இந்தியாவில் மட்டும் Netflix சேவை 2 நாட்களுக்கு இலவசம்.. புதிய சலுகை எப்போது கிடைக்கும் தெரியுமா?

|

Netflix நிறுவனம் டிசம்பர் மாதத்தில் 2 நாட்களுக்கு இலவச 'ஸ்ட்ரீம்ஃபீஸ்ட் (Stream Feast)' என்ற விளம்பர சலுகையை இந்தியாவில் தொடங்கவுள்ளது என்று அறிவித்துள்ளது. இந்த புதிய சலுகை உங்களுக்கு இரண்டு நாட்களுக்கு இலவச நெட்பிளிக்ஸ் உள்ளடக்கத்தை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இலவச நெட்பிளிக்ஸ் சேவை எப்பொழுது கிடைக்கும் இதை எப்படிப் பயன்படுத்தலாம் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

ஸ்ட்ரீம்ஃபீஸ்ட் இலவச சலுகை

ஸ்ட்ரீம்ஃபீஸ்ட் இலவச சலுகை

நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் இலவச மீடியா-ஸ்ட்ரீமிங் சேவை வரும் டிசம்பர் மாதம் 4ம் தேதி முதல் துவங்கி அடுத்த இரண்டு நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ஸ்ட்ரீம்ஃபீஸ்ட் (Stream Feast) என்று அழைக்கப்படும். இந்த இலவச சோதனை விளம்பர சலுகையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் முதலில் இந்த ஸ்ட்ரீம்ஃபீஸ்ட் விளம்பர சோதனை பிரத்தியேகமாக அறிமுகம் செய்யப்படுகிறது.

ஒரு மாத கால இலவச சோதனை இப்போது ரத்து

ஒரு மாத கால இலவச சோதனை இப்போது ரத்து

சில தினங்களுக்கு முன்பு நெட்பிளிக்ஸின் இலவச ஒரு மாத சோதனைக் கால சந்தா ரத்து செய்யப்பட்டது. இந்த ஒரு மாத கால இலவச சோதனை சந்தா புதிய வாடிக்கையாளர்களுக்கு வழங்கிவரப்பட்டது. இந்த புதிய இரண்டு நாள் சோதனை வழங்கப்படும் நோக்கத்தினால் தான், பழைய 1 மாத சோதனை சில தினங்களுக்கு முன்பு ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது நமக்கு இப்போது தெளிவாகத் தெரிகிறது.

இனி LPG சிலிண்டர் வாங்க இது கட்டாயம்.. நவம்பர் 1 முதல் அமலுக்கு வரும் புதிய முறை.!இனி LPG சிலிண்டர் வாங்க இது கட்டாயம்.. நவம்பர் 1 முதல் அமலுக்கு வரும் புதிய முறை.!

இரண்டு நாள் இலவச Netflix

இரண்டு நாள் இலவச Netflix

குறிப்பாக இந்தியாவில் நெட்பிளிக்ஸின் 1 மாத இலவச சோதனையைப் பெற, பயனர்கள் தங்கள் வங்கி அட்டையின் விவரங்களைப் பதிவிட வேண்டியது அவசியம். ஆனால், இப்பொழுது அறிமுகம் செய்யப்படவுள்ள இரண்டு நாள் இலவச Netflix பயன்பாட்டிற்கு வங்கி அட்டையின் விபரங்கள் எதுவும் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய நபர்களை சந்தாவில் சேர்க்க தான் இந்த சலுகையா?

புதிய நபர்களை சந்தாவில் சேர்க்க தான் இந்த சலுகையா?

இந்தியாவிற்குப் பிறகு இந்த விளம்பர சலுகை மற்ற இடங்களிலும் விரிவுபடுத்தப்படும் என்று நெட்பிளிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. நாட்டில் உள்ள அனைவருக்கும் வார இறுதியில் இலவசமாக நெட்பிளிக்ஸ் அணுகலைப் பயன்படுத்துவது, புதிய நபர்களை சந்தாவில் சேர்ப்பதற்கான ஒரு சிறந்த வழியாகும் என்று Netflix நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியா முழுக்க ஆங்காங்கே சிவப்பு புள்ளிகள்; நாசா வெளியிட்ட புகைப்படத்தால் பீதி.!இந்தியா முழுக்க ஆங்காங்கே சிவப்பு புள்ளிகள்; நாசா வெளியிட்ட புகைப்படத்தால் பீதி.!

மொபைல் மட்டும் நெட்பிளிக்ஸ் திட்டம்

மொபைல் மட்டும் நெட்பிளிக்ஸ் திட்டம்

டிசம்பர் 4ம் தேதி இந்த இலவச நெட்பிளிக்ஸ் அணுகலைப் பயன்படுத்த மறக்காதீர்கள்.Netflix கடந்த காலங்களில் இந்தியாவிற்கு மட்டும் சில பிரத்தியேக சலுகைகளை வழங்கியுள்ளது. குறிப்பாக இந்தியாவில் ரூ .200 மதிப்புடைய மொபைல் மட்டும் நெட்பிளிக்ஸ் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்தியாவில் மட்டும் இலவசம்..!

இந்தியாவில் மட்டும் இலவசம்..!

இது புதுதில்லியில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த மாதத்தில், நெட்பிளிக்ஸ் அதன் பயனர்களுக்கு சில நிகழ்ச்சிகளையும் திரைப்படங்களையும் இலவசமாக வழங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Netflix to be available for free in India for 2 days in December : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X