பாபா ராமதேவ் இன் வாட்ஸ் ஆப்-க்கு எதிரான கிம்போ செயலி: எப்போது அறிமுகம் தெரியுமா?

யோகா குரு பாபா ராம்தேவ் இன் பதஞ்சலி ஆயுர்வேதா ஆகஸ்ட் 27 ஆம் தேதி தனது மெசேஜிங் ஆப் "கிம்போ (Kimbho)" என்ற செயலி முறை சேவையை மீண்டும் துவங்க உள்ளது.

By Sharath
|

யோகா குரு பாபா ராம்தேவ் இன் பதஞ்சலி ஆயுர்வேதா ஆகஸ்ட் 27 ஆம் தேதி தனது மெசேஜிங் ஆப் "கிம்போ (Kimbho)" என்ற செயலி முறை சேவையை மீண்டும் துவங்க உள்ளது.

பாபா ராமதேவ் இன் வாட்ஸ் ஆப்-க்கு எதிரான கிம்போ செயலி.!

பேஸ்புக்கிற்குச் சொந்தமான வாட்ஸ் ஆப் பயன்பாட்டிற்கு எதிராக மே 30 அன்று கிம்போ தொடங்கப்பட்டது, ஆனால் கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் அப்ளிகேஷன் ஸ்டோரிலிருந்து ஒரே நாளில் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பதஞ்சலி இன் அதிகாரப்பூர்வ வெளியீடு பின்னர் நடக்கும் என்று பாபா ராம்தேவ் அறிவித்தார்.

மே 31 ம் தேதி கிம்போ நீக்கப்பட்டது

மே 31 ம் தேதி கிம்போ நீக்கப்பட்டது

மே 31 ம் தேதி கிம்போ நீக்கப்பட்ட பின்னர், பதஞ்சலியின் அதிகாரப்பூர்வ அறிக்கையில், ஒரு நாள் பயன்பாட்டிற்காக மட்டுமே சோதனை நோக்கங்களுக்காகத் வெளியிடப்பட்டதாகத் தெரிவித்தார். பின்னர் தொழில்நுட்ப வேலைகள் முன்னேற்றத்திற்குப் பின் அதிகாரப்பூர்வமாக மக்கள் சேவைக்கு வெளியிடப்படும் என அவர் தெரிவித்தார்.

சமஸ்கிருத வார்த்தை கிம்போ

சமஸ்கிருத வார்த்தை கிம்போ

சுதந்திர தினத்தன்று கிம்போ செயலி பற்றிய அறிவிப்பை வெளியிடும்போது செயலிக்கு ஏன் கிம்போ என்று பெயரிடப்பட்டதென்று ராமதேவ் விளக்கினார். "வாட்ஸ் அப்" க்கான சமஸ்கிருத வார்த்தை கிம்போ என்றும், இதனாலேயே கிம்போ என்று தங்கள் செயலிக்கு பெயரிட்டுள்ளதாக அவர் கூறினார்.

டிஜிட்டல் சுதந்திரம்

டிஜிட்டல் சுதந்திரம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பை அறிவிக்கும்போது, பாபா ராம்தேவ் சுதந்திர தினத்தை "டிஜிட்டல் சுதந்திரத்தின்" தினமாகக் கொண்டாட வேண்டும் என்று கூறினார். அந்த டிஜிட்டல் சுதந்திரத்தை அடைவதற்கு கிம்போ முதல் படியாக இருக்குமென்றார்.

மத்திய அமைச்சர் நிதின் கட்காரி

மத்திய அமைச்சர் நிதின் கட்காரி

ஆகஸ்ட் 27 அன்று, மத்திய அமைச்சர் நிதின் கட்காரி முன்னிலையில் தனது புதிய செயலியை புது தில்லியில் வெளியிடப் போவதாக பாபா ராம்தேவ் கூறியுள்ளார். மேம்படுத்தப்பட்ட புதிய கிம்போ செயலி பயன்பாட்டிற்கான அறிவிப்பை ராம்தேவ் தனது டிவிட்டர்பக்கத்தில் புதன் அன்று பகிர்ந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் ஆப் செயலி போலவே

வாட்ஸ் ஆப் செயலி போலவே

இத புதிய கிம்போ செயலி மெசேஜிங், குரல் அழைப்பு, வீடியோ அழைப்பு, லொகேஷன் பகிர்வு மற்றும் அனைத்து இதர சேவை அம்சங்கள் கொண்டு, அச்சு அசல் வாட்ஸ் ஆப் செயலி போலவே உருவாக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Patanjali’s swadeshi messaging app ‘Kimbho’ to be re-launched on August 27 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X