பேஸ்புக்கிற்கு போட்டியாக ஹலோ ஆப்; Orkut-ஐ உருவாக்கியவர் மீண்டும் அதிரடி.!

உலகின் முதன் முதலில் பரவலாக இருந்த சமூக வலைதளம் கூகுளின் ஆர்க்குட், இந்த வலைதளம் ஆரம்பத்தில் பல்வேறு நாடுகளில் அதிகமாக உபயோகப்படுத்தப் பட்டு வந்தது.

|

இந்திய மற்றும் உலக நாடுகள் முழுவதும் பேஸ்புக் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது, இந்நிலையில் பிரட்டனைச் சேர்ந்த ஆலோசனை
நிறுவனமான கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தேர்தல் வியூகங்களை வகுப்பதற்காக பேஸ்புக்பயனாளரின் தகவல்களை சட்டவிரோதமாக பெற்றதாக குற்றசாட்டு எழுந்தது. இதனையடுத்து பேஸ்புக் மீதான மக்களின் நம்பிக்கை தற்சமயம் மிகவும்அதிகளவில் குறைந்து இருக்கிறது, குறிப்பாக பேஸ்புக் பங்குகளின் மதிப்பு சரியத் தொடங்கியுள்ளது.

பேஸ்புக்கிற்கு போட்டியாக ஹலோ ஆப்; Orkut-ஐ உருவாக்கியவர் அதிரடி.!

மேலும் பேஸ்புக்குக்கு போட்டியாக ஹலோ ஆப் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, குறிப்பாக ஆர்க்குட் சமூக வலைதளத்தை உருவாக்கிய கூகுள் உருவாக்கிய கூகுள் நிறுவனத்தின் முன்னாள் பணியாளர் Orkut Buyukkokten என்பவரால் இந்த புதிய ஆப் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த சமூக வலைதளமான ஹலோ இந்தியாவில் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோர் போன்றவற்றில் கிடைக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டள்ளது. மேலும் சான் ஃபிரான்ஸிஸ்கோ-வை தலைமையிடமாக கொண்டு இந்த ஹலோ ஆப் செயல்படும் என்று Buyukkokten தகவல் தெரிவித்துள்ளார்.

உலகில் மிகவும் பரவலாகப் பேசப்படும் வார்த்தை ஹலோ, இதன் மூலம் எவருக்கும் எளிய மற்றும் நட்பான சைகை செய்யும்போது பல்வேறு நண்மைகள் கிடைக்கும். எனவே ஹலோவுடன் சேரவும், சில புதிய நண்பர்களை உருவாக்கவும் ஹலோ ஆப் பயன்படுகிறுது.

பேஸ்புக்கிற்கு போட்டியாக ஹலோ ஆப்; Orkut-ஐ உருவாக்கியவர் அதிரடி.!

தற்சமயம் இந்த ஆப் 1 மல்லியன் பயனாளர்களுடன் பிரேசில் நாட்டில் அதிகமாக பயன்பட்டு வருகிறது, குறிப்பாக கடந்த 7 மாதங்களாக இந்தியாவில் பீட்டா ஆய்வுக்கு கீழ் செயல்பட்டு வந்தது இந்த ஹலோ ஆப்.

Translate English to Tamil In your Mobile Easily (GIZBOT TAMIL)

உலகின் முதன் முதலில் பரவலாக இருந்த சமூக வலைதளம் கூகுளின் ஆர்க்குட், இந்த வலைதளம் ஆரம்பத்தில் பல்வேறு நாடுகளில் அதிகமாக உபயோகப்படுத்தப் பட்டு வந்தது. ஆனால் பேஸ்புக் வந்தபின்பு இதனுடைய மதிப்பு குறையத்
தொடங்கியது. மேலும் கடந்த 2014-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ம் தேதியுடன் ஆர்குட் தனது சேவையை நிறுத்திக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்கிற்கு போட்டியாக ஹலோ ஆப்; Orkut-ஐ உருவாக்கியவர் அதிரடி.!

இதன் பரிசோதனை முயற்சியாக உபயோகித்த பயனானர்கள் ஒவ்வோருவரும் ஒரு மாதத்திற்கு தலா 320 நிமிடங்கள் வரை இந்த ஆப் வசதியை உபயோகம் செய்துள்ளனர். மேலும் இந்தியாவில் விரைவில் இந்த ஆப் வசதி பிரபலமாகும் என
எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Orkut founder says Hello to India with a new social platform; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X