கூகுள் ப்ளே ஸ்டோரில் சிறந்த செயலி என்ற பெருமையை பெற்ற பே-டிம் மால்
கூகுள் ப்ளே ஸ்டோரில் உள்ள செயலிகளில் இந்தியாவை பொருத்தவரையில் இந்த 2017ஆம் ஆண்டின் சிறந்த செயலியாக பே-டிஎம் மால் என்ற செயலி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் பே-டிஎம் என்ற ஆன்லைன் மார்க்கெட்டிங் நிறுவனம் இந்த பே-டிஎம் மால் என்ற செயலியை அறிமுகம் செய்தது.
சமீபத்தில் பே-டிஎம் மால் என்ற செயலி தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய சலுகையை அறிவித்துள்ளது. இதன்படி இந்த செயலியின் வழியாக ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு அந்த ஸ்மார்ட்போனின் பாதுகாப்பு திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.
இந்த திட்டத்தின்படி ஒரு வருட காலத்திற்கு ஸ்மார்ட்போன் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அதற்குரிய நிவாரணம் பெற்று கொள்ளலாம். அதாவது ஸ்க்ரீன் பாதிப்பு, தண்ணீரால் பாதிப்பு அல்லதி திருடு போகுதல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு புதிய மொபைல் போனை வாங்கி கொள்ளலாம். இதற்கு அந்த வாடிக்கையாளர் போனின் விலையில் ஐந்து சதவிகிதம் மட்டுமே பணம் செலுத்தினால் போதுமானது
இந்த சலுகை தற்போதைக்கு ஆப்பிள், சியாமி, மோட்டோரோலா, விவோ, ஒப்போ உள்பட பல்வேறு மாடல்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த சலுகை நீங்கள் பெற வாடிக்கையாளர்கள் ஒரு பிரத்யேகமான இலவச எண்ணை அழைக்க வேண்டும். உடனடியாக பழுதான சாதனம் தங்கள் வீட்டிலிருந்து எடுத்து கொள்ளப்படும் அல்லது வாடிக்கையாளர்கள் அருகிலுள்ள பழுதுபார்ப்பு நிலையத்திற்கு அனுப்பப்படுவார்கள்.
மேலும் இந்த பே-டிஎம் மால் வாடிககியாளர்களின் ஆன்லைன் ஷாப்பிங் அனுபவத்தை வழங்குவதற்காக நாடு முழுவதும் 17 க்கும் மேற்பட்ட மையங்களை கொண்டுள்ளன.
மேலும் பே-டிஎம் மால் செயலி தங்களது வர்த்தகத்தை விரிவுபடுத்தும் நோக்கில் தங்கள் பார்ட்னர்களின் பொருட்களையும் வாங்க உதவுகிறது. உதாரணமாக ஆப்பிள், சாம்சங் , எல்ஜி, ஒப்போ, சோனி, HP, லெனோவா, ஜெபிஎல், பிலிப்ஸ், பூமா, அலென் சொலி, லீ, பெபி, வான் ஹூசன், வுட்லாண்ட் , கேட்வாக், ஸ்கெட்சர்ஸ், லீவீஸ், வெர்ரோ மோடா, ரெட் டேப், கிராக்ஸ் மற்றும் ஃபாசில் போன்றவற்றின் தயாரிப்புகளையும் ஆன்லைனில் பெற்று கொள்ளலாம்.
இந்தியாவில் உள்ள 17000 பின்கோடு நகரங்களுக்கும் துரித முறையில் டெலிவரி செய்யும் சேவையை கொண்ட இந்த நிறுவனம் இன்னும் அதிக நகரங்களை மிக விரைவில் இணைக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








