகத்திற்கு பணம் செலுத்துவதை எளிதாக்கும் மற்றொரு நடவடிக்கையாகும், மேலும் பங்குதாரர் மற்றும் வர்த்தகர்களுக்கு வியாபாரத்தை நிர்வகிப்பதோடு அவர்களுக்கு மன அமைதி அளிப்பதற்கும் இது உதவும்.

 மூன்று லட்சம்

மூன்று லட்சம்

புதிய பேடிஎம் பிஸ்னஸ் செயலி பயன்பாடு பேடிஎம்-இன் மூன்று லட்சம் வலுவான வணிகத் தளத்தை உடனடியாக செலுத்துவதன் மூலம், கடந்த கால சேகரிப்புகள் மற்றும் வங்கி கணக்குகளுக்கு இடமாற்றங்களைத் திரட்டுவதற்கு அனுமதிக்கிறது.

10 பிராந்திய மொழி

10 பிராந்திய மொழி

இந்த புதிய பேடிஎம் பிஸ்னஸ் செயலி 10 பிராந்திய மொழிகளில் கிடைப்பதாகவும் தகவல் வெளிவந்தள்ளது, மேலும் கண்டிப்பாக அனைத்து மக்களுக்கும் பயனுள்ள வகையில் இருக்கும்.

Best Mobiles in India

English summary
Paytm unveils Paytm for Business mobile app for Tamil Nadu ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X