பசங்களா வந்து நில்லுங்க கிளாஸ் அட்டனென்ஸ்: செல்பீ அட்டகாசம்.!
பின்பு ஒரு ஆசிரியர் மற்ற ஆசிரியர்களுக்கு கற்பித்தல் வழிமுறைகளுடன் தொடர்புடைய வீடியோக்களை இந்த ஆப் வசதியில பதிவேற்ற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
இப்போது வரும் ஸ்மார்ட்போன்களில் உள்ள பல்வேறு தொழில்நுட்பம் நமது தினசரி வேலைகளை மிகவும் எளிமையாக்கும் வண்ணம் உள்ளது, அதன்படி ஸ்மார்ட்போன்களில் எடுக்கப்படும் செல்பீ புகைப்படங்களுக்கு இப்போது தனி கவுரவம் கிடைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

தற்சமயம் டேராடூன் மாநில கல்வித் துறை அமைப்பு ஸ்மார்ட்போன் ஆப் பயன்பாட்டை துவங்க திட்டமிட்டுள்ளது, அதன்படி பள்ளி ஆசிரியர்கள் தங்கள் வருகை குறிக்க இந்த ஆப் பயன்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழிமுறை பல்வேறு வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டேராடூன்
தேசியத் தலைநகர் புதுதில்லியிலிருந்து 230 கிலோ மீட்டர் தொலைவில் டேராடூன் நகரம் அமைந்துள்ளது. இந்நகரில் தேசிய எண்ணெய் மற்றும் எரிவாயு ஆணையம்இ இந்திய நில அளவை ஆணையம், இந்திய பெட்ரேலியக் கழகம் ஆகிய நிறுவனங்கள் அமைந்துள்ளது. மேலும் டேராடூன் சட்டக் கல்லூரி, வன ஆராய்ச்சி நிறுவனம்இ இராஷ்டிரிய இந்தியன் இராணுவக் கல்லூரி மற்றும் இராணுவ அகாதமி மற்றும் பன்னாட்டுப் பள்ளிகள் போன்ற கல்வி நிறுவனங்கள் இம்மாவட்டதில் இயங்குகிறது.

உத்தரகண்ட்:
பள்ளி ஆசிரியர்கள் தங்கள் வருகை குறிக்க இந்த ஸ்மார்ட்போன் ஆப் வெளியிட முடிவு செய்துள்ளது டேராடூன் மாநில கல்வித் துறை, மேலும்
இந்த சேவைக்கு "உஜ்வால் சேவா உத்தரகண்ட்" என்று பெயரிடப்பட்டுள்ளது.

முக்கிய அம்சம்:
இந்த ஆப் பயன்பாடு ஆசிரியர்களின் சுயசரிதையைப் பதிவேற்றுவதன் மூலம் அவர்களின் வருகைகளை குறிக்க உதவுகிறது. குறிப்பாக இந்த ஆப் பயன்பாட்டின் முக்கிய அம்சம் என்னவென்றால் அதிகாரிகள் ஆசிரியரின் வருகையை கண்காணிக்க முடியும்.

வீடியோ
பின்பு ஒரு ஆசிரியர் மற்ற ஆசிரியர்களுக்கு கற்பித்தல் வழிமுறைகளுடன் தொடர்புடைய வீடியோக்களை இந்த ஆப் வசதியில பதிவேற்ற
முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், மாணவர்களும் மாணவர்களுக்காக பயன்படுத்தப்படும் வீடியோக்களை பதிவேற்றலாம்.

பிரிஜ்பால் ரத்தோர்:
பிரிஜ்பால் ரத்தோர் என்பவர் இந்த ஆப் பயன்பாட்டை உருவாக்கியுள்ளார், மேலும் இந்த ஆப் பயன்பாட்டில் கல்வி துறை கொள்கைகளைப் பற்றிய தகவல் அடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஆப் பயன்பாடு


Click it and Unblock the Notifications








