ஆண்ட்ராய்டு இயங்குதளத்துக்கான பயர்பாக்ஸ் ஃபோகஸ் செயலி வெளியானது.!

|

மொசில்லா ஒருவழியாக பயர்பாக்ஸ் ஃபோகஸ் செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் வெளியிட்டுள்ளது. மொசில்லாவின் புதிய இண்டர்நெட் பிரவுசர் செயலி ஐஒஎஸ் செயலி 2016-இல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் ஆண்ட்ராய்டு இயங்குதளத்திலும் வழங்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு இயங்குதளத்துக்கான பயர்பாக்ஸ் ஃபோகஸ் செயலி வெளியானது.!

பயர்பாக்ஸ் செயலி மற்ற பிரவுசர்களை விட மகிவும் வித்தியாசமான ஒன்று ஆகும். மற்ற பிரவுசர்களை போன்று பிரைவேட் பிரவுசிங்-க்கு மாற்றி கொள்ளும் வசதி இந்த செயலியில் வழங்கப்படவில்லை. எனினும் பிரவுசிங் செய்யும் வரலாற்றை ஃபோகஸ் செயலி சேமிக்காது. இதனால் ஒவ்வொரு பிரவுசிங் வரலாறும் பிரைவேட் பிரவுசிங் போன்றதாகும்.

பிரவுசிங் செய்து முடித்ததும் வாடிக்கையாளர்கள் செயலியில் வழங்கப்பட்டுள்ள குப்பை தொட்டி ஐகானை கிளிக் செய்து வரலாற்றை முழுமையாக அழித்து விடலாம். இத்துடன் இந்த பிரவுசரில் புக்மார்க்கிங் செய்யும் வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது.

மொபைல் பிரவுசர்களில் மிகவும் அத்தியாவசிய அம்சமாக இருக்கும் ஆட் பிளாக்கர் வசதி இந்த செயலியில் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் கஸ்டமைஸ்டு பிளாக்கிங் வசதி பிரவுசரில் தடையில்லா பிரவுசிங் அனுபவத்தை வழங்குகின்றன.

ஃபோகஸ் செயலியின் ஐஓஎஸ் பதிப்பு சஃபாரி பிரவுசரில் ஆட் பிளாக் செய்யும் வசதியை வழங்குகிறது. இந்த வசதி ஆண்ட்ராய்டில் வழங்கப்படவில்லை என்றாலும் எத்தனை விளம்பரங்கள் பிளாக் செய்யப்பட்டுள்ளன என்பதை பார்க்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு பதிப்பு ஃபோகஸ் செயலியில் பேக்கிரவுண்டில் பிரவுசர் இயங்குவதை நோட்டிஃபை செய்யும் வசதியும், உடனடியாக அதனை முடக்கும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது.

ஃபோகஸ் செயலி தேர்வு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு ஏற்றதாக வடிவமைக்கப்பட்டுள்ளதால் இது அனைவருக்கும் ஏற்றதாக இருக்காது. எனினும் இந்த செயலி தனித்துவம் வாய்ந்த அம்சங்களை கொண்டுள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
Mozilla has launched Firefox Focus for Android users six months after it was launched for iOS.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X