நாசாவின் TEES செயற்கைக்கோள் படம்பிடித்து அனுப்பிய வால் நட்சத்திரப் பதிவுகள்!

C/2018 N1 வால் நட்சத்திரம் பூமியிலிருந்து 29 மைல் (49 மில்லியன் கி.மீட்டர்) தூரத்தில் பிசிஸ் ஆஸ்டிரினஸ் (Piscis Austrinus) என்னும் விண்மீனுக்குத் தெற்காக அமைந்துள்ளது.

|

சூரிய மண்டலத்துக்கு வெளியே இருக்கும் கோள்களைப் புறக்கோள்கள் (Exoplanet) என்கிறோம். இத்தகைய புறக் கோள்களைக் கண்டறிந்து ஆய்வு செய்வதற்காக அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அனுப்பிய செயற்கைக் கோள் TESS என அழைக்கப்படுகிறது. புறக்கோள் ஆய்வு செயற்கைக் கோள் Transiting Exoplanet Survey Satellite – TESS என இதனை விரிவுபடுத்தலாம்.

கடந்த ஏப்ரல் மாதம் விண்ணில் செலுத்தப்பட்ட இந்த செயற்கைக் கோள் தன்னுடைய ஆய்வுப் பணியைத் தற்போது தொடங்கியுள்ளது. இது எடுத்து அனுப்பியுள்ள படங்கள் ஆச்சரியமூட்டும் வகையில் அமைந்துள்ளன. பூமியிலிருந்து 48 மில்லியன் கி்.மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு வால்நட்சத்திரத்தை இச்செயற்கைக் கோள் படம் பிடித்துள்ளது.

TESS செயற்கைக் கோள்

TESS செயற்கைக் கோள்

TESS செயற்கைக் கோள் தன்னுடைய ஆய்வுப் பணியைத் தொடங்கிய ஜீலை 25 ஆம் நாளில், 17 மணி நேரத் தேடலில், இந்த வால் நட்சத்திரத்தின் இயக்கக் காட்சிகளைத் தொடர்ச்சியாகப் பதிவு செய்துள்ளது. இந்த நட்சத்திரத்திற்கு C/2018 N1 என்று பெயரிடப்பட்டுள்ளது.

49 மில்லியன் கி.மீட்டர்

49 மில்லியன் கி.மீட்டர்

C/2018 N1 வால் நட்சத்திரம் பூமியிலிருந்து 29 மைல் (49 மில்லியன் கி.மீட்டர்) தூரத்தில் பிசிஸ் ஆஸ்டிரினஸ் (Piscis Austrinus) என்னும் விண்மீனுக்குத் தெற்காக அமைந்துள்ளது. இது வலது புறத்திலிருந்து இடது புறமாகத் தன்னுடைய வட்டப் பாதையில் சுழன்று கொண்டிருக்கிறது.

நாசா

நாசா

இந்த வால்மீனைப் பற்றிய படத்தை அனுப்பியதன் மூலம், TEES செயற்கைக் கோள் அகன்ற வானத்தில் உள்ள புறக் கோள்களை பற்றிய ஆய்வை நீண்ட காலத்திற்கு மேற்கொள்ளக் கூடிய திறன் மிக்கது என்பதை நிரூபித்துள்ளதாக நாசாவின் அறிக்கை கூறுகிறது.

வால் நட்சத்திரம்

வால் நட்சத்திரம்

வாயுக்களால் நிரம்பிய நட்சத்திரத்தின் வால் பகுதி நீண்டிருப்பதைக் படக்காட்சியின் வழியே காண முடிகிறது.

TESS செயற்கைக்கோள் அனுப்பிய படம் வானியல்சார் ஆய்வுகளுக்கு ஒரு விலைமதிப்பற்ற புதையலைக் கொண்டு வந்துள்ளது. படப் பதிவின்போது வால் நட்சத்திரம் கறுப்பு மற்றும் வெள்ளையென மாறி மாறித் தோன்றிய அற்புதக் காட்சி வானியல் அறிஞர்களுக்கு கண்கொள்ளாக் காட்சியாக அமைந்துள்ளது.

வீடியோ

வீடியோ

TESS செயற்கைக் கோள் அனுப்பிய வீடியோ பதிவின் முடிவில், அகன்ற மங்கலான வில் போன்ற வளைவு, மையப் பகுதியின் குறுக்காக இடப்புறத்திலிருந்து வலப்பகுதிக்கு செல்வதைக் காண முடிந்தது. இது செவ்வாய் கிரகத்திலிருந்து வெளிப்பட்ட ஒளியாகும். செயற்கைக் கோள் வெளிப்படுத்திய காட்சியில் செவ்வாய் கிரகம் தென்படவில்லை. செயற்கைக் கோள் காட்சிகளைப் பதிவு செய்த போது, செவ்வாய் கிரகம் மிகவும் பிரகாசமாக பூமிக்கு எதிர் திசையில் அல்லது அதற்கு நெருக்கமான தூரத்தில் இருந்திருக்கலாம் என நாசா விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

 முதல் காட்சிப் பதிவு

முதல் காட்சிப் பதிவு

TESS செயற்கைக் கோள் அனுப்பிய முதல் காட்சிப் பதிவு இது. 13.5 நாட்களுக்கு ஒருமுறை இது போன்ற காட்சிகளைப் பதிவு செய்து இச் செயற்கைக் கோள் அனுப்பும். ஏனென்றால் இந்த செயற்கைக் கோள் தன்னுடைய சுற்று வட்டப் பாதையை ஒரு முறை சுற்றிவர 13.5 நாட்களை எடுத்துக் கொள்கிறது.

Best Mobiles in India

English summary
NASAs Planet Hunting TESS Satellite Captures Image of Comet: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X