டால்பி அட்மாஸ் ஆடியோ அனுபவத்தை தருகிறது நெட்பிளிக்ஸ்

டால்பி அட்மாஸ் சவுண்ட் வசதி பாங் ஜூன் ஹோ இயக்கிய 'ஓக்ஜா' என்ற திரைப்படத்தின் மூலம் நெட்பிளிக்ஸ் அறிமுகம் செய்துள்ளது.

By Siva
|

உலகம் முழுவதிலும் உள்ள சினிமா ரசிகர்களுக்கு விருப்பமான திரைப்படங்களை வீடியோ ஸ்ட்ரீமிங் மூலம் தந்து கொண்டிருக்கும் சேவையை செய்து வரும் 'நெட்பிளிக்ஸ்' குறித்து அனைவரும் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

டால்பி அட்மாஸ் ஆடியோ அனுபவத்தை தருகிறது நெட்பிளிக்ஸ்

ஏன் உங்கள் மொபைலில் டவுன்லோடு செய்து பார்த்தும் இருப்பீர்கள். தற்போது இந்த நெட்பிளிக்ஸில் டால்பி அட்மாஸ் சவுண்ட் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது தான் உங்களுக்கான இனிமையான தகவல்

முதன்முதலாக இந்த டால்பி அட்மாஸ் சவுண்ட் வசதி பாங் ஜூன் ஹோ இயக்கிய 'ஓக்ஜா' என்ற திரைப்படத்தின் மூலம் நெட்பிளிக்ஸ் அறிமுகம் செய்துள்ளது. இந்த படத்தை டால்பி விஷனிலும் ரசிகர்கள் பார்த்து ரசிக்கலாம்

டால்பி அட்மாஸ் ஆடியோ அனுபவத்தை தருகிறது நெட்பிளிக்ஸ்

இந்த டால்பி அட்மாஸ் இசை அனுபவத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வேறு சில முன்னணி திரைப்படங்களுகும் வாடிக்கையாளர்களுக்கு தரவுள்ளது. ஜூனில் ஓக்ஜா படத்திற்காக டால்பி அட்மாஸ் அனுபவத்தை தரும் நெட்பிளிக்ஸ், ஜூலையில் 'பிளேம்', ஆகஸ்ட் மாதத்தில் 'டெத் நோட்', 'டிசம்பரில் பிரைட் மற்றும் வீல்மேன் போன்ற படங்களுக்கும் இந்த ஆடியோ வசதியை தரவுள்ளது.

மேலும் பல வீடியோக்கள் மற்றும் திரைப்படங்களை 4K மற்றும் HDR வசதியுடன் வாடிக்கையாளர்களுக்கு நெட்பிளிக்ஸ் வழங்கவிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது

கடந்த 2012ஆம் ஆண்டு டால்பி லேபரட்டரீஸ் என்ற நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்ட இந்த டால்பி அட்மாஸ் ஆடியோ டெக்னாலஜி, உண்மையில் ஆடியோ உலகில் செய்த பெரும் புரட்சி என்றுதான் சொல்ல வேண்டும். இந்த ஆடியோ வசதி திரையில் உள்ள ஒரு நிகழ்ச்சி உங்கள் கண்முன்னே நடப்பது போல் நிஜத்தை போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும்

தற்போது இந்த டால்பி அட்மாஸ் வசதி ஒருசில குறிப்பிட்ட உபகரணங்களில் மட்டுமே இருந்து வருகிறது. அவைகளில் மைக்ரோசாப்ட் எக்ஸ்பாக்ஸ் ஒன், ஒன் எஸ் மற்றும் 2017 எல்ஜி OLED தொலைக்காட்சிகள் ஆகியவை சில உதாரணங்கள் ஆகும்.

எக்ஸ்பாக்ஸ் வாடிக்கையாளர்கள் டால்பி அட்மாஸ் ஆடியோ அனுபவத்தை பெற ஹோம் தியேட்டர் அல்லது டிவியுடன் இணைக்க வேண்டும். ஹெட்போன் மூலம் இந்த ஆடியோவை பெற டால்பி ஹெட்போன்களை உபயோகப்படுத்த வேண்டும்

ஆனால் அதே நேரத்தில் எல்ஜி OLED தொலைக்காட்சிகளில் டால்பி அட்மாஸ் ஆடியோ அனுபவத்தை பெற எந்தவிதமான உபகரணங்களையும் இணைக்க வேண்டிய அவசியம் இல்லை.

உலகில் உள்ள அனைத்து நெட்பிளிக்ஸ் வாடிக்கையாளர்களுக்காக இன்னும் நிறைய புதுப்புது டெக்னாலஜி அறிமுகம் செய்யப்படவுள்ளது. எனவே இந்த டெக்னாலஜியை அனுபவிக்க அதற்கு தகுந்தால் போல உங்களுடைய உபகரணமும், அல்ட்ரா HD நெட்பிளிக்ஸ் பிளானில் நீங்கள் இணைந்திருப்பதும் முக்கியம் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

Read more about:
English summary
Netflix original content now supports Dolby Atmos

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X