இதைவிட மோசமாக இனி யாரும் கூகுள் மேப்ஸ்-ஐ பயன்படுத்த முடியாது.! உறைந்த ஆற்றில் சாக தெரிஞ்சேன்!

|

ஸ்மார்ட்போன் பயனர்கள் அனைவரும் பயன்படுத்தும் மிகவும் பயனுள்ள பயன்பாடுகளில் கூகிள் மேப்ஸ் மிக முக்கியமான பயன்பாடாகும். கூகிள் மேப்ஸ் செயலியை உலகில் கிட்டத்தட்டப் பல மில்லியன் பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். உலகில் உள்ள அனைத்து இடங்களின் துல்லியமான திசைகளை நொடியில் உங்கள் கையில் இந்த செயலி கொண்டு வந்து சேர்க்கிறது.

15வது பிறந்தநாளைக் கொண்டாடியதும் முதல் புகார்

15வது பிறந்தநாளைக் கொண்டாடியதும் முதல் புகார்

சமீபத்தில் தான், பயன்பாட்டிற்கான புதிய ஐகான் வடிவமைப்பு உள்ளிட்ட பல புதிய அம்சங்களை அறிவித்து, கூகிள் பயன்பாட்டின் 15வது பிறந்தநாளைக் கூகிள் நிறுவனம் கொண்டாடியது. பயனர்களால் அவ்வப்போது கூகிள் மேப்ஸ் மீது சில புகார்கள் அளிக்கப்படும். ஆனால், அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் தான் உறைந்த ஆற்றில் விழுந்ததற்குக் கூகிள் மேப்ஸ் தான் காரணம் என்று புகாரளித்துள்ளார்.

நள்ளிரவில் உறைந்த ஆற்றை கடந்த நபர்

நள்ளிரவில் உறைந்த ஆற்றை கடந்த நபர்

இந்த சம்பவம் அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தில் உள்ள மினியாபோலிஸ் நகரில் இரவு நேரத்தில் நடந்தேறியுள்ளது. அதிகாலை 3:00 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக உள்ளூர் செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உறைந்த மினியாபோலிஸ் ஆற்றைக் நடைப்பயணம் மூலம் கடக்கக் கூகிள் மேப்ஸ் அவரை வழிநடத்தியதாக அந்த நபர் தெரிவித்துள்ளார்.

உடனே இந்த 9 அப்ஸ்களை டெலீட் செய்யுங்கள்! இல்லைனா உங்க அக்கௌன்ட் ஹேக் செய்யப்படும்!உடனே இந்த 9 அப்ஸ்களை டெலீட் செய்யுங்கள்! இல்லைனா உங்க அக்கௌன்ட் ஹேக் செய்யப்படும்!

கூகிள் மேப்ஸ்-ன் அறிவுரைப்படி

கூகிள் மேப்ஸ்-ன் அறிவுரைப்படி "நடந்தேன்"

அந்த நபர் கூகிள் மேப்ஸ்-ன் அறிவுரைப்படி உறைந்த ஆற்றின் மேல் நடந்து, ஆற்றைக் கடக்க முயன்றிருக்கிறார். எதிர்பாராத விதமாகப் பனிக்கட்டி உடைந்து ஆற்றின் உள் விழுந்திருக்கிறார். கரையை ஒட்டிய தாழ்வான இடத்தில் உறைந்த நீருக்குள் பாதி மூழ்கியிருக்கிறார். பின் சரியான நேரத்தில் அவர் தீயணைப்பு வீரர்களால் மீட்கப்பட்டிருக்கிறார்.

உண்மை என்ன தெரியுமா?

உண்மை என்ன தெரியுமா?

தீயணைப்பு வீரர்கள் அவரை மீட்ட பின், ஏன் ஆற்றின் குறுக்கே நடக்க முயன்றார் என்று கேட்டபோது, ​​கூகிள் மேப்ஸ் ஆற்றைக் கடக்க அறிவுறுத்தியதாகக் கூறியுள்ளார். உண்மையில் கூகிள் மேப்ஸ் அருகிலிருந்த ஸ்டோன் ஆர்ச் பாலத்தைப் பயன்படுத்தி ஆற்றைக் கடக்கச் சொல்லியுள்ளது. அந்த நபர் அதைச் சரியாகக் கவனிக்காமல் ஆற்றின் குறுக்கே நடந்துள்ளார்.

BSNL 4G Plans:இன்ப அதிர்ச்சி கொடுத்த பிஎஸ்என்எல் 4ஜி: தினசரி 10ஜிபி டேட்டா.! 84நாட்கள் வேலிடிட்டி..!BSNL 4G Plans:இன்ப அதிர்ச்சி கொடுத்த பிஎஸ்என்எல் 4ஜி: தினசரி 10ஜிபி டேட்டா.! 84நாட்கள் வேலிடிட்டி..!

அறிவு இல்லாமல் அறிவுரையை பின்பற்றினேன் ஆற்றில் விழுந்தேன்

அறிவு இல்லாமல் அறிவுரையை பின்பற்றினேன் ஆற்றில் விழுந்தேன்

தீயணைப்புத் துறையினரும் கூகிள் மேப்ஸ் அருகிலிருந்த பாலத்தைப் பயன்படுத்தித் தான் ஆற்றைக் கடக்கக் கூறியுள்ளது என்று தெளிவாகக் கூறியுள்ளனர். கூகிள் மேப்ஸ் பயன்பாட்டில் சிறிய கோளாறுகள் இருக்கக் கூடும் ஆனால், கூகிள் ஒருபோதும் ஆற்றின் மேல் நடக்க வலியுறுத்தாது என்று நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

கூகிள் மேப்ஸ்-ல் உங்களுக்கு தெறியாத அம்சம் இதுதான்

கூகிள் மேப்ஸ்-ல் உங்களுக்கு தெறியாத அம்சம் இதுதான்

குறிப்பாகக் கூகிள் மேப்ஸில் பல புதிய அம்சங்கள், பல புதிய புதுப்பிப்புகளுடன் தொடர்ச்சியாக மேம்படுத்தப்பட்டு வருகிறது. பயனர் செல்லும் வழியில் அல்லது சாலையில் ஏதேனும் விபத்துக்கள் அல்லது இயற்கை பேரழிவுகள் போன்றவற்றால் ஏதேனும் சாலைத் தடைகள் உள்ளதா என்பதை தெரியப்படுத்தும் வகையில் கூகிள் மேப்ஸ்உருவாக்கப்பட்டுள்ளது.

Jio ப்ரீபெய்ட்: தினமும் 1.5ஜிபி டேட்டா; ரூ.199 முதல் 365 நாட்கள் வரை! சிறப்பான திட்டங்கள் இதுதான்!Jio ப்ரீபெய்ட்: தினமும் 1.5ஜிபி டேட்டா; ரூ.199 முதல் 365 நாட்கள் வரை! சிறப்பான திட்டங்கள் இதுதான்!

ஒருபோதும் கூகிள் மேப்ஸ் இதை செய்யாது

ஒருபோதும் கூகிள் மேப்ஸ் இதை செய்யாது

நீங்கள் செல்லும் வழியில் ஏதேனும் தடைகள் இருந்தால் உடனேஉங்களுக்குத் தெரியப்படுத்தவும், உங்கள் இடத்தை அடைய, அருகில் உள்ளமறு வழியை உடனே வழங்குவது போன்ற பல அம்சங்கள் கூகிள் மேப்ஸ் பயன்பாட்டில் உள்ளது என்று கூகிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. எப்பொழுதும் தனது பயனரைஆற்றின் மேல் நடக்க கூறாது என்றும்தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
No One Can Use Google Maps Worse Than This Man Falls Into Frozen River : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X