நெட்ஃபிலிக்ஸ்: 50% சலுகையுடன் அறிமுகம் செய்துள்ள வருடாந்திர சந்தா இவ்வளவு தானா?

|

சில ஆண்டுகளுக்கு முன்பு, நெட்ஃபிலிக்ஸ் சந்தாவை வைத்திருந்தவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. நெட்ஃபிலிக்ஸ் பற்றி மக்கள் கேள்விப்பட்ட ஒரே இடம் திரைப்படங்களில் மட்டுமாகவே இருந்தது. ஆனால், இந்தியாவில் அதிகரித்த மலிவான டேட்டா ஊடுருவலை தொடர்ந்து OTT தளத்தில் கிடைத்த மிகவும் மலிவு விலை திட்டங்களை தொடர்ந்து, அதிகமான மக்கள் நெட்ஃபில்க்ஸ் சேவையில் சேரத் துவங்கினர்.

நெட்ஃபிலிக்ஸ் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை

நெட்ஃபிலிக்ஸ் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை

அதனைத் தொடர்ந்து தான் நெட்ஃபிலிக்ஸின் பயனர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்தது, மிகப்பெரிய நாட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால், புதிய டேட்டா டேரிஃப் கட்டண உயர்வுக்குப் பிறகு இந்தியாவில் டேட்டா விலைகள் 40% உயர்ந்துள்ளதால், நெட்ஃபிலிக்ஸ் தனது வாடிக்கையாளர்கள் சேவையைக் கைவிடாமல் பார்த்துக் கொள்ள புதிய சலுகையுடன் கூடிய நீண்ட கால திட்டங்களை சோதனை செய்துவருகிறது.

மூன்று புதிய நீண்டகால திட்டங்கள்

மூன்று புதிய நீண்டகால திட்டங்கள்

நெட்ஃபிலிக்ஸ் தற்பொழுது இந்தியாவில் நீண்டகால திட்டங்களை அறிமுகம் செய்வதற்காக மூன்று புதிய திட்டங்களை சோதித்து வருகிறது. ப்ரீபெய்ட் மற்றும் டி.டி.எச் போன்ற பிற தளங்களில் உள்ள நீண்டகால திட்டங்களைப் போலவே, நெட்ஃபிலிக்ஸ் நீண்ட கால திட்டங்களாக 3 மாத கால சந்தா, 6 மாத கால சந்தா மற்றும் வருடாந்திர சந்தா போன்ற சேவையை 50% வரை தள்ளுபடி விலையுடன் வழங்கவுள்ளது என்று அறிவித்துள்ளது.

வாட்ஸ்அப் சேவை இனி இந்த ஸ்மார்ட்போன்களில் செயல்படாது! உங்க போன் இதில் இருக்கானு செக் பண்ணுங்க!

மாதத்திற்கு ரூ.199 மட்டுமே செலவாகும்

மாதத்திற்கு ரூ.199 மட்டுமே செலவாகும்

நெட்ஃபிலிக்ஸ் இன் நீண்டகால சந்தாதாரர்கள் சில நீண்ட கால திட்டங்களின் கீழ், 50% வரை தள்ளுபடி பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் டேட்டா விலை உயர்வைக் கருத்தில்கொண்டு, நெட்ஃபிலிக்ஸ் இந்திய பயனர்களுக்குக்காக ஒரு சிறப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இதன்படி மாதத்திற்கு ரூ.199 மட்டுமே செலவாகும். ஆனால், இந்த திட்டம் தற்போது மொபைல் பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது.

நெட்ஃபிலிக்ஸின் புதிய காலாண்டு திட்டம்

நெட்ஃபிலிக்ஸின் புதிய காலாண்டு திட்டம்

இப்போது நெட்ஃபிலிக்ஸின் புதிய நீண்டகால திட்டத்தின் கீழ், காலாண்டு திட்டத்தைச் சோதித்து வருகிறது. இத்திட்டத்திற்கு வெறும் ரூ.1,919 மட்டுமே விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் நெட்ஃபிலிக்ஸ் பயனர்கள் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று இருக்கிறது, அது என்னவென்றால்.

இனி பூமியின் மிக ஆழமான பகுதி இதுதான்! போட்டு உடைத்த விஞ்ஞானிகள்!

20% தள்ளுபடி கிடைக்கும் காலாண்டு சந்தா

20% தள்ளுபடி கிடைக்கும் காலாண்டு சந்தா

சந்தாதாரர்கள் ஒரு மாத அடிப்படையில் நெட்ஃபிக்ஸ் நிறுவனத்திற்குப் பணம் செலுத்தியிருந்தால், மூன்று மாதங்களுக்கான சந்தா ரூ.2,397 என்ற விலையில் தான் கிடைத்திருக்கும். ஆனால் தற்பொழுது நெட்ஃபிலிக்ஸ் சோதனை செய்து வரும் இந்த திட்டத்தின் படி சந்தாதாரர்களுக்கு 20% தள்ளுபடி கிடைக்கிறது.

நெட்ஃபிலிக்ஸின் புதிய அரை ஆண்டு திட்டம்

நெட்ஃபிலிக்ஸின் புதிய அரை ஆண்டு திட்டம்

நெட்ஃபிலிக்ஸ் நிறுவனத்திடமிருந்து கிடைக்கும் அரை ஆண்டு திட்டத்தைத் தேர்வு செய்ய விரும்பும் பயனர்களுக்கு 6 மாத சேவையின் சந்தா வெறும் ரூ.3,359 என்ற விலையில் கிடைக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் பயனர்கள் எவ்வளவு சலுகையை பெறுகிறார்கள் தெரியுமா?

முதல் மாதம் இலவசம், ரூ.1000 தள்ளுபடி: ஏர்டெல்லின் அதிரடி அறிவிப்பு!

ஆறு மாத சந்தாவில் ரூ.1,435 சேமிக்கலாம்

ஆறு மாத சந்தாவில் ரூ.1,435 சேமிக்கலாம்

நெட்ஃபிலிக்ஸின் மற்ற திட்டத்தைப் போலவே, சந்தாதாரர்கள் ஒரு மாத அடிப்படையில் நெட்ஃபிலிக்ஸ் நிறுவனத்திற்குப் பணம் செலுத்தியிருந்தால், ஆறு மாதங்களுக்கான சந்தா ரூ.4,794 என்ற விலையில் தான் கிடைத்திருக்கும், ஆனால் தற்பொழுது நெட்ஃபிலிக்ஸ் அறிமுகம் செய்துள்ள இந்த திட்டத்தின் முலம் பயனர்களுக்கு ரூ.1,435 சேமிக்கப்படுகிறது.

நெட்ஃபிலிக்ஸின் புதிய வருடாந்திர சந்தா

நெட்ஃபிலிக்ஸின் புதிய வருடாந்திர சந்தா

நெட்ஃபிலிக்ஸ் தற்பொழுது வருடாந்திர சந்தா திட்டத்தை வெறும் ரூ.4,799 என்ற விலையின் கீழ் சோதனை செய்து வருகிறது. நெட்ஃபிலிக்ஸின் வழக்கமான பன்னிரண்டு மாத சந்தாவுக்கு பயனர்கள் பெரிய தொகையாக ரூ.9,588 செலுத்தவேண்டியதிருக்கும்.

குறிப்பிட்ட நாட்கள் வரை இரண்டு அட்டகாசமான சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.!

50% தள்ளுபடி விலையில் கிடைக்கும் வருடாந்திர சந்தா இவ்வளவு தானா?

50% தள்ளுபடி விலையில் கிடைக்கும் வருடாந்திர சந்தா இவ்வளவு தானா?

ஆனால், இப்பொழுது இந்த திட்டத்தின் மூலம், சந்தாதாரர்கள் 50% தள்ளுபடியை அனுபவிக்க முடியும். நெட்ஃபிலிக்ஸின் பிரீமியம் திட்ட சந்தாதாரர்களுக்கு 4 ஸ்கிரீன்கள், அதிக தரத்துடன் மாதத்திற்கு ரூ.799 என்ற விலையில் அதிக அம்சங்களுடன் வழங்கப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Netflix Is Testing It's Annual Subscription With 50% Offer Do You Know What's The Price Of This Subscription : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X