இந்தியாவில் ஆர்குட்டின் ஹலோ ஆப் அறிமுகம்! பேஸ்புக்கிற்கு ஆப்பா?

  சமூக வலைதளமான orkut.com ன் நிறுவனர் மற்றும் ஹலோ நெட்வொர்க்-ன் சி.ஈ.ஓ ஆர்குட் பயூகோக்டென் , இந்தியாவில் ஹலோ செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த புதிய செயலியான முக்கியமாக புதிய தலைமுறை மொபைல் பயனர்களுக்கும் மற்றும் ஒத்த சிந்தனையுள்ள மக்களையும் ஒருங்கிணைத்து நேர்மறையான, அர்த்தமுள்ள, நம்பத்தகுந்த, நீடித்த சமூகத்தை உருவாக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

  இந்தியாவில் ஆர்குட்டின் ஹலோ ஆப் அறிமுகம்! பேஸ்புக்கிற்கு ஆப்பா?

  ஹலோ ஆப்பை அறிமுகப்படுத்தி விட்டு ஆர்குட் பேசுகையில், இன்றைய இணைய வலைதளங்கள் மக்கள் முகத்திற்கு நேராக எப்படி செயல்படுகிறார்களோ அதற்கு நேர்மாறாக இணையத்தில் செயல்பட வைக்கின்றன. அதிகமாக புரிந்துகொள்ளக்கூடிய, அதிக நம்பகமான, அதிக அன்பான மற்றும் சிறந்த மக்களாக மாற தொழில்நுட்பங்கள் நமக்கு உதவ வேண்டும் என கூறினார்.

  மேலும் அவர் கூறுகையில், ஹலோ ஆப் நிஜ உலகத்துடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள உங்களுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சமூக வலைதளம் லவ்வை அடித்தளமாக கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது, லைக்கை அல்ல. மீண்டும் மகிழ்ச்சியோடு இந்தியாவிற்கு ஹலோ கூறுகிறேன் என்றார்.

  ஹலோ ஆப் பிரேசிலில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட ஒரு மில்லியன் டவுன்லோடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் பல மாதங்களாக பீட்டா வெர்சனை பரிசோதனை பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். பயனர்கள் சராசரியாக மாதம் 320நிமிடங்களை இந்த ஹலோ ஆப்பில் செலவழிக்கின்றனர்.

  இந்தியாவில் விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மீகம் மற்றும் தொழில்நுட்ப ஆர்வத்தை பிரதிபளிக்கும் வகையில் பீட்டா வெரிசனின் பெரும்பாலான பயனர்கள் பாலிவுட் ரசிகர், கிரிக்கெட் ரசிகர், தொழில்முனைவோர், பேசன் ஆர்வமுடையவர், பிட்னஸ் விருப்பமுடையவர், உணவு ரசிகர், இசை ரசிகர், தொழில்நுட்ப வல்லுநராக இருக்கின்றனர். 55%க்கு மேற்பட்ட இந்திய பயனர்கள் ஒவ்வொரு வாரமும் மற்ற சமூக வலைதளங்களை விட சராசரியாக இருமடங்கு பதிவுகளை தருகின்றனர்.

  How to find vehicle owner detail (GIZBOT TAMIL)

  ஒன்ப்ளஸ் 6-ன் 8ஜிபி ரேம் + 256 ஜிபி மாடல் விலையை சொன்னால் நம்புவீர்களா?

  கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் கிடைக்கும் இந்த செயலி, ஆண்ராய்டு கிட்கேட் மற்றும் ஐ ஓ.எஸ் 9 க்கு கிடைக்கிறது.

  ஹலோ செயலியின் சிறப்பம்சங்கள்

  - அருகில் உள்ள மற்றும் உலக முழுவதும் உள்ள மக்களுடன் இணைக்க

  - உங்களுக்க பிடித்தவை, ஆர்வமுள்ளவற்றை போன்றே ஒத்த சிந்தனையுள்ள குழுவுடன் இணைய

  -உங்களுக்கு பிடித்தவற்றை தெரிந்துகொள்ள மற்றும் புதிய நண்பர்களை தேட

  -உங்கள் உருவாக்கங்கள், ஐடியாக்கள் மற்றும் அனுபவங்களை பகிரந்து இணைப்பை உருவாக்க

  - உங்களுக்கு பிடித்தவை மாறும் போது உங்களுக்காக உங்களுடன் சேர்ந்து இந்த செயலியும் எளிதாக மாறும்.

  Read more about:
  English summary
  Orkut Buyukkokten, the founder of the social network Orkut.com and CEO of Hello Network, Inc., has launched Hello app in India.The new app is built specifically for the new mobile-generation and brings people together around their interests to create positive, meaningful, authentic connections and sustained social engagement.
  X

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more