இந்தியா : பீம் ஆப் 16 மில்லியன் மக்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர்.!
இந்த செயலி கடந்த 2016 டிசம்பர் 30 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது, ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து ஒவ்வொரு மாதமும் மிகப்பெரிய வளர்ச்சியடைந்து வருகின்றது என மத்திய அரசு கூறியுள்ளது.
இந்தியாவில் மின்னணு பண பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் பீம் ஆப் உருவாக்கப்பட்டுள்ளது, மேலும் இவற்றின் மூலம் பல நன்மைகள் உள்ளது என மத்திய அரசுதகவல் தெரிவரித்துள்ளது. இந்த மொபைல் பேமெண்ட் ஆப் பொறுத்தவரை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்துவைத்தார், டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க இந்த திட்டம் தொடங்கப்பட்டது.
தற்போது இந்தியாவில் பீம் ஆப் 16 மில்லியன் மக்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர் என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது,மேலும் அதிகப்படியான மக்கள் இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய அதிக வாய்ப்பு உள்ளது.

2016 டிசம்பர் 30:
இந்த செயலி கடந்த 2016 டிசம்பர் 30 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது, ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து ஒவ்வொரு மாதமும் மிகப்பெரிய வளர்ச்சியடைந்து வருகின்றது என மத்திய அரசு கூறியுள்ளது.

4 மில்லியன்:
தற்சமயம் இந்தியாவில் பீம் செயலி 4மில்லியன் மக்கள் பயன்படுத்துகின்றனர், மேலும் அதிகப்படியான மக்கள் கூடிய விரைவில் இவற்றைப் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூகிள் ப்ளே ஸ்டோர்:
தற்போது பீம் ஆப் 1.3 பதிப்பு கூகிள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோரில் கிடைக்கிறது,விரைவில் புதிய 1.4 பதிப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

16 மில்லியன்:
இதுவரை 16 மில்லியன் மக்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர் என வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் ஏபி ஹோடா தகவல்தெரிவித்தார்.

மத்திய ரிசர்வ் வங்கி:
பீம் ஆப் பொதுவாக மத்திய ரிசர்வ் வங்கி மற்றும் இந்திய வங்கிகளின் கூட்டமைப்பு கொண்டு அறிமுகம் செய்யப்பட்டது,இவை உங்கள் மொபைல் மூலம் அனுப்பப்படும் பணம் முழுவதும் உங்கள் கணக்கில் பரிமாற்றம் செய்யப்பட்டுவிடும்எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயலிக்கு பதிவு செய்யும் போது டெபிட் கார்டு, வங்கி கணக்கில் இணைக்கப்பட்டுள்ள மொபைல் நம்பர் மூலம் தகவல்களை செயலியில் பெற முடியும்.


Click it and Unblock the Notifications