Netflix சேவையில் தயாராகும் புதிய சேவை.. 'வீடியோ கட்' ஆனால், ஆடியோ கேட்கலாம்..
நெட்பிளிக்ஸ் நிறுவனம் தனது பிரபலமான தளத்தில், ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக ஒரு புதிய அம்சத்தை சோதனை செய்து வருகிறது. பேக்கிரௌண்ட் பிளேபாக் அம்சத்திற்கான புதிய ஆடியோ மட்டும் பயன்முறையை தற்பொழுது சோதனை செய்து வருகிறது. இந்த அம்சம் அதன் பயனர்களுக்கு பிடித்த நிகழ்ச்சி மற்றும் திரைப்படங்களைக் கேட்க அனுமதிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெட்ஃபிக்ஸ் 'ஆடியோ மோடு (Audio Mode)'
நெட்ஃபிக்ஸ் இப்பொழுது 'ஆடியோ மோடு (Audio Mode)' எனப்படும் பேக்கிரௌண்ட் பிளேபாக் அம்சத்தைத் தனது ஆண்ட்ராய்டு நெட்பிளிக்ஸ் பயன்பாட்டின் 7.9.1 வெர்ஷனில் சேர்த்துள்ளது. இந்த அம்சம் பயனர்களை விரைவில், அவர்களுக்கு பிடித்தமான நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களின் வீடியோவைப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லாமல் பின்னணியில் கேட்க மட்டும் அனுமதிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோவை மட்டும் ஆஃப் (Off)
இந்த புதிய ஆடியோ மோடு அம்சம், வீடியோவை மட்டும் ஆஃப் (Off) செய்து திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை பின்னணியில் இயக்க அனுமதிக்கும். இதன் பொருள் பயனர்கள் ஆடியோவைக் கேட்கவும் தொலைப்பேசியில் பிற பயன்பாடுகளை எந்தவித சிக்கலுமின்றி பயன்படுத்த முடியும் என்று நிறுவனம் கூறியுள்ளது.

ஆடியோ மூலம் நிகழ்ச்சியை கேட்கலாம்
இந்த புதிய அம்சம் தொடர்பான சில செய்திகள் வெளியாகியுள்ளது. அதில், "வீடியோவை முடக்கி, உங்களுக்கு பிடித்த நிகழ்ச்சிகளைக் கேட்பதன் மூலம் உங்கள் தரவைச் சேமிக்க முடியும்" என்றும், "வீடியோ முடக்கப்பட்ட நேரத்தில், நீங்கள் மற்ற விஷயங்களைச் செய்வதில் பிஸியாக இருக்கும்போது உங்கள் நிகழ்ச்சியை ஆடியோ மூலம் தொடர்ந்து கேட்கலாம்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பிக்சர்-இன்-பிக்சர் (PIP)
நெட்பிளிக்ஸ் இந்த அம்சத்தை ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கு விரைவில் கொண்டு வரக்கூடும். தற்போது, ஆண்ட்ராய்டில் உள்ள நெட்பிளிக்ஸ் பயனர்கள் பிக்சர்-இன்-பிக்சர் (PIP) பயன்முறையைப் பயன்படுத்தலாம், மற்ற விஷயங்களைச் செய்யும்போது பயனர்கள் தொடர்ந்து உள்ளடக்கத்தைப் பார்க்கவும் கேட்கவும் இது சிறிய வீடியோ பாக்ஸ் மூலம் அனுமதிக்கிறது.


Click it and Unblock the Notifications