Home
Apps

ரூ.1,000 FASTag ரீசார்ஜ் இலவசம்.. இந்த ஒரு விஷயத்தைச் செய்தால் போதும்.. இதோ முழு விவரம்..

இந்திய தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் கழிப்பறைகள் சுத்தமின்றி இருந்தால், அதைப் புகைப்படம் எடுத்து 'ராஜ்மார்க் யாத்ரா' (Rajmarg Yatra) செயலி மூலம் புகார் அளிக்கலாம். இவ்வாறு புகார் அளிப்பவர்களுக்கு ரூ.1,000 மதிப்பிலான ஃபாஸ்டேக் (FASTag) ரீசார்ஜ் வெகுமதியாக வழங்கப்படும் என இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) அறிவித்துள்ளது.

அதாவது நெடுஞ்சாலைகளில் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.

ரூ.1,000 FASTag ரீசார்ஜ் இலவசம்.. இந்த ஒரு விஷயத்தைச் செய்தால் போதும்.

தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகளின் வசதிக்காக, சுங்கச்சாவடிகளில் கழிப்பறை மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாகப் பராமரிக்கப்பட வேண்டும் என இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக, கழிப்பறைகளைத் தூய்மையாக வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சுங்கச்சாவடிகளில் உள்ள கழிப்பறைகள் முறையாகப் பராமரிக்கப்படாவிட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபடும் நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படுவதுடன், அவை கருப்புப் பட்டியலிலும் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.

சுங்கச்சாவடிகளில் உள்ள கழிப்பறைகள் அசுத்தமாக இருந்தாலோ, தண்ணீர் வசதி இல்லாமல் இருந்தாலோ வாகன ஓட்டிகள் புகார் அளிக்கலாம். இந்தப் புகார்களின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட பராமரிப்பு நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும். பயணிகளுக்கு சுத்தமான கழிப்பறை மற்றும் அடிப்படை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்வதுடன், நெடுஞ்சாலைப் பயணத்தை எளிதாகவும் வசதியாகவும் மாற்றும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

அதேபோல் சுங்கச்சாவடிகளில் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளில் குறைபாடுகள் இருந்தால், பொதுமக்கள் உடனடியாகப் புகார் அளிக்கலாம். இதற்காக சுங்கச்சாவடிகளில் உள்ள புகார் புத்தகத்தைப் பயன்படுத்தலாம். மேலும், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) அவசர உதவி எண்ணான 1033-ஐத் தொடர்புகொண்டும் புகார் தெரிவிக்கலாம்.

இதற்கிடையே, மத்திய அரசின் 'சிறப்பு இயக்கம் 5.0' திட்டத்தின் கீழ், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) 'தூய்மையான கழிப்பறை புகைப்படச் சவால்' என்ற புதிய திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட இந்த திட்டம் தற்போது நீட்டிக்கப்பட்டு 2027-ம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த திட்டம் மூலம் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் கழிப்பறைகள் அசுத்தமாக இருந்தால், பயணிகள் 'ராஜ்மார்க் யாத்ரா' செயலி மூலம் புகார் அளிக்கலாம். இதற்காக, கழிப்பறையின் புகைப்படத்தை அது இருக்கும் இடத்தைக் குறிப்பிடும் வகையில் (Geo-tagged) பதிவேற்ற வேண்டும். புகாரின் உண்மைத்தன்மை சரிபார்க்கப்பட்ட பிறகு, புகார் அளித்தவரின் வாகனத்துடன் இணைக்கப்பட்ட ஃபாஸ்டேக் கணக்கில் ரூ.1,000 ரீசார்ஜ் வெகுமதியாக வழங்கப்படும்.

முக்கிய விதிமுறைகள்
புகார் அளிக்கும்போது, கழிப்பறை அசுத்தமாக இருப்பதைத் தெளிவாகக் காட்டும் புகைப்படத்தை 'ராஜ்மார்க் யாத்ரா' செயலியில் பதிவேற்ற வேண்டும். அந்தப் புகைப்படத்தில் இடம் மற்றும் நேரம் பதிவாகியிருக்க வேண்டும். மேலும், இந்த வெகுமதி NHAI நேரடியாகப் பராமரிக்கும் சுங்கச்சாவடி கழிப்பறைகளுக்கு மட்டுமே பொருந்தும். பெட்ரோல் பங்குகள், தாபாக்கள் மற்றும் தனியார் இடங்களில் உள்ள கழிப்பறைகளுக்கு இந்தச் சலுகை கிடையாது.

ரூ.1,000 FASTag ரீசார்ஜ் இலவசம்.. இந்த ஒரு விஷயத்தைச் செய்தால் போதும்.

புகார் அளிப்பதற்கு முன்பு, சம்பந்தப்பட்ட கழிப்பறை NHAI பராமரிப்பில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு வாகனப் பதிவு எண்ணுக்கும் ஒருமுறை மட்டுமே வெகுமதி வழங்கப்படும். போலியான புகைப்படங்கள், திருத்தப்பட்ட படங்கள் மற்றும் ஏற்கெனவே பதிவேற்றப்பட்ட புகைப்படங்கள் நிராகரிக்கப்படும். மேலும், ஒரு சுங்கச்சாவடியில் ஒரே நாளில் முதலில் வரும் தகுதியான புகாருக்கு மட்டுமே வெகுமதி வழங்கப்படும்.

புகார்கள் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் அதிகாரிகள் மூலம் சரிபார்க்கப்பட்ட பின்னரே, ரூ.1,000 வெகுமதி நேரடியாக ஃபாஸ்டேக் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்தத் தொகையை ரொக்கமாகப் பெறவோ, மற்றவர்களுக்கு மாற்றவோ முடியாது. புகார் அளிப்பவர்கள் தங்களது பெயர், இருப்பிடம், வாகனப் பதிவு எண் மற்றும் மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களையும் வழங்க வேண்டும். நெடுஞ்சாலைகளில் தூய்மையைப் பராமரிப்பதுடன், இந்தப் பணியில் பொதுமக்களையும் ஈடுபடுத்தும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

Best Mobiles in India

English summary
NHAI to Offer Rs 1000 FASTag Recharge for Reporting Dirty Toll Plaza Toilets: How to Claim Reward
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X