இனி டிராபிக் போலீஸிடம் இதுமட்டும் காட்டுங்க போதும்: மத்திய அரசு உத்தரவு.!

டிராபிக் போலீஸ்ஸிடம் லைசென்ஸ் இல்லாமல் மாட்டிக்கொண்டால், அன்றைய நாள் அதைவிட மோசமாய் போகாதென்று என் பாட்டி கதை சொல்லி நான் கேட்டதுண்டு.

By Sharath
|

டிராபிக் போலீஸ்ஸிடம் லைசென்ஸ் இல்லாமல் மாட்டிக்கொண்டால், அன்றைய நாள் அதைவிட மோசமாய் போகாதென்று என் பாட்டி கதை சொல்லி நான் கேட்டதுண்டு. அன்று முதல் இன்று வரை இந்தப் பிரச்சனைக்கு தீர்வுஇல்லாமல் இருந்தது.

<strong>இவரின் முன்னால் சுந்தர் பிச்சை எல்லாம் குழந்தை மாதிரி.!</strong>இவரின் முன்னால் சுந்தர் பிச்சை எல்லாம் குழந்தை மாதிரி.!

லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுவது சட்டப்படி குற்றமே, ஆனால் வீட்டில் லைசென்ஸ் ஐ மறந்து வைத்துவிட்டு கடைக்கு வந்தால் கூட குற்றம் என்பது, நமது ஊரில் மட்டும் நடக்கிற ஒரு கூத்து. அதற்கு அபராதம் கட்ட வேண்டிய நிலையும் கூட இங்கு மட்டுமே நடந்து வருகிறது.

டிஜிட்டல் ஆவணங்களை பயன்படுத்தலாம்

டிஜிட்டல் ஆவணங்களை பயன்படுத்தலாம்

லைசன்ஸை வீட்டில் மறந்து வைத்துவிட்டு, அதன் டிஜிட்டல் காப்பியைக் காட்டினால் அதை பொதுவாக எந்த மாநில போலீசும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இதற்காகத் தேவையில்லாமல் அபராதம் கட்ட வேண்டி இருக்கும். ஆனால் அந்த நிலை இனி நீடிக்காது. இனி லைசன்ஸ், ஆர்சி புக் உள்ளிட்ட வாகனம் ஓட்டத் தேவையான ஆவணங்களை மக்கள் டிஜிட்டல் காப்பிகளாக பயன்படுத்தலாம் என்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அங்கீகரித்த லாக்கர் செயலி

அங்கீகரித்த லாக்கர் செயலி

பொதுவாகச் சாலைகள் மற்றும் சிக்னல்களில் வாகனங்களை வழிமறித்து நிறுத்தும் போலீசாரிடம் வெறுமனே சேவ் செய்திருக்கும் காப்பிகளை காட்டினாள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது . டிஜி லாக்கர், எம்பரிவாகன் உள்ளிட்ட அரசு அங்கீகரித்த லாக்கர் செயலிகளில் பாதுகாப்பாக சேவ் செய்யப்பட்ட ஆவணங்களைக் காட்ட வேண்டும். அப்போது மட்டுமே இந்த ஆவணங்கள் செல்லுபடியாகும். அனைத்து மாநிலத்திற்கும் இந்தச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் முழுமையாக இது நடைமுறைக்கு வரவில்லை.

டிஜி லாக்கர்(DigiLocker)

டிஜி லாக்கர்(DigiLocker)

உங்கள் கூகுள் பிளேஸ்டோர் இல் டிஜி லாக்கர்(DigiLocker) என டைப் செய்து இந்திய அரசினால் வெளியிடப்பட டிஜிலாக்கர் செயலியை டவுன்லோட் செய்துகொள்ளுங்கள். இந்தச் செயலியில் உங்கள் ஓட்டுனர் உரிமத்திற்கான அடையாள ஆவணத்தை லாக்கர் இல் சேர்த்துக்கொள்ளுங்கள். இந்த டிஜிலாக்கர் இல் அரசு வழங்கிய அனைத்து தனிப்பட்ட அவங்களையும் சேமித்து வைத்துக்கொள்ளாம் என்பதே தனி சிறப்பு.

எம்பரிவாகன்(mParivahan)

எம்பரிவாகன்(mParivahan)

உங்கள் கூகுள் பிளேஸ்டோர் இல் எம்பரிவாகன்(mParivahan) என டைப் செய்து இந்திய அரசினால் வெளியிடப்பட டிஜிலாக்கர் செயலியை டவுன்லோட் செய்துகொள்ளுங்கள். இந்தச் செயலியிலும் உங்கள் ஓட்டினர் உரிமத்திற்கான அடையாள ஆவணங்களைச் சேர்த்துக்கொள்ளலாம்.
இனி போலீசாரிடம் இந்தச் செயலிகளில் ஆவணங்களைக் காட்டினாள் போதும்.

லைசென்ஸ் ஆன்லைன் இல் வாங்கலாம்

லைசென்ஸ் ஆன்லைன் இல் வாங்கலாம்

லைசென்ஸ் இல்லையே என்ற கவலை வேண்டாம். இனி உங்கள் லைசென்ஸ் ஐ ஆன்லைன் இல் வாங்கலாம். www.parivahan.gov.in வலைத்தளத்திற்குச் சென்று உங்களுக்கான ஓட்டுனர் உரிமத்தைப் பெற்றுக்கொள்ளலாம். உங்கள் முதல் ஓட்டுனர் உரிம சான்றிதழ் அப்ளை செய்வதற்கு முன் உங்கள் கற்றுணர் உரிமம் வாங்குவது மிக அவசியம். கற்றுணர் உரிமம் வாங்கிய அடுத்த 30 நாட்களுக்கு பிறகே ஓட்டுனர் உரிமம் எடுக்க அனுமதி உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Now drive without driving licence keep soft copy in DigiLocker app : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X