ஆன்லைன் மூலம் சம்பாதிக்க புதிய OnZoom அறிமுகம்.! பாதுகாப்புடன் என்னவெல்லாம் செய்யலாம்.?

|

கொரோனா தொற்றுநோய் காரணமாக மக்கள் ஜிம், கிளப் போன்ற எந்தவொரு பொது இடத்திற்கும் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது. பொது இடங்களுக்குச் செல்லும் மக்களும் ஒரு அச்சத்துடனே சென்று வருகின்றனர். மக்களின் இயல்பு வாழ்க்கை இதனால் பெரிதும் பாதித்துள்ளது. பழைய இயல்பு நிலைக்கு மக்கள் திரும்ப இன்னும் பல நாட்கள் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களின் பல தேவைகள் ஆன்லைன் மூலம்

இந்த சூழ்நிலையில், இப்பொழுது மக்களின் பல தேவைகள் ஆன்லைன் மூலம் கிடைக்கிறது. ஜிம் பயிற்சி, நடன பயிற்சி, ஆன்லைன் வகுப்பு, DJ இசை நிகழ்ச்சி போன்ற பல துறைகள் தற்பொழுது ஆன்லைன் பக்கம் மாறியுள்ளது. ஆன்லைன் மூலம் பாதுகாப்பாக இருக்க விரும்பும் நபர்களை மனதில் கொண்டு, ஜூம் (Zoom) நிறுவனம் புதிய OnZoom என்ற ஆன்லைன் நிகழ்வு தளத்தை அறிமுகம் செய்துள்ளது.

OnZoom ஆன்லைன் நிகழ்வு

உங்களுடைய தேடல் ஏதுவாக இருந்தாலும் அதை நீங்கள் இந்த புதிய OnZoom ஆன்லைன் நிகழ்வு தளத்தின் மூலம் செயல்படுத்தலாம். உடற்பயிற்சி, கல்வி மற்றும் ஆன்லைன் கேதரிங் தொழிலுடன் தொடர்புடையவர்களுக்கு இந்த புதிய செயலி பெரிதும் உதவியாக இருக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மக்களின் பாதுகாப்பை இது வலுப்படுத்துகிறது. உங்கள் வணிகத்திற்குத் தேவையான ஒரு புதிய அடையாளத்தை இதன் வழி நீங்கள் உருவாக்கலாம்.

இனி LPG சிலிண்டர் வாங்க இது கட்டாயம்.. நவம்பர் 1 முதல் அமலுக்கு வரும் புதிய முறை.!இனி LPG சிலிண்டர் வாங்க இது கட்டாயம்.. நவம்பர் 1 முதல் அமலுக்கு வரும் புதிய முறை.!

உங்கள் தொழிலை விரிவுபடுத்த

ஆன்லைனில் மூலம் உங்கள் தொழிலை விரிவுபடுத்த விரும்பினால் அதை நீங்கள் OnZoom வழியாக இப்பொழுது மேற்கொள்ளலாம். இந்த புதிய OnZoom தளத்தின் மூலம், கட்டண முறையில் உடற்பயிற்சி வகுப்புகள், இசை நிகழ்ச்சிகள், நடன வகுப்புகள், இசை பாடங்கள் போன்ற விஷயங்களை ஆன்லைன் மூலம் நீங்கள் கற்பிக்கலாம். இதற்கு நீங்கள் ஹோஸ்டாக இருந்து நிகழ்வை நடத்தலாம். இதன் மூலம் நீங்கள் பணம் ஈட்டலாம்.

இரண்டு காரணி அங்கீகார அம்சம்

ஊரடங்கு காலத்தில் Zoom பயன்பாடு பாதுகாப்பானது இல்லை என்ற செய்திகள் பரவியது. இதைச் சரி செய்த Zoom நிறுவனம், தற்பொழுது அதன் பயன்பாட்டில் இரண்டு காரணி அங்கீகார அம்சத்தை (Two Factor Authentication) அறிமுகம் செய்தது. இந்த புதிய அம்சத்தின் மூலம் நீங்கள் ஜூம் வழியாக மேற்கொள்ளும் அனைத்து விதமான வீடியோ அழைப்புகளும் மிகவும் பாதுகாப்பானது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இனி பயமில்லாமல் Zoom மூலம் சம்பாதிக்கலாம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
OnZoom is Zoom's new platform and marketplace for online events : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X