புதிய ஆதார் செயலி.. 2 கோடியை தாண்டிய பதிவிறக்கம்.. என்னென்ன வசதிகள்.. பயன்படுத்துவது எப்படி?
இந்தியாவில் புதிய ஆதார் செயலியைப் பல கோடி மக்கள் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். அதாவது புதிய ஆதார் செயலி 3 மாதங்களுக்குள் 2 கோடியே 10 லட்சத்துக்கும் அதிகமான பதிவிறக்கங்களுடன் மக்களிடம் வலுவான வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் ஆதார் செயலியின் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.
அதாவது மக்கள் ஆதார் செயலியைப் பயன்படுத்தி செல்போன் எண் மற்றும் முகவரி அப்டேட்கள் போன்ற பல்வேறு சேவைகளை எப்போது வேண்டுமானாலும், எங்கிருந்தும் இதில் எளிதாக பெற்றுக்கொள்ளலாம். அதுவும் இதுவரை 28 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் புதிய ஆதார் செயலியை பயன்படுத்தி தங்களது செல்போன் எண்களை புதுப்பித்துள்ளனர்.

இதுதவிர 6 லட்சம் மக்கள் இந்த செயலியை பயன்படுத்தி தங்களது முகவரியை புதுப்பித்துள்ளனர். அதுவும் ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஐஒஎஸ் ஆகிய இரண்டு இயங்குதளங்களில் செயலி பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது எனவும், மக்கள் இந்த செயலியைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது. சரி இப்போது ஆதார் செயலியில் மொபைல் நம்பர், முகவரி போன்றவற்றை மாற்றம் செய்வது எப்படி என்று இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
புதிய ஆதார் செயலியில் மொபைல் நம்பர் மாற்றுவது எப்படி?
வழிமுறை-1. முதலில் உங்கள் போனில் கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப் ஸ்டோர் வழியாக ஆதார் செயலியைப் பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்யவும்.
வழிமுறை-2.அடுத்து உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி உள்நுழைந்து, பின்னர் உங்கள் பயோமெட்ரிக்ஸைச் சரிபார்க்கவும்.
வழிமுறை-3. அடுத்து ஆதார் செயலியின் முகப்பு பக்கத்தில் services என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால், உங்கள் மொபைல் எண் புதுப்பிக்க
வேண்டுமா அல்லது முகவரியைப் புதுப்பிக்க வேண்டுமா என்ற ஆப்ஷன் தோன்றும்.
வழிமுறை-4. இப்போது நீங்கள் மொபைல் எண் அப்டேட் செய்ய வேண்டுமென்றால் அதற்கான பழைய நம்பரை உள்ளிட்டு ஒடிபி-ஐ பெற்று புதிய நம்பரை உள்ளிட வேண்டும்.
வழிமுறை-5.ஓடிபி சரிபார்ப்பு முடிந்ததும் முக அங்கீகாரத்தைப் பயன்படுத்தி உங்கள் பயோமெட்ரிக்ஸைச் சரிபார்க்கவும். அடுத்து இதற்கான கட்டணமாக ரூ.75 செலுத்த வேண்டும். பிறகு, 15 நாட்களில் உங்கள் மொபைல் எண் அப்டேட் ஆகிவிடும்.
புதிய ஆதார் செயலியில் முகவரி மாற்றுவது எப்படி?
வழிமுறை-1.ஆதார் செயலியில் உங்கள் ஆதார் எண் மற்றும் பயோமெட்ரிக் விவரங்கள் வைத்து உள்நுழையவும்.
வழிமுறை-2. அதன்பின்னர் ஆதார் செயலியின் முகப்பு பக்கத்தில் services என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால் அதில் update Aaadhaar Address எனும் விருப்பம் தெரியும் அதை கிளிக் செய்யவும்.
வழிமுறை-3. அதன்பிறகு using Your Document என்பதை கிளிக் செய்தால், உங்களது ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒடிபி வரும், அதனை உள்ளிட்டு, நீங்கள் எந்த சான்றிதழ்களை உள்ளிடப் போகிறீர்கள் என்பதைத் தேர்வு செய்யவும். அடுத்து உங்கள் புதிய முகவரியை உள்ளிடவும்.

வழிமுறை-4. குறிப்பாக நீங்கள் கொடுக்க இருக்கும் சான்றிதழை pdf அல்லது ஸ்கேன் செய்து உள்ளிட வேண்டும். அதன்பின்பு, முகவரி மாற்றத்திற்கான கட்டணத்தை ரூ.75 ஆக செலுத்த வேண்டும். அதுவும் யுபிஐ, டெபிட், கிரெடிட் கார்டு மூலம் ரூ.75 செலுத்த முடியும்.
வழிமுறை-5.அவ்வளவு தான் உங்களது ஆதாரில் முகவரி 15 நாட்களில் அப்டேட் ஆகிவிடும். உங்களது ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு இதற்கான அப்டேட் குறித்த மெசேஜ் வரும். இதன் மூலம் உங்கள் ஆதார் அப்டேட் ஆனதா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications