83 வருடத்திற்கு Netflix இலவசமாக வேண்டுமா? அப்போ உடனே இதை பண்ணுங்கனு சொன்ன நிறுவனம்!

|

Netflix நிறுவனம் நம்பமுடியாத ஒரு புதிய சலுகையை அறிவித்துள்ளது, இந்த புதிய அறிவிப்பின் படி நெட்பிலிக்ஸ் பயனர்கள் Netflix தளத்தின் சேவையை அடுத்த 83 ஆண்டுகளுக்கு முற்றிலும் இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ளலாமாம். சரியாகச் சொன்னால் அடுத்த 1,000 மாத சந்தாவை Netflix முற்றிலுமாக இலவசமாக வழங்குகிறது. இந்த சலுகையைப் பெற நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

83 வருட இலவச சந்தா

இந்த 83 வருட இலவச சந்தாவைப் பெற நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் "ஓல்ட் கார்ட்" என்ற வீடியோ கேமில் அதிக மதிப்பெண் பெறுவதுதான். நெட்ஃபிக்ஸ் கடந்த வாரம் சார்லிஸ் தெரோன் நடித்த 'தி ஓல்ட் கார்டு' என்ற திரைப்படத்தை வெளியிட்டது. தெரான் பிளேட்ஸ் ஆண்டி, தனது குழுவினரைக் காப்பாற்ற வேண்டிய மிகப் பழமையான மற்றும் மிகவும் அனுபவமுள்ள அழியாத இம்மார்ட்டல் இனத்தில் ஒருவர்.

இம்மார்ட்டல் (Immortal)

புதிய நெட்ஃபிலிக்ஸ் ஒரிஜினல் திரைப்படத்தைக் கொண்டாட, நெட்பிலிக்ஸ் ஸ்ட்ரீமிங் சேவை "இம்மார்ட்டல் (Immortal)" நெட்ஃபிக்ஸ் கணக்கை வழங்குகிறது. இம்மார்ட்டல்ஸ் என்றால் இவர்களுக்கு அழிவே கிடையாது, மரணம் என்பதே கிடையாது என்பது தான் பொருள். இது உண்மையில் ஒரு அழியாத, அழிவே இல்லாத சலுகை இல்லை, ஆனாலும் கூட பயனர்கள் 83 ஆண்டுகளுக்கு நெட்ஃபிலிக்ஸ் சந்தாவைப் பயன்படுத்த முடியும்.

10 லட்சத்தை கொள்ளையடித்த 10 வயது சிறுவன்! வெறும் 30 செகண்டில் வங்கியைவிட்டு மாயம்!10 லட்சத்தை கொள்ளையடித்த 10 வயது சிறுவன்! வெறும் 30 செகண்டில் வங்கியைவிட்டு மாயம்!

ஓல்டு கார்ட் கேம்

83 வருடத்திற்கு நெட்பிலிக்ஸ் சேவை இலவசமாகக் கிடைப்பது என்பது சிறந்த சலுகையாகும். ஓல்டு கார்ட் கேமில் நீங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் கேமை விளையாடுவார்கள். லாபிரிஸ் என்ற அழியாத இனத்திற்காக விளையாடும் நீங்கள் எதிரிகளை அழிக்க வேண்டும். இந்த ஓல்டு கார்டு கேமை இந்த லிங்க் மூலம் நீங்கள் நேரடியாக அணுகலாம். இந்த கேம் முற்றிலுமாக உலாவி அடிப்படையிலானது என்பது குறிப்பிடத்தக்கது.

டாஸ்க்

நீங்கள் முக்கிய கதாபாத்திரமாக விளையாட வேண்டும், படத்தின் நிகழ்வுகளை இது பிரதிபலிக்கிறது. இதில் உங்களுக்கு ஆயுதமாகப் பிரம்மாண்டமான, இரட்டை-பிளேடட் கோடரியான ஒரு கை லேப்ரிஸைப் பயன்படுத்தி முடிந்தவரைப் பல எதிரிகளைக் கொன்று வீழ்த்துவதே உங்களுக்கான டாஸ்க். குறிப்பான விஷயம் என்னவென்றால், நீங்கள் முடிந்தவரை அடிபடுவதைத் தவிர்க்கவும், விரைவாக எதிரிகளைக் கொல்லவும் முயற்சிக்க வேண்டும்.

ஜூலை 19 வரை மட்டுமே

நெட்பிலிக்ஸ் தனது இம்மார்ட்டல் கேமிற்கான அழியாத கணக்கு விளையாட்டு போட்டியை இப்போது செயலில் வைத்துள்ளது. இந்த போட்டி ஜூலை 19 வரை மட்டுமே தொடரும் என்றும் நிறுவனம் கூறியுள்ளது. இந்த குறிப்பிட்ட நாட்களில் ஹையஸ்ட் ஸ்கோர் பெரும் நபருக்கு 83 வருடச் சந்தா முற்றிலுமாக இலவசமாக வழங்கப்படும்.

பெரிய ஷாக்

ஆனால் இந்த போட்டி அமெரிக்காவில் உள்ள நெட்ஃபிலிக்ஸ் பயனர்களுக்கு மட்டுமே என்று நிறுவனம் தெரிவித்துள்ளது நமக்குச் சற்று ஏமாற்றம் தான். ஆனாலும் கூட, ஆன்லைனில் இந்த கேமை நீங்கள் விளையாடலாம்.

Best Mobiles in India

English summary
Netflix is offering 83 years of free subscription, here's how you can get it : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X