ஓலா ஆட்டோவில் அறிமுகமாகும் புதிய சேவை ஆட்டோ கனெக்ட் வைஃபை

By Siva
|

ஓலா நிறுவனம் இன்று முதல் புதிய சேவை ஒன்றை ஆரம்பித்துள்ளது. ஆட்டோ கனெக்ட் வைஃபை என்ற இந்த புதிய வசதி இந்தியாவில் உள்ள 73 நகரங்களில் உள்ள ஆட்டோக்களில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

ஓலா ஆட்டோவில் அறிமுகமாகும் புதிய சேவை ஆட்டோ கனெக்ட் வைஃபை

ஓலா நிறுவனத்தின் ஆட்டோ பிரிவு இயக்குனர் மற்றும் தலைவரான சித்தார்த் அகர்வால் அவர்கள் இந்த புதிய வசதி குறித்து கூறியதாவது: சுகமான பயண அனுபவம் தரும் ஓலா நிறுவனத்தின் ஆன்லைன் வசதி மற்றும் நல்ல ஒத்துழைப்பு உள்ள ஓட்டுனர்கள் குறித்து ஏற்கனவே பார்த்துள்ளோம்.

இந்த நிலையில் மூன்று சக்கர வாகனமான ஆட்டோவில் பயணம் செல்லும் வாடிக்கையாளர்கள் வசதிக்காக வைபை வசதியை தற்போது அறிமுகம் செய்கிறது. இந்த வைபை வசதி இந்தியாவின் டிஜிட்டல் இந்தியாவுக்கு பெரிதும் உதவும் வகையில் உள்ள ஒரு வசதி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய சேவையின் மூலம் எங்கள் வாடிக்கையாளர்களின் நேரத்தை பொன்னான நேரமாக மாற்றுவது மட்டுமின்றி இந்தியாவில் உள்ள லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கான உதவியாகவும் இந்த சேவை பயன்படும்' என்று அகர்வால் மேலும் கூறியுள்ளார்

நிரந்தரமான விலைகுறைப்பில் சியோமி மி மேக்ஸ் 2, இந்தியாவில் மட்டும்.!நிரந்தரமான விலைகுறைப்பில் சியோமி மி மேக்ஸ் 2, இந்தியாவில் மட்டும்.!

ஓலா வாடிக்கையாளர்களுக்கு இந்த சேவை அவர்களது பயணம் தொடங்கிய அடுத்த நிமிடமே ஆரம்பித்துவிடும். இருப்பினும் முதல்முறையாக இந்த சேவையை பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் ஒருமுறை அவர்களுடைய மொபைலுக்கு வரும் பாஸ்வேர்டை உபயோகிக்க வேண்டும்

ஓலா நிறுவனம் இந்த சேவை குறித்து மேலு கூறியபோது, 'ஆட்டோவில் தொடங்கப்பட்டிருக்கும் இந்த சேவைக்கு கிடைக்கும் வரவேற்பினை பொறுத்து அடுத்ததாக ஓலாவின் பிற சேவைகளான மினி, லக்ஸ் மற்றும் மைக்ரோ வாகனங்களிலும் இந்த சேவை விரிவுபடுத்தப்படும் என்றும் கூறியுள்ளது.

இந்தியாவில் உள்ள மில்லியன் கணக்கானோர் தற்போது டிஜிட்டல் பரிமாற்றத்திற்கு மாறியுள்ள நிலையில் இந்த வைஃபை சேவை என்பது வாடிக்கையாளர்களுக்கு மட்டுமின்றி நாட்டிற்கு மிகுந்த பயனுள்ள ஒரு சேவையாக பார்க்கப்படுகிறது.

இந்த சேவைக்காக ஓலா நிறுவனம் மாதம் 200TB டேட்டாவை வாங்கி சேமித்து வைக்க்க திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு ஓலா வாடிக்கையாளர்களும் சராசரியாக 20MB வரை இலவச வைஃபையை பயன்படுத்தி கொள்ளலாம்.

கடந்த 2014ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஓலா ஆட்டோ நிறுவனம் தற்போது 73 நகரங்களில் சுமார் 120,000 ஆட்டோக்களை இயக்கி வருகிறது. மேலும் ஆட்டோ சேவையை இன்னும் சில நகரங்களில் விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளது.

மேலும் ஓலா செயலி த்ற்போது ஆங்கிலம், பெங்காலி, குஜராத்தி, இந்தி, கன்னடம், மராத்தி, தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் செயல்பட்டு வருகிறது.

Best Mobiles in India

Read more about:
English summary
Ola soon expanded this offering to other categories including Mini, Lux, and Micro.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X