திடீரென ரூ.2100 வரை கேஷ்பேக் அறிவித்த Paytm! இதை மட்டும் பண்ணுங்க போதும்!

|

Paytm தனது பயனர்களுக்கு புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது. Paytm அறிமுகம் செய்துள்ள இந்த புதிய சேவையின்படி Paytm பயனர்கள் செய்யும் அனைத்து QR பரிவர்த்தனைக்கு ரூ.2,100 வரையிலான கேஷ்பேக் சலுகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

வாடிக்கையாளர்களை ஈர்க்கும் Paytm

வாடிக்கையாளர்களை ஈர்க்கும் Paytm

இந்த புதிய திட்டம், டிஜிட்டல் பேமெண்ட் நிறுவனங்களுக்கு இடையில் நடக்கும் போட்டியைச் சமாளித்து, அதிக வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் ஈர்க்க திட்டமிட்டு Paytm இந்த திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது என்று தெரிகிறது. இருப்பினும், இந்த கேஷ்பேக் சலுகையை Paytm பயனர்கள் பெறுவதற்கு சில தகுதி நிபந்தனைகளையும் Paytm விதித்துள்ளது.

QR சேவையின்படி பரிவர்த்தனை

QR சேவையின்படி பரிவர்த்தனை

Paytm நிறுவனத்தின் அறிவிப்புப்படி, பயனர்கள் Paytm செயலியில் உள்ள QR சேவையைப் பயன்படுத்தி தங்களின் பரிவர்த்தனைகளைச் செய்ய வேண்டும். QR சேவையின்படி செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே, இந்த ரூ.2100 கேஷ்பேக் சலுகை வழங்கப்படும் என்று Paytm நிறுவனம் தெளிவாகத் தனது நிபந்தனையில் தெரிவித்துள்ளது.

அரசாங்க வலைத்தளத்திலிருந்து மன்மோகன் சிங்கின் உள்நாட்டு வளர்ச்சி அறிக்கை நீக்கம்!அரசாங்க வலைத்தளத்திலிருந்து மன்மோகன் சிங்கின் உள்நாட்டு வளர்ச்சி அறிக்கை நீக்கம்!

சிறப்பு மற்றும் பாதுகாப்பு கருதி இந்த திட்டம் அறிமுகம்

சிறப்பு மற்றும் பாதுகாப்பு கருதி இந்த திட்டம் அறிமுகம்

UPI- அடிப்படையிலான பயன்பாட்டின் உதவியுடன் உருவாக்கப்பட்ட QR குறியீடுகளை, QR குறியீடு ஸ்கேனர் கொண்டு ஸ்கேன் செய்வதனால் பயனர்களை எளிதாக தங்களின் பணப் பரிவர்த்தனையைச் செய்துகொள்ள முடியும். குறிப்பாக இந்த முறையில் எந்த குளறுபடியும் ஏற்படாது என்பது சிறப்பு மற்றும் பாதுகாப்பு.

எஸ்400 விவகாரத்தில் தடால் அடி இந்தியா:அமெரிக்கா ஷாக்-பாக்.அலறல்.!எஸ்400 விவகாரத்தில் தடால் அடி இந்தியா:அமெரிக்கா ஷாக்-பாக்.அலறல்.!

வரம்பற்ற பணப் பரிவர்த்தனை

வரம்பற்ற பணப் பரிவர்த்தனை

திட்டத்தின் ஒரு பகுதியாக, பயனர்களுக்கு வாலட் KYC தேவையில்லை என்று Paytm தெளிவுபடுத்தியுள்ளது. அதற்குப் பதிலாக, பயனர்கள் UPI கட்டமைப்பைப் பயன்படுத்தி QR குறியீடு அடிப்படையிலான சேவையின் மூலம் வரம்பற்ற பணப் பரிவர்த்தனைகளைச் செய்துகொள்ளலாம் என்று தெளிவாக Paytm தெரிவித்துள்ளது.

சியோமி பயனர்களுக்கு ஒரு குட் நியூஸ்: ரெடியா இருங்க: கிடைக்கப்போகிறது புதிய வசதி!சியோமி பயனர்களுக்கு ஒரு குட் நியூஸ்: ரெடியா இருங்க: கிடைக்கப்போகிறது புதிய வசதி!

நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்

நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்

Paytm இன் அறிக்கையின்படி, பயனர்கள் Paytm பயன்பாட்டைப் பயன்படுத்தி ஷாப்பிங் மால்கள், உணவகங்கள், அபார்ட்மென்ட் சேவைகள், பள்ளி கட்டணம் அல்லது வரவேற்புரைகளில் பணம் செலுத்தலாம். நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் கேஷ்பேக் வேண்டுமென்றால் QR முறைப்படி உங்கள் கட்டணத்தை செலுத்துங்கள்.

டிவிட்டர் சிஇஒ ஜேக் டோர்சியின் கணக்கை ஹேக் செய்த மர்மநபர்கள்.!டிவிட்டர் சிஇஒ ஜேக் டோர்சியின் கணக்கை ஹேக் செய்த மர்மநபர்கள்.!

இதை செய்தால் நிச்சயம் கேஷ்பேக் கிடைக்காது

இதை செய்தால் நிச்சயம் கேஷ்பேக் கிடைக்காது

QR குறியீடு அடிப்படையிலான பரிவர்த்தனைகளின் பணப்பரிமாற்றத்தின் அளவு, பணம் செலவழிக்கும் அளவு மற்றும் வழிமுறையைப் பொறுத்து பயனர்களுக்கு ரூ.2100 வரையிலான கேஷ்பேக் சலுகை வழங்கப்படும். நிச்சயமாக மொபைல் எண்களைக் கொண்டு செய்யப்படும் எந்த கட்டண முறைக்கும் எந்த கேஷ்பேக் தொகையையும் வழங்கப்படமாட்டாது என்று Paytm தெளிவாக தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
Paytms Is Offering Up To Rs 2,100 Cashback To Its Users But There Is A Catch : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X