Just In
- 10 hrs ago
Samsung Galaxy A32 5G விரைவில் இந்தியாவில்.. விலை இதுவாக தான் இருக்கக்கூடும்..
- 10 hrs ago
OnePlus 9E | OnePlus 9R பற்றி உங்களுக்கு தெரியுமா? இது என்ன புது மாடலா இருக்கு?
- 10 hrs ago
முதல்முறை இதில்தான் இருக்கு இந்த அம்சம்: நாய்ஸ் பட்ஸ் சோலோ இயர்போன்கள்- விலை குறைவுதான்!
- 10 hrs ago
108 எம்பி கேமராவுடன் வெளிவர தயாராகும் ரியல்மி 8 ஸ்மார்ட்போன்.. சுவாரசியமான டீசர் தகவல்..
Don't Miss
- News
தொழிலாளர் உரிமை ஆர்வலர் நோதீப் கவுர் கைது.. 'சொல்வது அத்தனையும் பொய்' - ஹரியானா போலீஸ்
- Movies
48வது பிறந்தநாள் காணும் கௌதம் மேனன்..குவியும் வாழ்த்து !
- Finance
Mphasis நிறுவன பங்குகள் விற்பனை.. தனி ஆளாக களத்தில் இறங்கும் கார்லைல்..!
- Automobiles
2021 ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் காரை விளம்பரப்படுத்த துவங்கியுள்ள மாருதி!! புதிய விளம்பர வீடியோ வெளியீடு
- Sports
2 நாளில் முடிவிற்கு வந்த டெஸ்ட்.. இங்கிலாந்தை தூசி தட்டிய இந்திய அணி.. அசர வைக்கும் "ஸ்பின்" வெற்றி!
- Lifestyle
இந்த அறிகுறிகள் உங்க கணவன் அல்லது காதலனிடம் இருந்தால் அவர் உங்களுடன் வாழும் ஆர்வத்தை இழந்துட்டாராம்!
- Education
ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
Netflix அறிமுகம் செய்துள்ள 'ஸ்மார்ட் டவுன்லோட்' அம்சம்.. இது உங்களுக்காக என்ன செய்யும் தெரியுமா?
Netflix தற்போது புதிய பயனுள்ள ஸ்மார்ட்டான அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. நெட்பிலிக்ஸ் அறிமுகம் செய்துள்ள புதிய சேவையின் பெயர் 'டவுன்லோட்ஸ் ஃபார் யூ' (Downloads for You) என்ற ஆட்டோமேட்டிக் டவுன்லோட் அம்சமாகும். இந்த சேவை ஸ்மார்ட்டாக திரைப்படங்கள் மற்றும் சீரிஸ் எபிசோட்களை உங்கள் சாதனத்தில் பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்கிறது. இதை எப்படிப் பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.

ஆட்டோமேட்டிக் டவுன்லோட் அம்சம்
இந்த ஆட்டோமேட்டிக் டவுன்லோட் அம்சம் உங்களுக்குத் தேவையான திரைப்படம் மற்றும் சீரிஸ் எபிசோட்களை தானாகவே பதிவிறக்கம் செய்து சேமித்து வைத்துக்கொள்கிறது. குறிப்பாக இந்த அம்சம் செயல்பட உங்களின் சாதனத்தை நீங்கள் வைஃபை உடன் இணைத்திருக்க வேண்டும். இன்டர்நெட் இல்லாத நேரங்களில் அல்லது நீங்கள் ட்ராபிக்கில் சிக்கிக்கொண்ட நேரத்தில் அல்லது பயணிக்கும் நேரத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட படங்களை நீங்கள் பார்த்து மகிழலாம்.

ஸ்மார்ட் டவுன்லோட் அம்சம்
இதற்கு முன்பு நெட்பிலிக்ஸ் நிறுவனம் ஸ்மார்ட் டவுன்லோட் அம்சத்தை அறிமுகம் செய்தது. இந்த சேவையானது நீங்கள் பார்க்கும் சீரிஸின் எபிசோட்களை டவுன்லோட் செய்து வைத்துக்கொள்ளும், நீங்கள் பார்வையிட்ட பின்னர் அந்த எபிசோடை தானாக டெலீட் செய்துவிட்டு அடுத்த எபிசோடை தானாக டவுன்லோட் செய்து வைத்துக்கொள்ளும். ஆனால், இதுவரை திரைப்படங்களுக்கு இப்படியான இரு சேவை நெட்பிலிக்ஸ் இடம் இல்லை.
WhatsApp புதிய விதிகளை நீங்கள் ஏற்கவில்லை என்றால் மே 15-க்குப் பிறகு என்ன நடக்கும்?

டவுன்லோட்ஸ் ஃபார் யூ அம்சம்
நெட்பிலிக்ஸின் டவுன்லோட்ஸ் ஃபார் யூ அம்சம் உங்கள் நெட்பிலிக்ஸ் செட்டிங்கிஸ் உள் இருக்கும் டவுன்லோட் டேப்பில் உள்ளது. இது இப்போது நெட்பிலிக்ஸ் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. இந்த அம்சம் இன்னும் ஐபாட் மற்றும் ஐபோன் பயனர்களுக்கு iOS தளத்தில் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சரி இப்போது, இந்த சேவையை எப்படி ஸ்மார்ட்டாக பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.

எப்படி இதை செய்வது?
- நெட்ஃபிக்ஸ் Android பயன்பாட் ஓபன் செய்யவும்.
- பின்னர், Downloads டேப்பை கிளிக் செய்யவும்.
- அடுத்தபடியாக Downloads for You என்பதை கிளிக் செய்யவும்.
- அடுத்து உங்களுக்கான பதிவிறக்கங்களுக்காக எவ்வளவு சேமிப்பு இடத்தை ஒதுக்க விரும்புகிறீர்கள் என்பதை முடிவு செய்யுங்கள். 12 திரைப்படங்கள் மற்றும் சீரிஸ் நிகழ்ச்சிகளுக்கு 3 ஜிபி போதுமானது என்று நெட்ஃபிக்ஸ் கூறுகிறது.
- உங்கள் விருப்பத்தை உருவாக்கியதும், Turn On என்பதை கிளிக் செய்யவும்.
பிஎஸ்என்எல் ரூ.47 திட்டம் அறிமுகம்: 28 நாட்கள் வேலிடிட்டி.! என்னென்ன நன்மைகள் தெரியுமா?

விருப்பத்தை மாற்றி அமைக்க என்ன செய்ய வேண்டும்?
உங்கள் விருப்பத்தை மாற்ற விரும்பினால், நெட்ஃபிக்ஸ் பயன்பாட்டில் இந்த ஆட்டோமேட்டிக் டவுன்லோட் அம்சத்தை எப்போது வேண்டுமானாலும் செயலிழக்கச் செய்யலாம். அதேபோல், நீங்கள் ஸ்டோரேஜ் சிக்கல்களில் சிக்கினால், Downloads > Smart Downloads கிளிக் செய்து ஸ்டோரேஜ் விருப்பத்தை மாற்றி அமைக்கலாம். இந்த அம்சம் 7 மாத சோதனைக்குப் பின்னர் இப்போது ஆண்ட்ராய்டு பயனர்களுக்குக் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190