பேடிஎம் வங்கியின் வழக்கமான டெபிட் கார்டை பெறும் வழிமுறைகள்

|

இந்தியாவில் பண மதிப்பிழப்பு நடைமுறைக்கு வந்த பிறகு, அதிகமாக பயன்படுத்தும் வாலெட்டாக பேடிஎம் பிரபலமடைந்துவிட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பேடிஎம் வங்கி அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி, கட்டணமற்ற ஆன்லைன் பணபரிமாற்றங்கள், குறைந்தபட்ச மீத தொகை தேவையில்லை மற்றும் இலவச விரிச்சுவல் டெபிட் கார்டு ஆகியவை அளிக்கப்படுகிறது.

பேடிஎம் வங்கியின் வழக்கமான டெபிட் கார்டை பெறும் வழிமுறைகள்

பேடிஎம் பேமெண்டு வங்கி என்று அழைக்கப்படும் இதில் சேமிப்பு மற்றும் நிலுவை என்ற இரு வகையிலான கணக்குகளை வைத்து கொள்ள முடியும். இதனுடன் அளிக்கப்படும் விரிச்சுவல் டெபிட் கார்டு மூலம் வேகமான மற்றும் சுலபமான பணப்பரிமாற்றங்களைச் செய்ய முடிகிறது.

கணக்கு வைத்துள்ளவரின் பெயர், 16-இலக்க எண், காலாவதியாகும் தேதி மற்றும் சிவிவி எண் ஆகியவற்றை கொண்ட வழக்கமான கிரிடிட் கார்டை போல, இந்த விரிச்சுவல் டெபிட் கார்டை பயன்படுத்த முடியும். ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் போது கட்டணத்தைச் செலுத்தவும் இந்தக் கார்ட்டை பயனர்கள் பயன்படுத்தலாம்.

இந்நிலையில் தற்போது, பயனர்களின் தேவைக்கேற்ப சாதாரண டெபிட் கார்டை அளிக்க பேடிஎம் முன்வந்துள்ளது. கீழ்க்காணும் படிகளின் மூலம் அதை நீங்கள் பெற்று கொள்ள முடியும்.

How To Increase the Speed of your Laptop (TAMIL)

படி 1: உங்கள் ஸ்மார்ட்போனில் பேடிஎம் அப்ளிகேஷனைத் திறந்து, கீழே வலது முனையில் உள்ள பேங்க் என்ற ஐகானைத் தட்டவும்.

படி 2: திறக்கப்பட்ட பக்கத்தில், விரிச்சுவல் டெபிட் கார்டு, மீதமுள்ள தொகை, சேமிப்பு கணக்கு விவரங்கள் மற்றம் பலவற்றை காண முடியும். இப்போது டெபிட் & ஏடிசி கார்டு தேர்வு என்பதை காணும் வரை கீழே உருட்டவும்.

படி 3: அதை தட்டியவுடன், உங்கள் விரிச்சுவல் டெபிட் கார்டை காணலாம். இதில் கார்டு செயல்பாட்டை நிறுத்துதல் மற்றும் "கார்டுக்கு விண்ணப்பித்தல்" ஆகிய தேர்வுகள் காணப்படும்.

படி 4: இப்போது 'கார்டுக்கு விண்ணப்பித்தலை' தட்டவும்.

படி 5: இது மற்றொரு பக்கத்திற்கு உங்களை அழைத்து செல்லும். அங்கு கார்டு விவரங்கள் மற்றும் அதை பட்டுவாடா செய்ய வேண்டிய முகவரி விவரங்கள் காட்டப்படும். முகவரி மாற்ற வேண்டியிருந்தால், 'புதியதைச் சேர்' தேர்வைத் தட்டி மாற்றம் செய்யலாம்.

படி 6: அங்கு அளிக்கப்பட்டுள்ள எல்லா தகவல்களும் சரியாக இருக்கும் பட்சத்தில், ரூ.120 கட்டணம் செலுத்த சம்மதிக்கிறேன்' என்பதைத் தட்டவும்.

படி 7: அப்படி செய்தவுடன், அடுத்த சில நாட்களில் உங்கள் முகவரிக்கு டெபிட் கார்டு வந்து சேரும்.

படி 8: மேற்கூறிய இந்த டெபிட் கார்டை பயன்படுத்தி, மும்பை, புது டெல்லி, சென்னை, பெங்களூரு, கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் ஆகிய பெருநகரங்களில் உள்ள மற்ற எல்லா ஏடிஎம் வங்கிகளிலும் பணத்தை எடுக்க முடியும். முதல் முன்று பணம் எடுப்புக்கு கட்டணம் எதுவும் வசூலிப்பது இல்லை.

அதற்கு பிறகு நடைபெறும் ஒவ்வொரு பண பரிமாற்றத்திற்கும் ரூ.20 வீதம் பயனரிடம் கட்டணம் வசூலிக்கப்படும். மினி ஸ்டேட்மெண்ட், மீத தொகையை பரிசோதித்தல் அல்லது பின் எண் மாற்றுதல் போன்ற செயல்பாடுகளுக்கு ரூ.5 வீதம் வசூலிக்கப்படும்.

ஐடியாவின் ரூ.398/- ப்ரீபெய்ட் திட்டத்தில் திருத்தம்.!ஐடியாவின் ரூ.398/- ப்ரீபெய்ட் திட்டத்தில் திருத்தம்.!

Best Mobiles in India

Read more about:
English summary
Paytm has launched Payments bank with zero charges on online transactions, no minimum balance requirement and free virtual debit card. Here's how you can get a physical debit card

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X