மிக வேக பணப்பரிமாற்றத்திற்கு கூகுளின் 'பே வித் கூகுள்' புதிய வசதி
'பே வித் கூகுள் வசதி மூலம் தேவையான பொருட்களை வாங்க உங்கள் கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளை முன்கூட்டியே செட் செய்து கொள்ளலாம்
கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய வசதி 'பே வித் கூகுள்' அதாவது கூகுள் மூலம் பணம் அனுப்புவது. இந்த புதிய வசதி இ-வாலட் போலவே இயங்கும் ஆனால் அதே நேரத்தில் மிக விரைவாக செயல்படும். இந்த வசதி மூலம் தேவையான பொருட்களை வாங்க உங்கள் கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளை முன்கூட்டியே செட் செய்து கொள்ளலாம்

நீங்கள் ஒரு பொருளை ஆன்லைனில் வாங்கும்போது அதாவது துணிகள், உணவுகள், திரைப்பட டிக்கெட்டுக்கள் அல்லது ஒருவருக்கு பணம் அனுப்ப ஒவ்வொரு முறையும் நீங்கள் உங்களுடைய கார்டு விபரங்களை பூர்த்தி செய்ய வேண்டிய நிலை இருக்கும். ஆனால் இந்த கூகுளின் புதிய வசதியான 'பே வித் கூகுள்' வசதியில் ஒவ்வொரு முறையும் உங்களுடைய கார்ட் விபரங்களை பூர்த்தி செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
இதுகுறிட்து பாலிபாத் என்பவர் தனது சமூக வலைத்தளத்தில் விளக்கம் அளித்தபோது, 'இந்த புதிய வசதியை வாடிக்கையாளர்கள் செயலி அல்லது ஆன்லைன் அல்லது உறுதி செய்யப்பட்ட டெபிட் அல்லது கிரெடி கார்டுகளை முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளலாம். இதற்கு ஒரு கூகுள் அக்கவுண்ட் அல்லது கூகுள் பிளே அல்லது யூடியூப் அக்கவுண்ட் இருந்தால் போதும்
நீங்கள் 'பே வித் கூகுள்' பயன்படுத்தி பணம் அனுப்ப வேண்டும் என்றால் ஏற்கனவே பதிவு செய்து வைத்திருக்கும் கார்டை தேர்வு செய்து பின்னர் அந்த கார்டின் CVV எண் அல்லது செக்யூரிட்டி எண்ணை மட்டும் பதிவு செய்தால் போதுமானது
இந்த வசதியை கடந்த மே மாதத்தில் இருந்தே கூகுள் ஆய்வாளர்கள் முயற்சி செய்து வந்துள்ளனர். மேலும் இந்த வசதியை வாடிக்கையாளர்கள் பயன்படுத்துவதற்கு எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த 'பே வித் குகுள்' வசதியை கூகுள் அசிஸ்டெண்ட் செயலி மூலம் குரல் கட்டளை வழியே கூட பயன்படுத்தி கொள்ளலாம். இதன் மூலம் குரல் வழியெ பணம் அனுப்ப வேண்டிய நபர், அனுப்ப வேண்டிய தொகையை நீங்கள் உங்களுடைய குரல் மூலம் கூறினாலே போதுமானது. ஒருசில நொடிகளில் சேர வேண்டிய தொகை சேர வேண்டிய நபருக்கு சேர்ந்துவிடும்
ஆனால் இந்த வசதி தற்போது இந்தியாவில் வருகின்றதா? என்பது குறித்த தகவல் இன்னும் உறுதி செய்யவில்லை. சமீபத்தில் கூகுள் அறிமுகம் செய்த தேஜ் கூகுள் வசதி ஏற்கனவே இந்தியாவில் வெற்றிகரமாக செயல்பட்டு கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செயலி UPI பேமெண்ட் மூலம் நன்கு பிரபலமாகி வருவதால் பே வித் கூகுள் எப்போது அறிமுகமாகும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்


Click it and Unblock the Notifications