WhatsApp-இன் டெலிட் மெசேஜ் அம்சத்தில் புதிய விருப்பம்; மக்கள் வரவேற்பு!

|

நம்மில் பலரும் "Come" க்கு பதிலாக "Home" என்று டைப் செய்து மெசேஜ் அனுப்பிய அனுபவத்தை பெற்று இருப்போம். WhatsApp-இல் அவசர அவசரமாக டைப் செய்யும் போது தவறுகள் ஏற்படுவது சகஜம்.

முன்னதாக அதற்கு "Sorry.. Typo Error" என்று கூறி மன்னிப்பு கேட்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. ஆனால் தற்போது அப்படி இல்லை. ஏதேனும் தவறாக டைப் செய்து அனுப்பி இருந்தால், அதை உடனே Delete செய்யும் அம்சம் அணுக கிடைக்கிறது.

ஆனால் அதிலும் ஒரு சிக்கல் உள்ளது!

ஆனால் அதிலும் ஒரு சிக்கல் உள்ளது!

சில நேரங்களில், "தவறான" மெசேஜை டெலிட் செய்வதற்கு பதிலாக, அருகில் இருக்கும் மற்றொரு மெசேஜை டெலிட் செய்யும் "சம்பவங்களையும்" நாம் செய்து இருப்போம்.

குறிப்பாக அது ஒரு நீளமான மெசேஜ் ஆக இருந்தால்.. அல்லது மிகவும் முக்கியமான ஒரு மெசேஜ் ஆக இருந்தால்... அந்த கொடுமையை.. அந்த வலியை.. வார்த்தைகளால் விவரிக்க முடியாது!

WhatsApp யூஸ் பண்றீங்களா? அப்போ மனச தேத்திக்கோங்க! இப்போதைக்கு அது நடக்காது!WhatsApp யூஸ் பண்றீங்களா? அப்போ மனச தேத்திக்கோங்க! இப்போதைக்கு அது நடக்காது!

அந்த வலியை தீர்க்க வரும் புதிய ‘UNDO’ பட்டன்!

அந்த வலியை தீர்க்க வரும் புதிய ‘UNDO’ பட்டன்!

ஆம்! வாட்ஸ்அப் நிறுவனம் அதன் பயனர்களுக்கு ஒரு சுவாரஸ்யமான அம்சத்தை வெளியிட உள்ளது, அது அவர்கள் தவறுதலாக நீக்கிய மெசேஜ்களை "மீட்டெடுக்க" உதவும்!

WABetaInfo வலைத்தளத்தின்படி, இந்த UNDO அம்சம் ஆனது ''Deleted for Me' என்கிற விருப்பத்தின் கீழ் தவறுதலாக டெலிட் செய்யப்பட்ட ஒரு மெசேஜை, அடுத்த சில நொடிகளில் மீட்டெடுக்க உதவும்.

இது எல்லோருக்கும் அணுக கிடைக்கிறதா?

இது எல்லோருக்கும் அணுக கிடைக்கிறதா?

இல்லை! தற்போது வரையிலாக, வாட்ஸ்அப் டெலிட் மெசேஜஸிற்கான இந்த அன்டூ அம்சமானது பீட்டா பயனர்களுக்கு மட்டுமே அணுக கிடைக்கிறது.

ஒருவேளை நீங்கள் ஒரு வாட்ஸ்அப் பீட்டா யூசர் என்றால், வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு வெர்ஷன் ஆன 2.22.18.13 இல் இந்த அம்சத்தை முயற்சிக்கலாம்.

இந்த அம்சம் ஏற்கனவே பீட்டா வெர்ஷனுக்கு வந்துள்ளதால், ஆப்பின் ஸ்டாண்டர்ட் வெர்ஷனிலும் விரைவில் தோன்றும் என்று நாம் எதிர்பார்க்கலாம். இருப்பினும், இது அனைவருக்கும் எப்போது கிடைக்கும் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.

இங்கிலிஷ் தெரியாத எல்லோருமே இந்த மொபைல் செட்டிங்-ஐ கட்டாயம் தெரிஞ்சுக்கனும்!இங்கிலிஷ் தெரியாத எல்லோருமே இந்த மொபைல் செட்டிங்-ஐ கட்டாயம் தெரிஞ்சுக்கனும்!

Undo-வை விட வெயிட்டான இன்னொரு அம்சம்!

Undo-வை விட வெயிட்டான இன்னொரு அம்சம்!

மெட்டாவுக்கு (முன்னதாக பேஸ்புக்) சொந்தமான வாட்ஸ்அப் நிறுவனம் ஆனது 'அன்டூ' பட்டனை விட மிகவும் எதிர்பார்க்கப்படும் வேறொரு அம்சத்திலும் வேலை செய்கிறது, அது 'எடிட்' பட்டன் ஆகும். இந்த அம்சத்திற்கு விளக்கமே தேவை இல்லை என்று நினைக்கிறோம்.

வாட்ஸ்அப்பிற்கு வரும் 'எடிட்' பட்டன் ஆனது நீங்கள் அனுப்பிய மெசேஜை "திருத்தும்" விருப்பத்தை உங்களுக்கு வழங்கும். இது தவிர்த்து Disappearing messages-ஐ (மறைந்து போகும் மெசேஜ்களை) Save செய்யும் (சேமிக்கும்) விருப்பதிலும் கூட வாட்ஸ்அப் பணிபுரிவதாக கூறப்படுகிறது.

இந்த மாத இறுதிக்குள் வரும் 3 ப்ரைவஸி செட்டிங்ஸ்!

இந்த மாத இறுதிக்குள் வரும் 3 ப்ரைவஸி செட்டிங்ஸ்!

மேற்கண்ட அம்சங்களை தவிர்த்து, வாட்ஸ்அப் பயனர்கள் இந்த மாத இறுதிக்குள் 3 புதிய ப்ரைவஸி செட்டிங்களையும் பெற உள்ளனர்.

முதலாவதாக, யாருக்கும் தெரிவிக்காமல் தனிப்பட்ட முறையில் ஒரு க்ரூப்பில் இருந்து வெளியேற முடியும்; ஆனால் அது க்ரூப் அட்மினுக்கு மட்டுமே தெரிவிக்கப்படும்.

அடுத்ததாக, வாட்ஸ்அப் பயனர்கள் தங்கள் ஆன்லைன் ஸ்டேட்டஸை மறைக்க உதவும் அம்சத்தையும் பெறுவார்கள்.

கடைசியாக, வியூ ஒன்ஸ் மெசேஜ்களை ஸ்கிரீன்ஷாட் எடுப்பதை தடுக்கும் ஒரு அம்சமும் வாட்ஸ் அப்பிற்கு வருகிறது.

Best Mobiles in India

English summary
New Undo Button in WhatsApp Helps to Recover Deleted Message by Mistake How it Works

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X