Home
Apps

Google ஆண்டவர் ரெடி. எந்தெந்த Motorola போன்களுக்கு Android 17 Update உடனே கிடைக்கும்? இதோ லிஸ்ட்!

கூகுள் (Google) நிறுவனம், ஆண்ட்ராய்டு போன்களுக்கான அதன் நெக்ஸ்ட் ஜெனரேஷன் ஆப்ரேட்டிங் சிஸ்டம் ஆன ஆண்ட்ராய்டு 17 ஓஎஸ்-ஐ (Android 17 OS) வெளியிட தயாராகி வருகிறது. வழக்கம் போல இது முதலில் கூகுள் பிக்சல் (Google Pixel) போன்களுக்கு தான் வந்தடையும்.

அதை தொடர்ந்து மோட்டோரோலா (Motorola) உள்ளிட்ட பிற நிறுவனங்களும் தங்கள் ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு 17 ஓஎஸ் அப்டேட்டை (Android 17 OS Update) வழங்க தொடங்கும். உங்களிடம் ஒரு மோட்டோரோலா ஸ்மார்ட்போன் இருந்தால், அதற்கு ஆண்ட்ராய்டு 17 அப்டேட் கிடைக்குமா என்று நீங்கள் யோசிக்கலாம்.

எந்தெந்த Motorola போன்களுக்கு Android 17 Update உடனே கிடைக்கும்?

மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால், ஹை-எண்ட் ரேஸர் (Razr) மாடல்கள் முதல் விலை குறைவான ஜி-சீரிஸ் (G-Series) போன்கள் வரை பலவிதமான மோட்டோரோலா ஸ்மார்ட்போன்களுக்கு இந்த அப்டேட் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உங்கள் ஸ்மார்ட்போனும் இதில் இடம்பெற்றுள்ளதா என்பதை அறிய கீழே உள்ள பட்டியலை பார்க்கவும். பின்வரும் மோட்டோரோலா ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டு 17 அப்டேட்டை பெற தகுதியான மாடல்கள் ஆகும்.

மோட்டோரோலா ரேஸர் சீரிஸ்
1. மோட்டோரோலா ரேஸர் 70 (ரேஸர் 2026)
2. மோட்டோரோலா ரேஸர் 70+ (ரேஸர்+ 2026)
3. மோட்டோரோலா ரேஸர் 70 அல்ட்ரா (ரேஸர் அல்ட்ரா 2026)
4. மோட்டோரோலா ரேஸர் 60 (ரேஸர் 2025)
5. மோட்டோரோலா ரேஸர்+ 2025
6. மோட்டோரோலா ரேஸர் 60 அல்ட்ரா (ரேஸர் அல்ட்ரா 2025)
7. மோட்டோரோலா ரேஸர் 50 (ரேஸர் 2024)
8. மோட்டோரோலா ரேஸர் 50 அல்ட்ரா (ரேஸர்+ 2024)

மோட்டோரோலா எட்ஜ் சீரிஸ்
1. மோட்டோரோலா எட்ஜ் 70
2. மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ
3. மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ+
4. மோட்டோரோலா எட்ஜ் 70 ஃபியூஷன்
5. மோட்டோரோலா எட்ஜ் 70 ஃபியூஷன்+
6. மோட்டோரோலா எட்ஜ் 60
7. மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ

8. மோட்டோரோலா எட்ஜ் 60 நியோ
9. மோட்டோரோலா எட்ஜ் 60 ஃபியூஷன்
10. மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்டைலஸ்
11. மோட்டோரோலா எட்ஜ் 50
12. மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ
13. மோட்டோரோலா எட்ஜ் 50 அல்ட்ரா
14. மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ
15. மோட்டோரோலா எட்ஜ் 50 ஃபியூஷன்
16. மோட்டோரோலா எட்ஜ் (2026)
17. மோட்டோரோலா எட்ஜ் (2025)

மோட்டோரோலா மோட்டோ ஜி சீரிஸ்
1. மோட்டோ ஜி ஸ்டைலஸ் 5ஜி (2026)
2. மோட்டோ ஜி ஸ்டைலஸ் 5ஜி (2025)
3. மோட்டோ ஜி பவர் 5ஜி (2026)
4. மோட்டோ ஜி பவர் 5ஜி (2025)
5. மோட்டோ ஜி ப்ளே (2026)
6. மோட்டோ ஜி (2026)
7. மோட்டோ ஜி (2025)

8. மோட்டோ ஜி87
9. மோட்டோ ஜி86
10. மோட்டோ ஜி77
11. மோட்டோ ஜி75
12. மோட்டோ ஜி67
13. மோட்டோ ஜி57
14. மோட்டோ ஜி57 பவர்
15. மோட்டோ ஜி47
16. மோட்டோ ஜி37
17. மோட்டோ ஜி37 பவர்

மேலே உள்ள பட்டியலில் உங்கள் மோட்டோரோலா ஸ்மார்ட்போன் இடம்பெற்றிருந்தால், அதற்கு ஆண்ட்ராய்டு 17 அப்டேட் கிடைப்பது ஏறக்குறைய உறுதி. ஏனெனில் மோட்டோரோலா நிறுவனத்தின் தற்போதைய அப்டேட் கொள்கையின் அடிப்படையிலேயே இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதுவரை அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து ஸ்மார்ட்போன்களுக்கும் ஆன அப்டேட் கொள்கையை மோட்டோரோலா அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

எனவே, உறுதியற்ற மாடல்கள் இந்த பட்டியலில் சேர்க்கப்படவில்லை. அதாவது இந்த பட்டியலில் இல்லாத மாடல்கள் கூட அப்டேட்டை பெற வாய்ப்புள்ளது என்று அர்த்தம். ஆண்ட்ராய்டு 17 ஓஎஸ்-க்கான சரியான வெளியீட்டு தேதியை மோட்டோரோலா இன்னும் அறிவிக்கவில்லை. எனினும், இதுவரை வெளியான ஆண்ட்ராய்டு 17 பீட்டா (Beta) பதிப்புகள் பெரும்பாலும் கடந்த ஆண்டின் ஆண்ட்ராய்டு 16-ஐ போலவே இருப்பதால், கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு 17-ஐ ஜூன் மாதத்தில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் அடிப்படையில், கடந்த ஆண்டை போலவே செப்டம்பர் மாதவாக்கில் மோட்டோரோலாவும் ஆண்ட்ராய்டு 17-ஐ வெளியிடும் என்று நாம் எதிர்பார்க்கலாம்.

Best Mobiles in India

English summary
Motorola Smartphones eligible for Android 17 update Razr Series Edge Series G Series List
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X