ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் மைஜியோ ஆப் புதிய அப்டேட்.!

வாடிக்கையாளர்கள் தங்களது ஐஒஎஸ் சாதனங்களில் ஜியோ ஃபைபர் மற்றும் ஜியோஃபை நெட்வொர்க்குடன் இணைத்து சேவைகளை மேம்படுத்தப்பட்ட மைஜியோ செயலியில் பயன்படுத்த முடியும்.

By Prakash
|

தற்சமயம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் மைஜியோ ஆப் பகுதிக்கு புதிய அப்டேட் வழங்கப்பட்டுள்ளது, மேலும் இந்த அப்டேட் பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது. மேலும் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு இந்த அப்டேட் பயனுள்ள வகையில் உள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் மைஜியோ ஆப் புதிய அப்டேட்.!

இப்போது வழங்கப்பட்டுள்ள அப்டேட் பொறுத்தவரை ஐஒஎஸ் சாதனங்களுக்கான மைஜியோ செயலியில் வாடிக்கையாளர்கள் பேடிஎம் மற்றும் ஜியோமனி வாலெட் கணக்குகளை கொண்டு பணம் செலுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் மைஜியோ ஆப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு பதிப்பில் பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது.

இந்த ஐஒஎஸ் செயலியின் புதிய அப்டேட் பொறுத்தவரை சில பிழை திருத்தங்கள் மற்றும் பயன்பாடு போன்றவை மேம்படுத்தப்பட்டுள்ளது, மேலும் வாடிக்கையாளர்கள் தங்களது ஐஒஎஸ் சாதனங்களில் ஜியோ ஃபைபர் மற்றும் ஜியோஃபை நெட்வொர்க்குடன் இணைத்து சேவைகளை மேம்படுத்தப்பட்ட மைஜியோ செயலியில் பயன்படுத்த முடியும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் மைஜியோ ஆப் புதிய அப்டேட்.!

வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி தற்சமயம் ஆண்ட்ராய்டு அப்டேட்டில் வழங்கப்பட்டுள்ளது, இந்த அம்சம் ஐஒஎஸ் பதிப்பில் இன்னும் வழங்கப்படவில்லை.
ஜியோவின் சராசரி டவுன்லோடு வேகம் இப்போது நொடிக்கு 19.6எம்பி முதல் 25.2 வரை உயர்ந்துள்ளது, மேலும் கடந்த அக்டோபர் மாத நிலவரப்படி நொடிக்கு 21.8எம்பி வேகத்தில் மொபைல் டேட்டா டவுன்லோடு வேகம் வழங்கியுள்ளது.

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மீண்டுமொரு கட்டண யுத்தத்தை தொடுத்துள்ளது. கடந்த அக்டோபர் 19-ஆம் தேதி முதல் புதிய போட்டி திட்டங்களை அறிமுகப்படுத்தி வரும் ஜியோ நிறுவனம், தற்போது அதன் புதிய கட்டண திட்டங்களை "ஹேப்பி நியூ இயர் 2018" என்ற பெயரின் கீழ் அறிவித்துள்ளது.

இந்த "ஹேப்பி நியூ இயர் 2018" தொகுப்பின் கீழ் ரூ.199/- மற்றும் ரூ.299/- என்ற இரண்டு புதிய கட்டண திட்டங்கள் அறிமுகமாகியுள்ளன. இரண்டு புதிய ரிலையன்ஸ் ஜியோ திட்டங்களில் ஒன்றான ரூ.199/- ஆனது, இதர தொலைத் தொடர்புத் திட்டங்களை போலவே இருந்தாலும், வழக்கம் போல மற்றவர்களை விட சிறந்த நன்மைகளை வழங்குகிறது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் மைஜியோ ஆப் புதிய அப்டேட்.!

ரூ.199/- திட்டமானது மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். இது நாள் ஒன்றிற்கு 1.2 ஜிபி அளவிலான அதிவேக டேட்டாவை வழங்குகிறது உடன் ரோமிங் அழைப்புகள் உட்பட வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகளையும் சேர்த்தே வழங்குகிறது.

மறுகையில் உள்ள ரூ.299/- திட்டமானது, நாள் ஒன்றிற்கு 2 ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டமும் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். உடன் ரூ.199/- போலவே இந்த திட்டமும் ரோமிங் அழைப்புகள் உட்பட வரம்பற்ற குரல் அழைப்பு நன்மையையும் வழங்குகிறது.

Best Mobiles in India

English summary
MyJio App Gets HelloJio Voice Assistant Support on Android ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X