ஓபரா கிரிக்கெட்: ஐபிஎல் ஸ்கோர்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ஓபரா மினியின் புதிய வசதி

By Siva
|

இந்தியர்களின் கிரிக்கெட் திருவிழா என்று அழைக்கப்படும் 10வது ஐபிஎல் சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் முன்னணி பிரெளசர் நிறுவனங்களில் ஒன்றான ஓபரா மினி தற்போது ஓபரா கிரிக்கெட் என்ற புதிய வசதியை தனது மொபைல்போன் பிரெளசரில் அறிமுகம் செய்துள்ளது.

ஓபரா கிரிக்கெட்: ஐபிஎல் ஸ்கோர்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ஓபரா மினி

இந்த வசதியின் மூலம் ஓபராமினி பிரெளசர் மூலம் ஐபிஎல் போட்டிகளின் ஒவ்வொரு போட்டியின் ஸ்கோர், வர்ணனை, வீடியோ மற்றும் நோட்டிபிகேசனை வாடிக்கையாளர்கள் பெற முடியும். ஓபராமினி பிரெளசரில் ஓபரா கிரிக்கெட் சேவைகள் ஆரம்பித்துவிட்டதால் உடனே நீங்கள் லேட்டஸ்ட் வெர்ஷன் ஓபரா மினி செயலியை டவுன்லோடு செய்து அதில் 'கெட் ஸ்டார்ட்' என்பதை க்ளிக் செய்து இந்த புதிய வசதியை பெற்று கொள்ளலாம்.

வேறு எந்த செயலியையும் டவுண்ட்லோடு செய்யாமல் இந்த பிரெளசரிலேயே ஸ்கோர், போட்டிகளின் நிலைமை மற்றும் வீடியோக்களை டவுன்லோடு செய்யாமலேயே நீங்கள் பார்க்கலாம்

ஓபரா கிரிக்கெட்: ஐபிஎல் ஸ்கோர்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ஓபரா மினி

இந்தியர்கள் அனைவரும் கிரிக்கெட் விளையாட்டை சுவாசம் போன்று கருதுவதால் இந்த வசதியை கண்டிப்பாக யாரும் மிஸ் செய்ய மாட்டோம் என்று கூறுகிறார் ஓபரா சாப்ட்வேர் தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் பொறுப்பாளர் சுனில் கமத் என்பவர்.

அவர் மேலும் கூறியதாவது: புதிய வெர்ஷன் ஓபராமினி செயலியில் ஓபரா கிரிக்கெட் என்ற புதிய வசதி இருப்பதால் ஐபிஎல் மட்டுமின்றி அனைத்து கிரிக்கெட் போட்டிகளின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம். கிரிக்கெட் போட்டிகளின் சீசனின்போது மிக வேகமாக லைவ் ஸ்கோர்களை தெரிந்து கொள்ள இந்த செயலி வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

ஆண்ட்ராய்டில் ஒட்டுமொத்த தரவுகளையும் மொத்தமாய் அழிக்க முடியும்.!

இதில் உள்ள 'வாட்ஸ் ஆன்' என்ற பிரிவில் நடைபெற்று கொண்டிருக்கும், நடந்து முடிந்த, விரைவில் நடக்கவுள்ள அனைத்து போட்டிகளின் விபரங்கள், ஸ்கோர்கள் மற்றும் ஒவ்வொரு பந்திலும் என்ன நடந்தது என்பதை மிகத் துல்லியமாக தெரிந்து கொள்ளலாம்.

மேலும் பயனாளிகளுக்கு அவ்வப்போது போட்டிகள் குறித்த தகவல்கள் தேவையென்றால் அதற்குரிய நோட்டிபிகேசன் பட்டனை செலக்ட் செய்தால் அவ்வப்போது கிரிக்கெட் போட்டிகளின் ஸ்கோர் குறித்த தகவல்கள் உங்களுக்கு நோட்டிபிகேசனாக வந்து கொண்டே இருக்கும்.

மேலும் ஓபரா மினி பிரெளசர் தங்கள் பயனாளிக்கு இந்த சேவை மட்டுமின்றி புதிய டவுன்லோடு மேனேஜர் என்ற ஆப்சனும் உள்ளது. இதில் நமக்கு தேவையான வீடியோ, மியுசிக் ஆகியவைகளை பெறும் வசதியும் தற்போது உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

Read more about:
English summary
Recently, Opera Mini has introduced its new features which not only let users access more of the web but also facilitate them to get the content they want. The new download manager makes video and music downloads easier.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X