Tech Tips: வாட்ஸ்அப்பில் இன்னொரு ஷார்ட்கட்.. இனிமேல் வாட்ஸ்அப் கால் செய்யும் போது..?
பிரபல இன்ஸ்டன்ட் மெசேஜிங் தளமான வாட்ஸ்அப்பில் (WhatsApp) ஏற்கனவே பல வகையான ஷார்ட்கட் (Shortcut) அம்சங்கள் இருக்கும் நிலைப்பாட்டில், தற்போது மேலுமொரு ஷார்ட்கட் இணைய உள்ளது. அதென்ன ஷார்ட்கட்? அதற்கும் வாட்ஸ்அப் காலிற்கும் என்ன தொடர்பு? இதோ விவரங்கள்:
அதென்ன ஷார்ட்கட்?
மெட்டா (Meta) நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப், ஒரு புதிய ஷார்ட்கட் அம்சத்தில் வேலை செய்து வருவதாகவும், அந்த அம்சம் வாட்ஸ்அப் கால் (WhatsApp Call) உடன் தொடர்புடைய ஒரு முக்கியமான அம்சமாக இருக்குமென்றும் தகவல் வெளியாகியுள்ளது.

"இப்போதைக்கு" வாட்ஸ்அப் காலிங் ஷார்ட்கட் (Calling Shortcut) என்று அழைக்கப்படும் இந்த புதிய அம்சம், வாட்ஸ்அப் வழியாக போன் கால் செய்யும் செயல்முறையை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு எளிமையாக்க உள்ளது!
அதெப்படி எளிமையாக்கும்?
தற்போது வரையிலாக, வாட்ஸ்அப் வழியாக கால் செய்ய வேண்டுமென்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்?
முதலில் உங்கள் மொபைல் போனில் உள்ள வாட்ஸ்அப்பை திறப்பீர்கள்; பின்னர் எந்த எண்ணிற்கு கால் செய்ய விரும்புகிறீர்களோ, அந்த எண்ணிற்கோ அல்லது சாட்டிற்கோ சென்று காலிங் ஐகானை (Calling Icon)
கிளிக் செய்வீர்கள் - அப்படித்தானே!
இனிமேல் அப்படி செய்ய வேண்டாம்!
வாட்ஸ்அப்பீட்டாஇன்ஃபோ (WaBetaInfo) வழியாக கிடைத்த தகவலின்படி, காலிங் ஷார்ட்கட் என்கிற புதிய அம்சம் அறிமுகமான பின்னர், வாட்ஸ்அப்பை திறக்காமலே வாட்ஸ்அப் கால் செய்ய முடியும்!

அதாவது, நீங்கள் அடிக்கடி வாட்ஸ்அப் கால் செய்யும் ஒரு எண்ணிற்கான ஷார்ட்கட்டை, உங்கள் மொபைல் போன் ஹோம் ஸ்க்ரீனில் (Home Screen) உருவாக்கிக்கொள்ள முடியும். அதன் மூலம் வாட்ஸ்அப்பை திறக்காமலேயே, நேரடியாக குறிப்பிட்ட எண்ணிற்கு வாட்ஸ்அப் கால் செய்ய முடியும்!
இந்த அம்சம், எப்போது அனைவருக்கும் கிடைக்கும்?
தற்போது வரையிலாக இந்த ஷார்ட்கட் அம்சம், ஆண்ட்ராய்டு பீட்டா டெஸ்டர்களுக்கு (Android Beta Testers) மட்டுமே அணுக கிடைக்கிறது. அதாவது கூகுள் பிளே ஸ்டோரின் பீட்டா புரோகிராமின் (Google Play Store Beta Program) கீழ் இணைந்த பயனர்களுக்கு மட்டுமே அணுக கிடைக்கிறது.
ஒருவேளை நீங்களும் ஒரு பீட்டா டெஸ்டர் என்றால், லேட்டஸ்ட் பீட்டா வெர்ஷன் ஆன 2.23.3.15-ஐ இன்ஸ்டால் செய்வதன் மூலம் வாட்ஸ்அப் காலிங் ஷார்ட்கட்டை பயன்படுத்தலாம்.

குறிப்பிட்ட அம்சத்தில் எந்தவிதமான குறையும், பிழையும் கண்டுபிடிக்கப்படாவிட்டால், கூடிய விரைவில் இது அனைத்து ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் வெளியிடப்படும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
முதலில் வாட்ஸ்அப் மெசேஜ்... இப்போது வாட்ஸ்அப் கால்!
நினைவூட்டும் வண்ணம், ஏற்கனவே இதே போன்ற ஒரு ஷார்ட்கட் அம்சம், வாட்ஸ்அப் சாட்களுக்கு அணுக கிடைக்கிறது.
அதன் மூலம் ஒரு குறிப்பிட்ட வாட்ஸ்அப் சாட்-ஐ உங்கள் மொபைல் போனின் ஹோம் ஸ்க்ரீனில் 'பின்' (Pin) செய்து வைத்துக்கொள்ள முடியும் மற்றும் வாட்ஸ்அப்பை திறக்காமலேயே குறிப்பிட்ட சாட்டின் வழியாக மெசேஜ்களை அனுப்பவும்; படிக்கவும் முடியும்!
வரிசைக்கட்டும் புதிய அம்சங்கள்!
ஒரிஜினல் குவாலிட்டியுடன் புகைப்படங்களை ஷேர் செய்வதற்கான ஆதரவு, ட்ராயிங் டூலில் புதிய செட்டிங் ஐகான், கம்பானியன் மோட், டெஸ்க்டாப்பிற்கான லாக் ஸ்க்ரீன், டெஸ்க்டாப் வெர்ஷனுக்கான கால் டேப்ஸ், ஐஓஎஸ் வெர்ஷனுக்கான பிக்சர்-இன்-பிளேஸ் என, இந்த 2023 ஆம் ஆண்டில் வாட்ஸ்அப்பில் பல வகையான புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
தற்போது அந்த வரிசையில் வாட்ஸ்அப் காலிங் ஷார்ட்கட்டும் சேர்ந்துள்ளது!


Click it and Unblock the Notifications








