ஜியோவுடன் இணைந்து திருப்பதி தேவஸ்தானம் அறிமுகம் செய்த புதிய ஆப்.! எதற்குத் தெரியுமா?
தற்போது உள்ளது சில மொபைல் ஆப் வசதிகள் மனிதர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. அதாவது சில மொபைல் ஆப் வசதிகள் மனிதர்களின் தினசரி வேலையைக் குறைக்கிறது என்றே கூறலாம். இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களின் வசதிக்காக புதிய மொபைல் ஆப் வசதியை அறிமுகம் செய்துள்ளது.
புதிய மொபைல் ஆப் எதற்கு?
குறிப்பாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஜியோ நிறுவனத்துடன் இணைந்து Sri TT Devasthanams மொபைல் ஆப் வசதியை அறிமுகம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மொபைல் ஆப் மூலம் பக்தர்கள் தரிசன டிக்கெட், தங்குமிடம், ஆர்ஜித சேவைகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.

அதாவது நாள்தோறும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். பல மாநிலங்களில் இருந்து பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பின்பு இப்போது பக்தர்களின் வசதிக்காகத் தேவஸ்தானம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த வருகிறது.
அனைத்து தகவல்களையும் பெற முடியும்
அந்த வகையில் தான் தற்போது மேம்படுத்தப்பட்ட புதிய மொபைல் ஆப் வசதி மூலம் பக்தர்கள் தரிசன டிக்கெட், தங்குமிடம், ஆர்ஜித சேவைகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திருமலை தொடர்பான அனைத்து தகவல்களையும் இந்த புதிய செயலி மூலம் பக்தர்கள் அறிய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமலையில் இருக்கும் அன்னமய்யா பவனில் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி இந்த மொபைல் ஆப் வசதியை அறிமுகப்படுத்தினார். குறிப்பாக இந்த மொபைல் ஆப் திருமலை திருப்பதி கோவிலுக்குச் செல்லும் பக்தர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றே கூறலாம்.
அதேபோல் ஜியோ நிறுவனம் மக்களுக்குப் பயன்படும் வகையில் தொடர்ந்து அசத்தலான திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. மேலும் இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த புதிய திட்டங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஜியோ ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம்
ஜியோ நிறுவனத்தின் ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2.5ஜிபி டேட்டா வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. இதுதவிர ஜியோ டிவி, ஜியோசினிமா,ஜியோ செக்யுரிட்டி மற்றும் ஜியோ கிளவுட் உள்ளிட்டவைகளுக்கான அணுகலை வழங்குகிறது இந்த ஜியோ ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம்.
ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம்
ஜியோ நிறுவனத்தின் ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2.5ஜிபி டேட்டா வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 90 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. இதுதவிர ஜியோ டிவி, ஜியோசினிமா, ஜியோசெக்யுரிட்டி மற்றும் ஜியோகிளவுட் உள்ளிட்டவைகளுக்கான அணுகலை வழங்குகிறது இந்த ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம்.
ஜியோ ரூ.259 ப்ரீபெய்ட் திட்டம்
ஜியோ நிறுவனத்தின் ரூ.259 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி ஒரு மாதம் ஆகும். தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள் மற்றும் ஜியோ ஆப் பயன்பாடுகளின் அணுகல் உள்ளிட்ட பல நன்மைகள் வழங்கும் இந்த திட்டம்.


Click it and Unblock the Notifications