'திரும்பி வந்துட்டேன்னு சொல்லு' என்று மாஸாக என்ட்ரி கொடுத்த Paytm!

|

கூகிள் பிளே ஸ்டோரில் இருந்து நேற்று Paytm ஆப் காணாமல் போய்விட்டது என்று வலைத்தளம் முழுக்க ஒரே பரபரப்பு, என் Paytm கணக்கிலிருந்த பணம் போச்சே என்று ஒரு பக்கம் பயனர்களின் புலம்பல் என்று நேற்று Paytm பற்றிய செய்திகள் தான் அதிகம்.

Paytm பயன்பாடு மீண்டும் பயன்பாட்டிற்கு வருமா?

Paytm பயன்பாடு மீண்டும் பயன்பாட்டிற்கு வருமா?

கூகிள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட Paytm பயன்பாடு மீண்டும் பயன்பாட்டிற்கு வருமா? வராதா? என்ற சந்தேகம் எழுந்தது. அதற்கு இப்போ பேட்டியம் நிறுவனம் பதிலளித்துள்ளது. இந்தியாவில் கூகிள் பே (Google Pay) நிறுவனத்திற்கு போட்டியாக Paytm நிறுவனம் இந்தியாவில் மிகப்பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Paytm பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம்

Paytm பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம்

டிஜிட்டல் பேமெண்ட் சேவையில் தனக்கென்று ஒரு தனி இடத்தை Paytm நிறுவனம் பிடித்துள்ளது. ஆனால், கூகிள் ப்ளே ஸ்டோர் கொள்கை விதிகளை பேட்டியம் நிறுவனம் மீறியதாக கூறி, நேற்று கூகிள் நிறுவனம் Paytm செயலியை பிளே ஸ்டோரில் இருந்து எந்தவொரு அறிவிப்பும் இல்லாமல் நீக்கம் செய்தது.

போனில் இருந்த 400 ஆபாச படங்கள்.. மனைவி கொடுத்த புகார்! கைது செய்யப்பட்ட வங்கி காசாளர்!

Paytm வெளியிட்ட பதில்

Paytm வெளியிட்ட பதில்

இதனால் பயனர்களின் கேள்வி அதிகரித்தது, இதற்கு Paytm நிறுவனம் அதன் செயலி விரைவில் கூகிள் பிளே ஸ்டோரில் மீண்டும் கொண்டு வரப்படும் எனவும், அதில் உள்ள வாடிக்கையாளர்களின் பணம் பாதுகாப்பாக இருக்கிறது என்றும், வாடிக்கையாளர்கள் அதனைத் தொடர்ந்து விரைவில் பயன்படுத்தலாம் எனவும் தெரிவித்திருந்தது. இப்பொழுது நிறுவனம் அதன் டிவிட்டர் பக்கத்தில் உறுதியான தகவலை வெளியிட்டுள்ளது.

திரும்பி வந்துட்டேன்னு சொல்லு

திரும்பி வந்துட்டேன்னு சொல்லு

"we're back!" என்று தனது டிவிட்டர் பக்கத்தில் Paytm ட்வீட் செய்துள்ளது. கொள்கை விதிகளை மீறி வருவதாகக் கூறி, கூகிள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட Paytm ஆப் நேற்று இரவு முதல் மீண்டும் கூகிள் பிளே ஸ்டோரில் நிறுவப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து Paytm நிறுவனம் சொன்னபடி மீண்டும் பயன்பாட்டிற்கு மாஸாக ரீ-என்ட்ரி கொடுத்துள்ளது.

கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளம்பரங்களை ஒளிபரப்புவது தொடர்பாக, பிரபலமான ஸ்ட்ரீமிங் சேவையான டிஸ்னி+ஹாட்ஸ்டார் உள்ளிட்ட பல செயலிகளுக்கும் கூகிள் எச்சரிக்கை செய்தியை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆன்லைன் சூதாட்டங்களை அனுமதிக்கும் ஆப்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூகிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Paytm App Again Restored Back On Google Play Store : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X