Home
Apps

இனிமே லோக்கல் ட்ரைன் டிக்கெட் எடுக்க வருசையில் நிற்க தேவையில்லை.!

சென்னை போன்ற பல்வேறு நகரங்களில் லோக்கல் ட்ரைன் தான் மக்களுக்கு அதிகம் பயன்படும், எனவே இந்த யூடிஎஸ் மொபைல் செயலி கண்டிப்பாக லோக்கல் ட்ரைன் பயன்படுத்தும் அனைத்து மக்களுக்கும் பயன்படும்.

By Prakash S

பொதுவாக இப்போது வரும் புதிய தொழில்நுட்பங்கள் அனைத்தும் பல்வேறு இடங்களில் அதிகமாகப்பயன்படும் வகையில் உள்ளது, குறிப்பாக மத்திய அரசு பல்வேறு புதிய திட்டங்களை கொண்டுவந்த வண்ணம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்சமயம் ஐஆர்சிடிசி சார்பில் யூடிஎஸ் என்ற மொபைல் செயலி வெளியிடப்பட்டுள்ளது.

பொதுவாக ஐஆர்சிடிசி வலைதளத்தில் எப்படி ரயில் டிக்கெட் புக் செய்ய முடியுமோ, அதேபோன்று இந்த யூடிஎஸ் மொபைல் செயலியில் மிக எளிமையாக டிக்கெட் புக் செய்ய முடியும். குறிப்பாக முன்பதிவு டிக்கெட் போன்றவற்றை நொடியில் புக் செய்ய முடியும் என்று ஐஆர்சிடிசி சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இ-வாலட்:

இ-வாலட்:

தற்சமயம் இ-வாலட் மூலம் ரயில் முன்பதிவு செய்யும் வசதியை பயனிகளுக்கு அறிமுகம் செய்துள்ளது ஐஆர்சிடிசி, மேலும் ஐஆர்சிடிசி-ன் ரயில் கனெக்ட் செயலில் இ-வாலட் மூலம் பயணிகள் ரயில் பயண சீட்டுகளை முன்பதி செய்துகொள்ள முடியும். பின்பு யூடிஎஸ் மொபைல் செயலி மூலம் நீங்கள் டிக்கெட் புக் செய்தால் இந்த இ-வாலட் மூலம் எளிமையாக கட்டணத்தை செலுத்த முடியும்.

சென்னை:

சென்னை:

சென்னை போன்ற பல்வேறு நகரங்களில் லோக்கல் ட்ரைன் தான் மக்களுக்கு அதிகம் பயன்படும், எனவே இந்த யூடிஎஸ் மொபைல் செயலி கண்டிப்பாக லோக்கல் ட்ரைன் பயன்படுத்தும் அனைத்து மக்களுக்கும் பயன்படும். மேலும் இந்த செயலியின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

கூகுள் பிளே ஸ்டோர்:

கூகுள் பிளே ஸ்டோர்:

உங்கள் ஸ்மார்ட்போனில் இருக்கும் கூகுள் பிளே ஸ்டோரில் இந்த யூடிஎஸ் (UTS Centre for Railway Information SystemsTravel & Local) செயலியை பதிவிறக்கம் செய்தபின்பு இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

தகவல்கள்:

தகவல்கள்:

அடுத்து இந்த செயலியை ஒபன் செய்தபின்பு உங்களுடைய பெயர், மொபைல் நம்பர், பிறந்த தேதி, கடவுச்சொல்,பின்பு ஆதார் அட்டை எண் அல்லது வாக்களார் அட்டை எண் போன்ற அனைத்து தகவல்களும் அந்த செயலியில் கொடுக்க வேண்டும்.

ஒடிபி:

ஒடிபி:

நீங்கள் யூடிஎஸ் மொபைல் செயலியில் அனைத்து தகவல்களையும் கொடுத்தபின்பு ஒடிபி அனுப்பிவைக்கப்படும், பின்பு ஒடிபி-யை அந்த
செயலியில் கொடுத்து பயன்படுத்த வேண்டும். மேலும் யூடிஎஸ் செயலியில் பயனம் சார்ந்த தகவல், டிக்கெட் புக்கிங், கட்டணம், டிக்கெட் ரத்து, இ-வாலட் போன்ற அனைத்தையும் மிக எளிமையாக பயன்படுத்த முடியும்.

பிஎன்ஆர்:

பிஎன்ஆர்:

பொதுவாக ரயில் புறப்படும் இடத்தில் இருந்து சேருமிடம் வரை முழுவதும் ரத்து செய்யப்படும்போது ஐஆர்சிடிசியில் முன்பதிவு செய்தவர்களுக்கு பயணச்சீட்டுக்கான பிஎன்ஆர் தானாகவே ரத்தாகி அதற்குரிய கட்டணம், அவர்கள் எந்தக் கணக்கில் இருந்து செலுத்தினார்களோ அந்தக் கணக்கிலேயே வரவு வைக்கப்படும் நடைமுறை இப்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

How to find out where you can get your Aadhaar card (TAMIL GIZBOT)
 புதிய திட்டம்:

புதிய திட்டம்:

மேலும் ரயில் பயணத்தின் போது ரயிலில் வழங்கப்படும் உணவுகளை வாங்குவதர்கள் தங்கள் கைகளில் எப்போதும் பணம் வைத்திருத்தல் அவசியமாகிறது. அதற்கான சில்லைறை இல்லையெனும் போதும், அல்லது பணமாக இல்லாமல் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் மூலம் பொருட்களை வாங்கும் நபர்கள் தொடர்ந்து அவதிப் பட்டு தான் வருகின்றனர். இந்நிலையில் பயணிகளின் இந்த அவதியினை போக்கும் வகையினில் ரயில்களில் POS இயந்திரங்களை பயன்படுத்தி பயணிகளிடம் பணம் பெற வழிவகை செய்யும் வகையில் ரயில்வே திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Now Book Unreserved Railway Tickets Through UTS Mobile App; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X