மோசடி அழைப்புகளை தடுக்க உதவும் கூகுள் போன் செயலி.!
இந்த புதிய வசதியானது ' அழைப்பவர் அடையாளம் மற்றும் மோசடி தடுப்பு' (காலர் ஐடி அண்ட் ஸ்பேம் ப்ரோடக்சன்) என்று அழைக்கப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக தேவையில்லாத மற்றும் தொல்லைதரும் அழைப்புகளுடன் சந்திக்கும் பிரச்சனைகள் பன்மடங்கு அதிகரித்துவிட்டது. என்னதான் பல்வேறு மூன்றாம் தரப்பு செயலிகள் இதற்கென பிரத்யோகமாக இருந்தாலும், பிரச்சினையை சரியாக கையாளமுடியாமல் தவிக்கின்றன.

தற்போது கூகுள் தனது புதிய வசதியின் மூலம் இப்பிரச்சனையை எதிர்கொள்ள காத்திருக்கிறது. மோசடி அழைப்புகளை கண்டறியும் புதிய வசதியுடன் கூடிய கூகுள் போன் செயலியின் பீட்டா வெர்சனை இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து பரிசோதிக்க துவங்கியுள்ளது கூகுள் நிறுவனம். மோசடி அழைப்புகளை தடுக்க பயனர்களுக்கு உதவும் வகையில் செயலியில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து கூகுள் போன் செயலிக்கான உதவி பக்கத்தில் கூகுள் நிறுவனம் அப்டேட் செய்துள்ளது.

இந்த புதிய வசதியானது ' அழைப்பவர் அடையாளம் மற்றும் மோசடி தடுப்பு' (காலர் ஐடி அண்ட் ஸ்பேம் ப்ரோடக்சன்) என்று அழைக்கப்படுகிறது. உதவி பக்கத்தில் அப்டேட் செய்யப்பட்ட தகவலின் படி, போன் செயலி இனி தானாகவே மோசடி அழைப்புகளை கண்டறிந்து தடுத்துவிடும். இந்த செயலி தேவையில்லாத அழைப்புகளை நேரிடையாக வாய்ஸ்மெயில்க்கு அனுப்பிவிடும். இந்த 'அழைப்பவர் அடையாளம் மற்றும் மோசடி தடுப்பு' வசதி செயல்பாட்டில் இருக்கும் போது நீங்கள் செய்யும் அழைப்புகள் மற்றும் உங்களுக்கு வரும் அழைப்புகளுக்கு உண்டான எண், உங்கள் கான்டேக்ட் பட்டியலில் இல்லையெனில் அது குறித்த தகவல்கள் மற்றும்மோசடி அழைப்புகள் குறித்த எச்சரிக்கைகள் காண்பிக்கப்படும்.

இந்த புதிய வசதியை செயல்படுத்த கீழ்கண்ட 3 எளிய வழிமுறையை பின்பற்றுங்கள்.
° கூகுள் போன் செயலியில் அமைப்புகள் (Setting) பகுதிக்கு செல்லவும்.
° 'அழைப்பவர் அடையாளம் மற்றும் மோசடி'(Caller ID & spam) தேர்வு செய்யவும்
°பின்னர் அதை ஆன் செய்யவும்.
உங்கள் போனிற்கு வரும் மோசடி அழைப்புகள் ரிங் ஆகாமல் தடுக்க, 'சந்தேகத்திற்கிடமான மோசடி அழைப்புகளை தடு'(Filter suspected spam calls) என்னும் வசதியை ஆன் செய்ய வேண்டும். இந்த வசதி முற்றிலும் தனிநபரின் விருப்பத்திற்கு உரியது. தேவைப்பட்டால் மட்டுமே வசதியை இயக்கிக்கொள்ளலாம்.

தற்போது உள்வரும் மோசடி அழைப்புகள் குறித்து எச்சரிக்கை செய்யயும் விதமாக 'போன் செயலி' மொபைல் திரையின் நிறத்தை சிவப்பாக மாற்றும். ஆனாலும் இச்செயலியின் செயல்பாடுகள் குறித்து கேள்விகள் எழாமலும் இல்லை. இந்த புதிய வசதி எவ்வளவு துல்லியமாக மற்றும் அதிதிறனுடன் செயல்படும் என்பது இன்னும் முழுவதும் தெளிவாக தெரியவில்லை. ஆனால் எதுவும் இல்லாததற்கு இந்த வசதி இருப்பது நல்லது தானே!


Click it and Unblock the Notifications