Home
Apps

நோக்கியா 8.1: ஆண்ட்ராய்டு 9 பை கொண்ட ஒரு அழகான ஃபோன்

தனது முன்னணி தயாரிப்புகளின் வரிசையில், புதிய அறிமுகமாக நோக்கியா 8.1 ஸ்மார்ட்போனை குறித்து HMD க்ளோபல் நிறுவனம் அறிவித்துள்ளது.

தனது முன்னணி தயாரிப்புகளின் வரிசையில், புதிய அறிமுகமாக நோக்கியா 8.1 ஸ்மார்ட்போனை குறித்து HMD க்ளோபல் நிறுவனம் அறிவித்துள்ளது.

தனது முன்னணி தயாரிப்புகளின் வரிசையில், புதிய அறிமுகமாக நோக்கியா 8.1 ஸ்மார்ட்போனை குறித்து HMD க்ளோபல் நிறுவனம் அறிவித்துள்ளது. 2018 டிசம்பர் 21 ஆம் தேதி முதல் இந்த புதிய ஸ்மார்ட்போன், இந்தியாவில் உள்ள எல்லா முக்கிய விற்பனை நிலையங்களிலும் கிடைக்கும். Nokia.com/phones மற்றும் Amazon.in ஆகியவற்றில், 4GB/64GB வகையை ரூ.26,999 என்ற விலை நிர்ணயத்தில் பெறலாம்.

வடிவமைப்பு மற்றும் திரை

வடிவமைப்பு மற்றும் திரை

- நோக்கியா 8.1 இல் ஒரு சிறந்த கட்டமைப்பு மற்றும் வட்ட முனைகளை கொண்டு, கச்சிதமாகவும், ஒரு கையில் பயன்படுத்த ஏதுவாகவும் உள்ளது. தற்போது வழக்கமாகி வருவது போல, ஒரு கிளாஸ் பின்புறத்துடன் ஒளிர்வு தன்மையை கொண்டு கவர்ச்சிகரமாக உள்ளது.

- இந்த ஸ்மார்ட்போனின் வலதுபுறத்தில், ஒலி கட்டுப்படுத்திகள், பவர் பட்டன் ஆகியவை உள்ளன. இடதுபுறத்தில் இரட்டை சிம் ஸ்லாட் உள்ளது.

- மேற்புறத்தில் 3.5 மிமீ ஆடியோ ஜெக் அமைப்பும், கீழே USB டைப்-C யும் காணப்படுகிறது. இது கூட பின்புறத்தில் ஒரு சியஸ் பிராண்டிக் மற்றும் கைரேகை சென்ஸர் ஆகியவற்றை கொண்டுள்ளது.

- ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது, இந்த ஸ்மார்ட்போன் பிரிமியம் தன்மையோடு, கையில் வைத்து கொள்ள சிறப்பாக உள்ளது. பின்னால் பேனலில் கைரேகை இருப்பது, தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.

ஃபோன் திரை

ஃபோன் திரை

ஃபோன் திரையை பொறுத்த வரை, 6.18 இன்ச் முழு HD+ முனையில் இருந்து முனை வரை 1080p பகுப்பாய்வு உடன் 18.7:9 விகித அம்சத்தோடு உள்ளது. உயர்தர கான்ஸ்ட்ராட் மற்றும் சிறந்த தெளிவை கொண்ட HDR 10 ஆதரவை பெற்றுள்ளது.இந்த திரையின் தொடு உணர்வு சிறப்பாகவும், தேவைக்கேற்ப ஒளிர்வு நிலைகளையும் பெற்றுள்ளது. நேரடி சூரிய ஒளியில் இந்த திரையை நாங்கள் சோதித்து பார்க்கவில்லை. எனவே சூரிய ஒளியில் இதன் செயல்பாட்டை குறித்து எதுவும் கூற முடியாது.

ஹார்டுவேர் மற்றும் சாஃப்ட்வேர்

ஹார்டுவேர் மற்றும் சாஃப்ட்வேர்

இந்த ஸ்மார்ட்போனை ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 செயலி உடன் 4GB ரேம் மற்றும் 64GB சேமிப்பகம் ஆகியவற்றை பெற்று, ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 400GB வரை நினைவகத்தை விரிவாக்கம் செய்ய முடியும்.

6GB ரேம், 64GB நினைவகம் கொண்டு 256GB வரை விரிவாக்கம் செய்யக் கூடியதும், இரட்டை நானோ சிம் உடன் 25,990 விலையில் கிடைக்கும் விவோ V11 உடன் நேரடி போட்டியை இந்த ஸ்மார்ட்போன் நிகழ்த்த உள்ளது. நாங்கள் பயன்படுத்திய குறுகிய காலஅளவில் எந்தொரு அப்ளிகேஷனையும் இயக்க, எந்தொரு பிரச்சனையும் திணறலையும் எதிர்கொள்ளவில்லை.

சாஃப்ட்வேரை பொறுத்த வரை, நவீனமான ஆண்ட்ராய்டு 9.0 பை பெற்றுள்ளது. இது சில நவீன ஓஎஸ் அளிக்கும் சில பிராண்டுகளில் மட்டுமே காணப்படுவது குறிப்பிடத்தக்கது. அடிப்படை பயன்பாடுகள், இன்டர்நெட் உபயோகம், குறைந்த வேகத்திலான கேம்கள் ஆகியவற்றை இயக்குவதில், இந்த சாதனம் எந்த திணறலையும் எதிர்கொள்ளவில்லை.

கேமரா

கேமரா

நோக்கியா 8.1 போனில் இரட்டை கேமரா அமைப்பு காணப்படுகிறது. f/1.8 துளை முதன்மை லென்ஸ் 2MP உடன் 1/2.55" சென்ஸர் உடன் 1.4um பிக்சல்கள் மற்றும் 13 மெகாபிக்சல் இரண்டாவது சென்ஸர் உடன் f/2.2 துளை மற்றும் சியஸ் ஆப்டிக்ஸ் கொண்டுள்ளது.

முன்பக்கத்தை பொறுத்த வரை, f/2.0 துளை கொண்ட 20 மெகாபிக்சல் கேமரா காணப்படுகிறது.

மேற்கண்ட இரண்டு கேமராக்களையும் நாங்கள் சோதித்து பார்த்தோம். இதில் வந்த படங்களில், 6.18" முழு HD+ திரையில் தெளிவாக விவரங்களை காண முடிந்தது. ஆனால் இது சிறந்த ஒளி உள்ள நிலையில் எடுக்கப்பட்டவை.

பேட்டரி மற்றும் இணைப்பு

பேட்டரி மற்றும் இணைப்பு

இந்த புதிய ஸ்மார்ட்போனை 3500mAh பேட்டரி இயக்குகிறது. இது 22 மணி நேர டாக் டைம் அளிப்பதாக கூறப்படுகிறது. 11 மணி நேரங்கள் வீடியோ ப்ளேபேக் அளிக்கும். 24 மணிநேரங்கள் ஸ்டான்ட் பேக் நிலையில் இருக்கும். இணைப்பு தன்மையை பொறுத்த வரை, வைஃபை 802.11 ac, ப்ளூடூத் 5, GPS + GLONASS, USB டைப்-C மற்றும் 4G வோல்ட் ஆகியவற்றை பெற்றுள்ளது

தீர்ப்பு

நோக்கிய 8.1 ஃபோன் பார்வைக்கு நன்றாக இருப்பதோடு, ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 செயலி போன்ற அம்சங்களைத் தாங்கி வருகிறது. ஆனால் இந்தப் பிரிவில் உள்ள பல பிராண்டுகள் உடன் இந்த ஸ்மார்ட்போன் போட்டியிட வேண்டியுள்ளது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இதை மனதில் வைத்துள்ள இந்த நிறுவனம், ஏற்கனவே களத்தில் உள்ள சீன ஸ்மார்ட்போன் பிராண்டுகளுடன் நேருக்கு நேர் மோதுவதற்கான சில முன்னேற்பாடுகளுடன் இந்த நிறுவனம் களமிறங்கி உள்ளது என்று கூறலாம். இதன்மூலம் வாடிக்கையாளர்களின் முதல் தேர்வாக இது அமையலாம் என்று தெரிகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Nokia 8-1 First Impressions : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X