பேடிஎம் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 200 மில்லியன்.!
பணமில்லா பரிவர்த்தனை மேற்கொள்ள பயன்படுத்தப்படும் செயலியான பேடிஎம் ஆனது 200 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளது.
சென்ற ஆண்டின் இறுதியில் மத்திய அரசானது பெரு மதிப்புடைய ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பினை வெளியிட்டது. அந்த அறிவிப்புனுக்கு பின் சமூகத்தின் ஏழை,எளிய,விளிம்பு நிலை மக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகினர்.
அத்தகைய சூழலில் மக்களுக்கு பணமில்லா பரிவர்த்தனை மேற்கொள்ள பெரும் உதவியாக இருந்தது பேடிஎம் செயலியாகும்.
அச்செயலியானது,தற்போது தாங்கள் 200 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்டிருப்பதாக கூறியிருக்கிறது.அதுகுறித்த தகவல்கள் கீழே. .

பேடிஎம்:
கடந்த 2010 ஆம் ஆண்டு இணைய வழி பணப் பரிவர்த்தனைக்காக விஜய் சேகர் சர்மா என்பவரால் துவங்கப்பட்ட தனியார் நிறுவனமாகும்.இது துவக்கத்திலிருந்தே இணைய வழி பணபரிவர்த்தனைக்காக பயன்படுத்தப்பட்டு வந்தாலும் மிகுந்த பிரபலமடைந்தது பெரு மதிப்புடைய ரூபாய் நோட்டுக்கள் செல்லதென்ற அறிவிப்பினுக்கு பின்புதான்.இதன் வழியே மொபைல் ரீசார்ஜ் உள்ளிட்ட பல இணைய வழி பரிவர்த்தனைகளை மேற்கொள்ள இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.

பெருமதிப்புடைய ரூபாய் நோட்டுகள்:
சென்ற ஆண்டின் இறுதிப் பகுதியில் மத்திய அரசானது கள்ள நோட்டுகள் ஒழிப்பு உள்ளிட்ட சில காரணங்களுக்காக பெருமதிப்படைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்கிற அறிவிப்பினை வெளியிட்டது அதன் தொடர்ச்சியாக மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளை பூர்த்திச் செய்துகொள்ளவும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.மனித வாழ்வின் இன்றியமையாத தேவைகளான உணவு,மருத்துவம்,கல்வி உள்ளிட்டவைகளுக்காக மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.

இணைய வழி பணப்பரிவர்த்தனை:
பெறுமதிப்புடைய ரூபாய் நோட்டுகள் செல்லதென்ற அறிவிப்புனுக்கு பின் மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள இணையத்தின் வழியே பணமில்லா பரிவர்த்தனை மேற்கொள்ளும் செயலிகளை பயன்படுத்த துவங்கினர்.

200 மில்லியன் வாடிக்கையாளர்கள்:
பெறுமதிப்புடைய ரூபாய் நோட்டுகள் செயலிழப்பு என்கிற அறிவிப்பினுக்கு பின் மத்திய அரசானது பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதத்தில் பீம் ஆப் உள்ளிட்ட செயலிகளை அறிமுகப்படுத்தியது.அதன் வழியாகவும் மக்களால் பணமில்லா பரிவர்த்தனையானது மேற்கொள்ளப்பட்டது.அவற்றில் பேடிஎம் ஆனது நாள் ஒன்றினுக்கு 700,000 வேலட்கள் வரையிலும் பயன்படுத்தப்படுவதாகவும் அதன் நிறுவனர் தமது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

500 மில்லியன் இலக்கு:
2020 ஆம் ஆண்டின் போது தங்கள் நிறுவனம் 500 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டிருக்குமெனவும்,இன்னும் மூன்று ஆண்டுகளில் 300 மில்லியன் வாடிக்கையாளர்களைப் பெறுவது தங்கள் இலக்காக இருக்குமெனவும் தமது ட்விட்டர் பக்கத்தில் அதன் நிறுவனர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க
இன்டர்நெட் வசதி இல்லாமல் 'பேடிஎம்' ஆப் பயன்படுத்துவது எப்படி.?


Click it and Unblock the Notifications