ஒன்பிளஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய OnePlus Pay பற்றி உங்களுக்கு தெரியுமா?

|

ஒன்பிளஸ் நிறுவனம் தனது முதல் என்எப்சி அடிப்படையிலான மொபைல் பேமெண்ட் டிரான்ஸ்பர் சேவையை மற்றும் டிஜிட்டல் வாலட் சேவையை முதல் முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய பேமெண்ட் சேவையை ஒன்பிளஸ் நிறுவனம் சீனாவில் அறிமுகம் செய்துவைத்துள்ளது. ஒன்பிளஸ் பே என்ற பெயரில் இந்த புதிய சேவையை ஒன்பிளஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களுக்கு பிரத்தியேக சேவை

ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களுக்கு பிரத்தியேக சேவை

ஒன்பிளஸ் நிறுவனத்தின் இந்த புதிய சேவை, சமீபத்திய ஸ்மார்ட்போன் மாடல்களான ஒன்பிளஸ் 7T மற்றும் ஒன்ப்ளஸ் 7T ப்ரோ ஆகிய ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு பிரத்தியேகமாகக் கிடைக்கும்படி செய்துள்ளதாக ஒன்பிளஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சேவை தற்போது சீனாவில் மட்டும் முதல் கட்டமாக அறிமுகம் செய்யப்பட்டு நாட்டில் வெளியிடப்பட்டுள்ளது.

NFC அடிப்படையிலான பேமெண்ட் சேவை

NFC அடிப்படையிலான பேமெண்ட் சேவை

ஒன்பிளஸ் நிறுவனம் இந்த ஒன்பிளஸ் பே சேவையை அரை வருடத்திற்கும் மேலாக உள்நாட்டில் பலகட்டமாகச் சோதனை செய்து வருவதாகத் தெரிவித்துள்ளது. இந்த சேவையைப் பயன்படுத்த, வாடிக்கையாளர்கள் ஒன்பிளஸ் பே சேவை பயன்பாட்டைத் திறந்து ஒன்பிளஸ் பே சேவையை டிஃபால்ட் NFC அடிப்படையிலான பேமெண்ட் பயன்பாடாக அமைக்க வேண்டும்.

வீட்டிலேயே இருக்கிறீர்களா., Google அட்டகாச அறிவிப்பு: 100 கணக்கான இலவச மூவிஸ்!வீட்டிலேயே இருக்கிறீர்களா., Google அட்டகாச அறிவிப்பு: 100 கணக்கான இலவச மூவிஸ்!

வெச்சாட் மற்றும் அலிபே பயன்பாட்டை முந்திய ஒன்பிளஸ் பே

வெச்சாட் மற்றும் அலிபே பயன்பாட்டை முந்திய ஒன்பிளஸ் பே

அதற்குப்பின் பயனர்கள் அனைத்து வங்கி விவரங்களையும் ஒன்பிளஸ் பே சேவையில் பதிவு செய்ய வேண்டும். சீனாவில் பயன்படுத்தப்படும் வெச்சாட் மற்றும் அலிபேவுடன் ஒப்பிடும்போது, ஒன்பிளஸ் நிறுவனத்தின் இந்த புதிய ஒன்பிளஸ் பே சேவை வேகமாக இருப்பதாக இதைப் பயன்படுத்திய பயனர்கள் கூறியுள்ளனர். இந்த சேவை சீன ஒன்பிளஸ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஒன்பிளஸ் பே குயிக் பேமெண்ட் சேவை

ஒன்பிளஸ் பே குயிக் பேமெண்ட் சேவை

இந்த ஒன்பிளஸ் பே சேவையின் தனிச் சிறப்பே டபுள் டேப் அம்சம் தான் என்று நிறுவனம் கூறியுள்ளது. ஒன்பிளஸ் பே சேவையைப் பயன்படுத்தப் பயனர்கள் சுவிட்ச் ஆன் பட்டனை இரண்டு முறை கிளிக் செய்தால் போதும். குயிக் பேமெண்ட் செய்வதற்கு இரண்டு முறை பட்டனை அழுத்துவதன் மூலம் விரைவாக உங்கள் பயன்பாட்டைத் திறந்து பணம் செலுத்த முடியும் என்று ஒன்பிளஸ் நிறுவனம் கூறியுள்ளது.

Amazon தளத்தில் இப்பொழுது நீங்கள் வாங்க கூடிய 10 தேவையான பொருட்கள் இதுதான்!Amazon தளத்தில் இப்பொழுது நீங்கள் வாங்க கூடிய 10 தேவையான பொருட்கள் இதுதான்!

ஒன்பிளஸ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு

ஒன்பிளஸ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு

சீன ஒன்பிளஸ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இந்த சேவை விரைவில் அனைத்து பயனர்களுக்குக் கிடைக்கும் விதத்தில் தயாராகி வருகிறது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒன்பிளஸ் பே சேவை இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளில் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்ற அதிகாரப்பூர்வ தகவலை ஒன்பிளஸ் நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்பிளஸ் 8 சீரிஸ் போன்களுக்கு ரெடி ஆகுங்கள்

ஒன்பிளஸ் 8 சீரிஸ் போன்களுக்கு ரெடி ஆகுங்கள்

இந்தியாவில் ஒன்பிளஸ் நிறுவனம் அதிக பயனர்களை கொண்டுள்ளதால், ஒன்பிளஸ் பே சேவையைஇந்தியாவில் விரைவில் நிறுவனம்அறிமுகம் செய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல்,ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் 8, ஒன்பிளஸ் 8 லைட் மற்றும் ஒன்பிளஸ் 8 ப்ரோ ஆகிய மூன்று புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை வரும் ஏப்ரல் மாதத்தில் வெளியிடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

Best Mobiles in India

English summary
OnePlus Launched New Mobile Payments And Digital Wallet Service With Oneplus Pay App : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X