பேடிஎம் மினி ஆப் ஸ்டோர் அறிமுகம்.! ஆனால் இது சற்று வித்தியாசமானது.!

|

பேடிஎம் நிறுவனம் தொடர்ந்து புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது, குறிப்பாக இந்நிறுவனம் இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. இந்நிலையில் பேடிஎம் நிறுவனம் அதன் மினி ஆப் ஸ்டோரை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் தொழில்நுட்ப தொழில்முனைவோருக்கான தேசிய ஆப் ஸ்டோர் அணிவகுத்த சில நாட்களில்
பேடிஎம் இந்த அறிமுகத்தை நிகழத்தி உள்ளது.

பேடிஎம்

இந்த பேடிஎம் மினி ஆப் ஸ்டோர் பற்றி கூறவேண்டும் என்றால், சற்று வித்தயாசமானது, சொந்த ஆப்கள் டெவலப்பர்கள் டூல்களைக் கொடுப்பதற்கு பதிலாக, பேடிஎம் ப்ரோக்ரஸிவ் வெப் ஆப்களுக்கான (PWA) இணைப்புகளை ஹோஸ்ட் செய்கிறது, சுருக்கமாக கூறவேண்டும் என்றால் எந்த நிறுவலும் தேவையில்லை வெப் ப்ரவுஸர் வழியாக இயங்கக்கூடிய லைட் ஆப்களை பட்டியலிட்டுள்ளதுபேடிஎம்.

 HTML மற்றும் ஜாவாஸ்கிரிப்டைப் பயன்படுத்தி

ஆனால் தற்சமயம் பேடிஎம் மினி ஆப் ஸ்டோரில் ஒரு சில ஆப்கள் மட்டுமே பட்டியலிடப்பட்டுள்ளது, வரும் வாரங்களில் இதுபோன்ற 300சேவைகளை பேடிஎம் திட்டமிட்டுள்ளது. மேலும் வெளிவந்த பேஎடிம்-ன் செய்திகுறிப்பில் மினி ஆப் ஸ்டோர் இந்தியாவில் உள்ள சிறிய டெவலப்பர்கள் மற்றும் வணிகங்களுக்கு HTML மற்றும் ஜாவாஸ்கிரிப்டைப் பயன்படுத்தி குறைந்த விலை மற்றும் எளிதில் உருவாக்க வல்ல ஆப்களை அமைப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

50 கிராம் பொங்கல் ரூ.80, 8 மாதம் வச்சு சாப்பிடலாம்: ரயில் பயணி வெளியிட்ட ஆவேச வீடியோ!50 கிராம் பொங்கல் ரூ.80, 8 மாதம் வச்சு சாப்பிடலாம்: ரயில் பயணி வெளியிட்ட ஆவேச வீடியோ!

பேடிஎம் பயன்பாட்டினுள் ஒரு

குறிப்பாக ஆப்கள் பேடிஎம் பயன்பாட்டினுள் ஒரு விண்டோவிற்குள் அடைக்கலம் பெற்றுள்ளன, டெவலப்பர்களுக்கு Paytm Wallet, Paytm Payments Bank, மற்றும் UPI உள்ளிட்ட இலவச கட்டண வழிகளையும் Paytm வழங்கும். இருப்பினும், கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி பணம் செலுத்துவதற்கு இரண்டு சதவீதம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 பீட்டா சோதனைக் கட்டத்தில் இருந்தது

மேலும் பயனர்களுடன் சிறப்பாக ஈடுபட டெவல்பர்களுக்கான பகுப்பாய்வு, பேமன்ட்ஸ் சேகரிப்பு மற்றும் பல்வேறு சந்தைப்படுத்தல் டூல்களுக்கான டாஷ்போர்டையும் பேடிஎம் வழங்கியுள்ளது. அதாவது பேடிஎம் நிறுவனத்தின் இந்த மினி ஆப் ஸ்டோர் ஆனது சில காலமாக அதன் பீட்டா சோதனைக் கட்டத்தில் இருந்தது, அதில் AQI Monitor, EMI Calculator, MojoPizza, Horoscope, Speedtest மற்றும் Unit Converter போன்ற சில ஆப்கள் இருந்தன.

பாஸ்வோர்டு அமைக்கும் போது மனதில் வைத்துக்கொள்ள வேண்டிய 10 முக்கிய விஷயங்கள்!பாஸ்வோர்டு அமைக்கும் போது மனதில் வைத்துக்கொள்ள வேண்டிய 10 முக்கிய விஷயங்கள்!

இந்த மினி ஆப் ஸ்டோரை அணுக

குறிப்பாக இந்த மினி ஆப் ஸ்டோரை அணுக உங்கள் பேடிஎம் ஆப்பை திறக்கவும் ஹோம் பேஜில் உள்ள Show More என்பதை கிளிக் செய்ய பாப்-அப் மெனு ஒன்று தோன்றும், அதில் மினி ஆப் ஸ்டோர்-ஐ பார்க்க முடியம். பின்பு இது பதிவிறக்கங்கள் அல்லது நிறுவல்கள் இல்லாமல், குறிப்பிட்ட ஆப்களை ஆராயவும், பயன்படுத்தவும், பணம் செலுத்தவும் பயனர்களுக்கு நேரடி அணுகலை வழங்கும் ஒரு போர்டல் என்று தெரிவிக்கப்பட்ள்ளது.

Best Mobiles in India

English summary
Paytm Mini App Store Launched and More Details: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X