Home
Apps

டிக்டாக் போன்ற தளத்தில் Netflix அறிமுகம் செய்த புதிய 'ஃபாஸ்ட் லாஃப்ஸ்' அம்சம்..

நெட்பிலிக்ஸ் 'ஃபாஸ்ட் லாஃப்ஸ்' என்ற புதிய அம்சத்தை வெளியிட்டுள்ளது, இது பயனர்களுக்கு Netflix இல் கிடைக்கும் நகைச்சுவை நிகழ்ச்சிகளின் குறுகிய துணுக்குகளைப் பார்க்க உதவும் என்று நெட்பிலிக்ஸ் கூறியுள்ளது. பயனர்கள் தங்கள் பயன்பாட்டில் உள்ள உள்ளடக்கத்தை ஆராய்வதற்கு நெட்பிலிக்ஸ் டிக்டாக் போன்ற வழியை இப்போது பயன்படுத்தத் துவங்கியுள்ளது. இதில் இன்னும் சில சுவாரசியமான விஷம் இருக்கிறது.

நெட்பிலிக்ஸ்  'ஃபாஸ்ட் லாஃப்ஸ்'

நெட்பிலிக்ஸ் 'ஃபாஸ்ட் லாஃப்ஸ்'

நெட்பிலிக்ஸ் ஸ்ட்ரீமிங் சேவை ஐபோனில் அதன் பயன்பாட்டில் 'ஃபாஸ்ட் லாஃப்ஸ்' என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியது. இது திரைப்படங்கள், சிட்காம்ஸ், நகைச்சுவை நடைமுறைகள் மற்றும் நெட்பிலிக்ஸ் இல் கிடைக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலிருந்து குறுகிய துணுக்குகளைப் பார்க்கப் பயனர்களை அனுமதிக்கிறது.

பார்வையிடவும், அதை ஷேர் செய்யவும் அனுமதி

பார்வையிடவும், அதை ஷேர் செய்யவும் அனுமதி

'ஃபாஸ்ட் லாஃப்ஸ்', நெட்பிலிக்ஸ் நகைச்சுவை பட்டியலிலிருந்து திரைப்படங்கள், சீரிஸ்கள் (பிக் மவுத்), சிட்காம்ஸ் (தி க்ரூ) மற்றும் கெவின் ஹார்ட் மற்றும் அலி வோங் போன்ற நகைச்சுவை நடிகர்களிடமிருந்து வெளிவந்த கிளிப்பிங்களை சிறிய துணுக்குகளாகப் பிரித்துப் பார்வையிடவும், அதை ஷேர் செய்யவும் அனுமதிக்கிறது என்று நிறுவனத்தின் ப்லோக் வலைப்பதிவு இடுகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட் மூலம் ஷேர் செய்யலாம்

வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட் மூலம் ஷேர் செய்யலாம்

ஃபாஸ்ட் லாஃப்ஸ் டேபை கிளிக் செய்வதன் மூலம் பயனர்கள் கீழே உள்ள வழிசெலுத்தல் மெனு வழியாக நகைச்சுவை உள்ளடக்கத்தை அணுகலாம். சிங்கிள் கிளிக்கில் கிளிப்புகள் பிளே செய்ய துவங்கும், பின்னர் ஒன்றின் பின் ஒன்றாக பிளே செய்யத் துவங்கும். நீங்கள் கிளிப்புகளை தனித்தனியாக வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட் மற்றும் டிவிட்டரில் பகிர்ந்து கொள்ளலாம் என்று நிறுவனம் கூறியுள்ளது.

விரைவில் ஆண்ட்ராய்டில்

விரைவில் ஆண்ட்ராய்டில்

தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளில் ஐபோன் பயனர்களுக்கு மட்டும் இந்த ஃபாஸ்ட் லாஃப்ஸ் அம்சம் இப்போது கிடைக்கின்றது என்று நெட்பிலிக்ஸ் கூறியுள்ளது. அதேசமயம் இந்த ஃபாஸ்ட் லாஃப்ஸ் அம்சம் விரைவில் Android இல் களமிறங்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது.

Best Mobiles in India

English summary
Netflix launches 'Fast Laughs' feature on its iPhone app : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X