இனி ரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யலாம்

முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் மத்திய பிரதேச மாநிலத்தில் இந்த திட்டம் செயல்பாட்டில் இருக்கிறது.

|

ரெயிலில் பயணம் செய்வோர் விரைவில் தங்களகு புகார்களை மொபைல் ஆப் மூலம் தெரிவிக்கலாம். புகார் அளிக்கப்பட்டதும், ஜீரோ எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு, ரெயில்வே காவல் துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கையை துவங்குவர் என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி

முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் மத்திய பிரதேச மாநிலத்தில் இந்த திட்டம் செயல்பாட்டில் இருக்கிறது. இதில் அச்சுறுத்தல், திருட்டு விவகாரம் அல்லது பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்களை புகார்களாக தெரிவிக்க முடியும். இந்த திட்டம் விரைவில் நாடு முழுக்க செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புகார்

புகார்

"புகார் தெரிவிக்க பயணர்கள் இனி அடுத்த ரெயில் நிலையம் வரும் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் மொபைல் போன் செயலி மூலம் தங்களது புகார்களை தெரிவிக்கலாம். பயணி தெரிவிக்கும் புகார் ரெயில்வே காவல் துறையினருக்கு நேரடியாக செல்லும் என்பதால், பாதிக்கப்பட்டோருக்கு உதவ முடியும்," என ரெயில்வே காவல் துறை அதிகாரியான டி.ஜி. அருன் குமார் தெரிவித்தார்.

ஜீரோ எஃப்.ஐ.ஆர்.

ஜீரோ எஃப்.ஐ.ஆர்.

பயணி தெரிவிக்கும் புகார் ஜீரோ எஃப்.ஐ.ஆர். போன்று பதிவு செய்யப்பட்டு, உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். ஜீரோ எஃப்.ஐ.ஆர். எனில் எந்த காவல் நிலையத்திலும் புகார் அளிக்கலாம் என்பது ஆகும். மேலும் இதனை பின்னர் குற்ற சம்பவம் தொடர்புடைய காவல் நிலையத்திற்கு பரிமாற்றிக் கொள்ளலாம்.

உடனடி தீர்வு

உடனடி தீர்வு

தற்சமயம் பயணி ஏதேனும் புகார் அளிக்க வேண்டும் எனில், சம்மந்தப்பட்டவர் பயணச்சீட்டு பரிசோதகர் வழங்கும் படிவத்தை பூர்த்தி செய்து அதனை ரெயில்வே காவல் துறையினருக்கு வழங்க வேண்டி இருக்கிறது. இந்த படிவம் எஃப்.ஐ.ஆர். ஆக தானாக மாற்றப்படும்.


இந்த வழிமுறை நிறைவுற காலதாமதம் ஆகும் என்பதால், பயணிகளுக்கு உடனடி தீர்வு கிடைக்காமல் அவதிக்கு உள்ளாகின்றனர்.

டிசம்பர் 14

டிசம்பர் 14

புதிய செயலியின் மூலம் அளிக்கப்படும் புகார்களில் ரெயில்வே காவல் துறை அதிகாரிகள் மட்டும் இன்றி அரசு ரெயில்வே காவல் துறை, டி.டி.இ. மற்றும் ரெயில் நசத்துனர் ஆகியோரும் சம்பந்தப்பட்டுள்ளனர். இந்த செயலியில் பெண்களுக்கு உதவும் நோக்கில் பேனிக் பட்டன் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது.


கடந்த ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பயணங்களின் போது பயணர்களுக்கு உதவும் நோக்கில் ஆன்லைன் வழிமுறையை செயல்படுத்துவதற்கான யோசனையை முன்மொழிந்தார்.

இந்த செயலியை கொண்டு பயனர்கள் ஆஃப்லைனிலும் புகார் பதிவு செய்ய முடியும்.

Best Mobiles in India

English summary
Passengers will soon be able to file FIRs from on board trains with an app : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X