வாட்ஸ்அப் செயலியின் புதிய அப்டேட்.! இனி எப்போதும் மியூட்.!

|

வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்களை கொண்டு வந்த வண்ணம் உள்ளது. அதன்படி இப்போது chat-ஐ எப்போதும் மியூட்டில் வைக்கும் வகையில் புதிய அம்சத்தை உருவாக்கியுள்ளது இந்நிறுவனம்.

பயனர்கள் ஒரு தனிநபர்

அதாவது பயனர்கள் ஒரு தனிநபர் அல்லது குழு chat-ஐ எட்டு மணி நேரம் அல்லது ஒரு வாரம் அல்லது ஒரு வருடம் மியூட்செய்யலாம் என்று இருந்தது. இந்நிலையில் தற்போது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் பயனர்களுக்கான வாட்ஸ் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இனி எப்போதும் (Always) மியூட் செய்துகொள்வதற்கான வசதியை பயனர்களுக்கு வாட்ஸ் அப்அளித்துள்ளது.

விருப்பத்தை

இந்த புதிய அம்சம் கடந்த சில மாதங்களாக ஐஒஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு பீட்டா பயன்பாட்டில் சோதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது வாட்ஸ்அப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த புதிய அப்டேட்டில் chat-ஐ மியூட் செய்வதில் ஒரு வருடம் என்பதற்கு பதிலாக எப்போதும் (Always) என்ற விருப்பத்தை கொடுத்துள்ளது.

Jio Cricket ஆப்ஸ் அறிமுகம் செய்த ஜியோ நிறுவனம்.. பரிசுகள் வெல்ல புதிய 'பிளே அலாங்' அம்சம்.!Jio Cricket ஆப்ஸ் அறிமுகம் செய்த ஜியோ நிறுவனம்.. பரிசுகள் வெல்ல புதிய 'பிளே அலாங்' அம்சம்.!

இந்த புதிய அப்டேட் பயனர்களுக்கு

ஒருவேளை இந்த புதிய அப்டேட் பயனர்களுக்கு கிடைக்கவில்லை என்றால், அவர்கள் வாட்ஸ்அப் செயலியை அப்டேட் செய்ய வேண்டும் என்று அந்நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. இதற்கு முன்னதாக வாட்ஸ்அப்-ல் போட்டோ, gif ஃபைல், லிங்க்ஸ், வீடீயோஸ் கோப்புகள், ஆடியோ ஆகியவற்றை தேடி கண்டுபிடிக்கும் வகையில் Search option சேர்க்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ்அப் நிறுவனம்

அதேபோல்வாட்ஸ்அப் நிறுவனம் தற்பொழுது அதன் வாட்ஸ்அப் வெப் தளத்தில் புதிய அம்சங்களை அறிமுகம் செய்வதற்காகச் சோதனை செய்து வருகிறது. பிரபலமான சாட்டிங் பயன்பாட்டிற்கான வெப் பதிப்பில் விரைவில் வாட்ஸ்அப் வாய்ஸ் காலிங் மற்றும் வீடியோ காலிங் அம்சம் அனைவருக்கும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவலை WABetaInfo தற்பொழுது ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளது.

வெர்ஷன் 2.2043.7 அப்டேட் குறித்து

வாட்ஸ்அப் வெப் வெர்ஷன் 2.2043.7 அப்டேட் குறித்து WABetaInfo சமீபத்தில் ஆய்வு செய்துள்ளது. வாட்ஸ்அப் நிறுவனத்தின் அப்டேட் டிராக்கராக செயல்பட்டு வரும் WABetaInfo, இந்த அம்சம் இன்னும் வளர்ச்சியில் உள்ளது என்றும், சோதனையில் இயக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளது.

குரூப் வாய்ஸ்

WABetaInfo-வை பொறுத்தவரை, குரூப் வாய்ஸ் காலிங் மற்றும் வீடியோ காலிங் அம்சம் சோதிக்கப்பட்டு வளர்ச்சியில் உள்ளது என்று தெரிவித்துள்ளது. இந்த ஆண்டில் ஏராளமான ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதால், பெரும்பாலான மக்கள் தங்கள் லேப்டாப் மற்றும் டெஸ்க்டாப்களில் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள்.

இதனால் ஒவ்வொரு முறையும் தங்களுக்கு அழைப்பு வரும்போது அவர்களின் ஸ்மார்ட்போன்களை தேடி எடுத்து பதில் அளிக்கின்றனர். இனி அந்த கவலையை நீக்க, வாட்ஸ்அப் தற்பொழுது இந்த அம்சத்தை வெப் தளத்தில் சோதனை செய்கிறது.

யனர்கள் வெப் தளத்தில் வாட்ஸ்அப்

வாட்ஸ்அப் பயனர்கள் வெப் தளத்தில் வாட்ஸ்அப் பயன்படுத்தும் பொழுது அழைப்புகள் வந்தால், அது ​​அழைப்பை ஏற்க அல்லது நிராகரிக்கும் விருப்பங்களுடன் ஒரு பாப்-அப் நோட்டிபிகேஷனை டெஸ்க்டாப் திரையில் காண்பிக்கிறது. அதேபோல், நீங்கள் ஒருவருக்கு வாட்ஸ்அப் வெப் மூலம் அழைக்கும் போது, ​​ஒரு சிறிய கால் ஸ்டேட்டஸ் நோட்டிபிகேஷன் பாக்ஸ் திரையில் காண்பிக்கப்படுகிறது.

அம்சம் எப்பொழுது அனைவ

இந்த புதிய அம்சம் எப்பொழுது அனைவருக்கும் கிடைக்கப்பெறும் என்பது பற்றி அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இன்னும் வெளியிடப்படவில்லை. இதன் சோதனையில் எதிர்பாராத தாமதங்கள் எதுவும் இல்லை என்றால், வரும் சில வாரங்களில் இந்த அம்சம் வெளிவரக்கூடும் என்று WABetaInfo கணித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Mute WhatsApp chats forever: New feature introduced and More Details: Read more about this in Tamil GizBotMeta Keywords: whatsapp

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X