ஐபோன் வாடிக்கையாளர்களுக்கு ஒபேரா மினி பிரவுசர் புது அப்டேட் அறிமுகம்

|

ஒபேரா மினி பிரவுசர் பயன்படுத்தும் ஐபோன் வாடிக்கையாளர்களுக்கு புதிய அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. புதிய அப்டேட்டில் புதிய இன்டர்பேஸ் மற்றும் ஸ்டார்ட் பேஜில் நியூஸ் ஃபீட் கொண்டுள்ளது.

ஒபேரா மினி ஐஒஎஸ் புதியஅப்டேட் அறிமுகம்

புதிய அப்டேட் மூலம் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வந்த முந்தைய பதிப்புகளை விட நான்கு மடங்கு வேகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட நாடுகளில் செயற்கை நுண்ணறிவு நியூஸ் இன்ஜின் வழங்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒபேராவின் புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ரியல்-டைம் இன்டெலிஜன்ஸ் ரேன்க்கிங், மெஷின் லேர்னிங் மற்றும் டீப் லேர்னிங் உள்ளிட்டவற்றை சார்ந்து வேலை செய்கிறது.

ஒபேரா மினி ஐஒஎஸ் புதியஅப்டேட் அறிமுகம்

செய்திகளை பயன்படுத்த துவங்கியதும், வாடிக்கையாளர்கள் பயன்பாட்டிற்கு ஏற்ப செய்திகளை முன்னுரிமைப்படுத்தும். டீப் லேர்னிங் வழிமுறைகளை கொண்டு வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பும் செய்திகளை வழங்கும்.

வாடிக்கையாளர் எவ்வளவு நேரம் செய்திகளை பயன்படுத்துகிறார் என்பதை பொருத்து அதிகப்படியான செய்திகள் அவர்களுக்கு விருப்பமான தலைப்புகளில் பரிந்துரைக்கப்படும். என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு முறை ஒபேரா பயன்படுத்தும் போதும் ஸ்டார்ட் பேஜில் அதிகப்படியான தகவல்கள் வழங்கப்படும். இதற்கென வாடிக்கையாளர் எவ்வித கஸ்டமைசேஷனும் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது.

அதிக செய்திகளை வாசிக்க, அதற்கேற்றவாரு ஃபீட் கஸ்டமைஸ் செய்யப்படும். முதற்கட்டமாக இந்தியா, கானா, கென்யா, இந்தோனேஷியா, நைஜீரியா, தென் கொரியா, டான்சானியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த இன்ஜின் வழங்கப்படுகிறது.

செக்ஸ் ரோபோட்ஸ் ஆக இருந்தாலும் கூட, ஒரு நியாயம் தர்மம் வேணாமாடா.?செக்ஸ் ரோபோட்ஸ் ஆக இருந்தாலும் கூட, ஒரு நியாயம் தர்மம் வேணாமாடா.?

ஒவ்வொரு வாடிக்கையாளரும், தங்களுக்கு ஏற்ற தகவல்களை வழங்குவதே புதிய அப்டேட்டின் நோக்கம் என ஒபேரா மென்பொருள் நிறுவனத்தின் கௌடிமோக் வெபர் தெரிவித்தார். மேலும் இந்த வழிமுறை மூலம் புதிய தகல்களை வழங்குவதோடு, நம்பத்தகுந்த தகவல்களை மட்டும் வழங்க முடியும்.

புதிய அப்டேட் மூலம் வாடிக்கையாளர்கள் சர்வதேச செய்திகளையும் பெற முடியும். இந்த அம்சம் ஒவ்வொரு நாடுகளில் நடைபெறும் சம்பவங்களை அறிந்து கொள்ள பயன் தரும். இதனை செட்டப் செய்ய ஸ்டார்ட் பேஜ் மேல் பக்கத்தில் இடது புறமாக ஸ்வைப் செய்து வலது புறம் காணப்படும் + குறியை கிளிக் செய்ய வேண்டும்.

இந்தியாவில் நியூஸ் ஃபீட் அம்சம் ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ், இந்தி மற்றும் குஜராத்தி மொழிகளில் கிடைக்கிறது. புதிய ஒபேரா மினி அப்டேட் செய்திகளை நான்கு மடங்கு வேகத்தில் லோடு செய்யும் திறன் கொண்டுள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
Opera, the developers behind the popular Opera Mini web browser has now released a new version of the mobile browser app for iPhone users.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X