ஒன்பிளஸ் அறிமுகம் செய்யப்போகும் அடுத்த சூப்பர் அப்டேட்கள் இதுதான்!

|

ஸ்மார்ட்போன் சந்தையில் ஒன்பிளஸ் நிறுவனம் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்துக்கொண்டதற்கான ஒரு முக்கிய காரணம், அதன் வாடிக்கையாளர் சேவை தான்.

ஒன்பிளஸ் அறிமுகம் செய்யப்போகும் அடுத்த சூப்பர் அப்டேட்கள் இதுதான்!

ஒன்பிளஸ் பயனர்களின் தேவைகளை அறிந்து அதற்கான உரிய நடவடிக்கையை தொடர்ந்து எடுத்து, தனது சேவையை மேம்படுத்திக்கொண்டே இருக்கிறது என்பதே உண்மை.

பயனர்களின் கருத்துகளைக் கேட்டு நடவடிக்கை

பயனர்களின் கருத்துகளைக் கேட்டு நடவடிக்கை

ஒன்பிளஸ் இன் மூத்த தலைமை குழு பல ஊர்கள் மற்றும் நாடுகளில் உள்ள ஒன்பிளஸ் பயனர்களுடன் கலந்துரையாடி பயனர்களின் கருத்து மற்றும் பரிந்துரைகளைக் கேட்டு நடவடிக்கை எடுத்து வருகிறது. அடுத்த மாதம் ஆம்ஸ்டர்டாமில் உள்ள கலந்தாய்வில் கேமரா பற்றிய குறைகளைப் பயனர்களுடன் கலந்துரையாட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அட்டகாசமான அடுத்த OxygenOS அப்டேட்

அட்டகாசமான அடுத்த OxygenOS அப்டேட்

நேற்று, ஒன்பிளஸ் நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ வலைத்தள பக்கத்தில் புதிய பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. இதன்படி பயனர் கோரிய பல அம்சங்களை மாற்றி அமைத்து OxygenOS இயங்குதளத்தை மேம்படுத்தியுள்ளது என்று அறிவித்துள்ளது. என்ன வகை அம்சங்களை ஒன்பிளஸ் மேம்படுத்தவுள்ளது என்ற பட்டியலையும் வெளியிட்டுள்ளது.

ஒன்றின் பின் ஒன்றாக வெளிவரும் அம்சங்கள் இதுதான்

ஒன்றின் பின் ஒன்றாக வெளிவரும் அம்சங்கள் இதுதான்

கீழே குறிப்பிடப்பட்டுள்ள சேவைகள் அனைத்தும் நேரடியாக ஒன்பிளஸ் பயனர்களிடம் இருந்து கேட்கப்பட்ட குறைகள் மற்றும் கருத்துக்கலாகும். இந்த சேவைகளை அனைத்தும் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்து வரவிருக்கும் ஒன்பிளஸ் அப்டேட்டில் ஒன்றின் பின் ஒன்றாக விரைவில் வெளியிடும் என்றும் ஒன்பிளஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஹரிஜோன் லைட் கஸ்டமைசேஷன் ஆதரவு

ஹரிஜோன் லைட் கஸ்டமைசேஷன் ஆதரவு

ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போனிற்கான ஹரிஜோன் லைட் கஸ்டமைசேஷன் ஆதரவு மற்றும் AOD ஐ பேட்டரி பயன்பட்டை மேம்படுத்திச் செயல்படுத்த மாற்று வழிகளை மேற்கொண்டுள்ளதாக ஒன்பிளஸ் அறிவித்துள்ளது.

ஆப் ட்ராயறில் உள்ள ஃபோல்டர்களை அணுகும் ஆதரவு

ஆப் ட்ராயறில் உள்ள ஃபோல்டர்களை அணுகும் ஆதரவு

ஒன்ப்ளஸ் நிறுவனம் நீண்ட காலமாக இந்த அம்சத்தைக் கவனித்து வருவதாகவும், போல்டரில் உள்ள அப்ஸ்காளை கண்டறிவதற்கான விரைவான வழியாக இந்த ஆதரவு இருக்கும் என்றும் கூறியுள்ளது.

அல்ட்ரா வைடு கேமராவில் வீடியோ ரெக்கார்டிங் ஆதரவு

அல்ட்ரா வைடு கேமராவில் வீடியோ ரெக்கார்டிங் ஆதரவு

ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போனில் அல்ட்ரா வைடு கேமரா பயன்படுத்தி வீடியோ ரெக்கார்டிங் செய்வதற்கான ஆதரவு அங்கீகரிக்கப்பட்டு உருவாக்கத்தில் உள்ளது என்று ஒன்பிளஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒன்பிளஸ் ஐகான்களுக்கான ஆதரவு

ஒன்பிளஸ் ஐகான்களுக்கான ஆதரவு

ஒன்பிளஸ் லாஞ்சர் மூலம் ஒன்பிளஸ் ஐகான்ககளை மாற்றம் செய்வதற்கான புதிய ஆதரவு சேவையை ஒன்பிளஸ் உருவாக்கி வருவதாகத் தெரிவித்திருக்கிறது.

அதிரடியாக இலவச சப்கிரிப்ஷனை அறிவித்த டிஷ்டிவி.!அதிரடியாக இலவச சப்கிரிப்ஷனை அறிவித்த டிஷ்டிவி.!

ஸ்டேப் கவுண்டருக்கான ஆதரவு

ஸ்டேப் கவுண்டருக்கான ஆதரவு

உங்கள் நடைப்பயணத்தின் நடை கணக்கைத் துல்லியமாகக் கணக்கிடும் ஒன்பிளஸ் ஸ்டேப் கவுண்டர் அம்சத்தை, ஒன்பிளஸ் ஷெல்ஃப் சேவையின் கீழ் வழங்க உள்ளதாகத் தெரிவித்திருக்கிறது. அடுத்த அப்டேட்டில் இந்த சேவை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரீசென்ட் மெனு ஆதரவு

ரீசென்ட் மெனு ஆதரவு

சமீபத்திய அப்ஸ் மெனுவை அணுகும்போது கூடுதல் அப்ஸ்களைக் காணும் புதிய சேவை, இந்த புதிய அம்சம் அங்கீகரிக்கப்பட்டு உருவாக்கத்தில் உள்ளது என்று ஒன்பிளஸ் அறிவித்துள்ளது.

சார்ஜிங் சவுண்ட் எபெக்ட்

சார்ஜிங் சவுண்ட் எபெக்ட்

வார்ப் சார்ஜிங் செய்யும் பொழுது சார்ஜிங்கிற்கான நோட்டிபிசேஷன் சவுண்ட் எபெக்ட் வழங்கும் இந்த புதிய சார்ஜிங் சவுண்ட் எபெக்ட் அம்சம் அங்கீகரிக்கப்பட்டு உருவாக்கத்தில் உள்ளது என்று ஒன்பிளஸ் அறிவித்துள்ளது.

மனிதனின் மர்ம உறுப்பை எட்டி உதைக்கும் ஏஐ ரோபோட்: ஏன் தெரியுமா?மனிதனின் மர்ம உறுப்பை எட்டி உதைக்கும் ஏஐ ரோபோட்: ஏன் தெரியுமா?

புதிய பிளாக் மெசேஜ் ஆதரவு

புதிய பிளாக் மெசேஜ் ஆதரவு

குறிப்பிட்ட சொற்களைப் பயன்படுத்தி குறுஞ்செய்திகளைத் தடுக்கும் புதிய அம்சம். இந்த அம்சம் பீட்டா சோதனையின் கீழ் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜென் மோடு அப்டேட்

ஜென் மோடு அப்டேட்

புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களில் ஜென் மோடு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஜென் மோடு பயன்படுத்தினால் 20 நிமிடங்களுக்கு உங்களின் ஸ்மார்ட்போனை பயன்படுத்த இயலாது. வாய்ஸ் கால் மற்றும் கேமரா மட்டும் பயன்பாட்டில் இருக்கும். தற்பொழுது வழங்கப்பட்டுள்ள 20 நிமிட நேரத்தைக் குறைக்க புதிய ஆதரவு உருவாக்கப்பட்டுவருவதாக ஒன்பிளஸ் தெரிவித்துள்ளது.

பிளாக்கிங் கால்ஸ் அப்டேட்

பிளாக்கிங் கால்ஸ் அப்டேட்

போன் செட்டிங்ஸ் மூலம் அழைப்புகளைச் செய்வதற்கான ஆதரவு, இந்த அம்சம் ஏற்கனவே பீட்டா வெர்ஷனில் சோதிக்கப்பட்டு வருகிறது.

ரூ.16,999-விலையில் புதிய 40-இன்ச் ஸ்மார்ட் டிவி அறிமுகம்.!ரூ.16,999-விலையில் புதிய 40-இன்ச் ஸ்மார்ட் டிவி அறிமுகம்.!

டிஜிட்டல் வெல்பீயிங் ஆதரவு

டிஜிட்டல் வெல்பீயிங் ஆதரவு

ஒன்பிளஸ் சாதனங்களுக்கான டிஜிட்டல் வெல்பீயிங் ஆதரவு, ஏற்கனவே ஒன்பிளஸ் 5/5T மற்றும் 6/6T ஸ்மார்ட்போனிகளுக்கு பீட்டா வெர்ஷன் வெளியிடப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Oneplus Next Update List These Features May Be Coming Soon To OxygenOS : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X