Home
Apps

ஒரே கல்லுல 3 மாங்காய்.. Netflix + Prime Video + Hotstar.. Jio SIM கஸ்டமர்களே இந்த பேமிலி பிளானை விட்றாதீங்க!

ரிலையன்ஸ் ஜியோ (Jio) நிறுவனமானது பல வகையான விலைகளில், பல வகையான நன்மைகளை வழங்கும் திட்டங்களை தன்வசம் கொண்டுள்ளது. அந்த பட்டியலில் இலவச நெட்பிளிக்ஸ் சந்தா, இலவச அமேசான் பிரைம் வீடியோ சந்தா மற்றும் ஹாட்ஸ்டார் ஆகிய 3 முக்கிய நன்மைகளை வழங்கும் ஒரு போஸ்ட்பெய்ட் திட்டமும் அடங்கும்.

போஸ்ட்பெய்ட் சிம் அல்லது போஸ்ட்பெய்ட் திட்டத்தின் மூலம் ரீசார்ஜ் செய்யும் ஒரு குறிப்பிட்ட வகை ஜியோ கஸ்டமர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், இந்த திட்டத்தை பற்றி நீங்கள் நிச்சயம் தெரிந்துகொள்ள விரும்புவீர்கள். ஏனென்றால் போஸ்ட்பெய்ட் பிரிவில் ஜியோவிடம் அதிக சலுகைகள் இல்லை. ஏர்டெல் (Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற நிறுவனங்களிலும் இதே நிலைதான்.

Netflix + Prime Video + Hotstar.. Jio SIM கஸ்டமர்களே விட்றாதீங்க!

ஏனென்றால் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பலவிதமான போஸ்ட்பெய்ட் திட்டங்களை வழங்குவதில் எந்த பயனும் இல்லை. மாறாக, தங்கள் சேவைகளின் மூலம் லாபம் ஈட்டுவதற்கு போதுமான வாய்ப்புகள் உள்ள ஒவ்வொரு விலைப்பிரிவிற்கும் ஒரே ஒரு திட்டத்தை வைத்திருக்க அவைகள் முயற்சிக்கின்றன.

அந்த வரிசையில் நாம் இங்கே பேசிக்கொண்டிருக்கும் ஜியோ போஸ்ட்பெய்ட் திட்டம் - ஒரு தனித்துவமான திட்டமாகும். டெலிகாம் துறையில் நெட்பிளிக்ஸ் அணுகலை வழங்கும் திட்டங்கள் அதிகம் இல்லை. ஆனால் இந்த ஜியோ போஸ்ட்பெய்ட் திட்டம் அதை வழங்குகிறது. மேலும், இது நெட்பிளிக்ஸை அணுகலை மட்டுமல்ல, பிரைம் வீடியோ போன்ற பிற ஓடிடி (ஓவர்-தி-டாப்) தளங்க்ளுக்கான அனுகலையும் வழங்குகிறது

அது ஜியோவின் ரூ.749 போஸ்ட்பெய்ட் திட்டம் ஆகும். இந்த திட்டத்தின் இறுதி பில்லிங்கின் போது, ​​பில்லில் ஜிஎஸ்டி சேர்க்கப்படும் என்பதை நினைவில் கொள்ளவும். எனவே உங்கள் இறுதி தொகை ரூ. 749-ஐ விட சற்று அதிகமாக இருக்கும். நிச்சயமாக இது ஒரு மலிவு விலை திட்டம் அல்ல. ஆனாலும் இது நெட்பிளிக்ஸ் + ப்ரைம் வீடியோ + அன்லிமிடெட் 5ஜி ஆகிய 3 முக்கிய நன்மைகளை கூட்டாக வழங்குவதால்.. மிகவும் கவனிக்கத்தக்க திட்டமாக உள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ ரூ. 749 போஸ்ட்பெய்ட் திட்டத்தின் நன்மைகள்: ரிலையன்ஸ் ஜியோ ரூ.749 போஸ்ட்பெய்ட் திட்டமானது - அன்லிமிடெட் வாய்ஸ் காலிங், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் 1 மாதத்திற்கு 100ஜிபி டேட்டா ஆகிய நன்மைகள் கிடைக்கும். அதன் பிறகு, பயனர்கள் ஒரு ஜிபிக்கு ரூ.10 செலுத்த வேண்டும்.

தகுதிவாய்ந்த டிவைஸ்கள் மூலம் 5ஜி நெட்வொர்க்கை அணுக உதவும் இந்த திட்டத்தின் மூலம் பயனர்கள் 3 பேமிலி சிம் கார்டுகள் வரை பெறலாம். குடும்பத்திற்கான ஒவ்வொரு கூடுதல் சிம் கார்டுக்கும் இந்த திட்டத்தில் மாதத்திற்கு ரூ.150 வசூலிக்கப்படும். நெட்ஃபிக்ஸ் பேஸிக் மற்றும் அமேசான் பிரைம் லைட் ஆகியவைகள் பயனர்களுக்காக ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன. இவற்றுடன், பயனர்கள் நிறுவனத்திடமிருந்து ஜியோ ஹாட்ஸ்டார் சந்தாவையும் பெறுகிறார்கள்.

ஆக்ட் அறிவித்துள்ள 3 மாத ஆபர்: பிராட்பேண்ட் ஆபர் தொடர்பான மற்ற செய்திகளை பொறுத்தவரை. இந்தியாவின் முன்னணி வயர்டு இணைய சேவை வழங்குநர்களில் ஒன்றான ஆக்ட் ஃபைபர்நெட் (ACT Fibernet - அட்ரியா கன்வர்ஜென்ஸ் டெக்னாலஜிஸ் லிமிடெட்) நிறுவனமானது, தனது பயனர்களின் ஹோம் எண்டர்டெயின்மெண்ட் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக ஸ்பாட்டிஃபை உடன் ஒரு கூட்டாண்மையை அறிவித்துள்ளது.

இந்த கூட்டாண்மையின் ஒரு பகுதியாக, தகுதியுள்ள ஆக்ட் வாடிக்கையாளர்கள் மூன்று மாதங்களுக்கு ஸ்பாட்டிஃபை பிரீமியம் ஸ்டாண்டர்ட் அணுகலை இலவசமாக பெறுவார்கள். இதன்கீழ் ஆக்ட் ஃபைபர்நெட் பயனர்கள் விளம்பரங்கள் இல்லாமல் ஸ்பாட்டிஃபை பிரீமியத்தை அணுக முடியும் மற்றும் பல டிவைஸ்களில் உயர்தர ஆடியோ ஸ்ட்ரீமிங்கை அனுபவிக்க முடியும். இதுகுறித்த இன்னும் விரிவான விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும். https://tamil.gizbot.com/news/act-fibernet-announced-3-months-free-spotify-premium-offer-to-eligible-users-all-you-need-to-know-068697.html

Best Mobiles in India

English summary
Netflix Amazon Prime Video JioHotstar 3 Major OTT Apps in Single Jio Family Postpaid Plan Rs 749
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X