மூளையின் விரிவான மேப் தயார் ! விஞ்ஞானிகள் அசத்தல்..!

இதன்மூலம் ஹிப்போகேம்பஸ்-ஐ விஞ்ஞானிகள் புரிந்துகொள்வதுடன், எப்படி இதன் சீர்கேடு நோய்களுக்கு வழிவகுக்கிறது என்பதையும் அறியமுடியும்" என்கிறார் மைக்கேல்.

|

அல்சைமர் நோயுடன் தொடர்புடைய மூளைப் பகுதியை தெளிவாக புரிந்துகொள்ளும் வகையில், அமெரிக்காவில் உள்ள விஞ்ஞானிகள் இதுவரை இல்லாதவகையில் மூளையின் நினைவகப் பகுதியான 'ஹிப்போகேம்பஸ்'-ன் விரிவான மாதிரியை உருவாக்கியுள்ளனர்.

மூளையின் விரிவான மேப் தயார் ! விஞ்ஞானிகள் அசத்தல்..!

ப்ளோரோசென்ட் டிரேசர்கள் மற்றும் முப்பரிமாண அனிமேசன் மூலம் உருவாக்கப்பட்டுள்ள இந்த மாதிரியானது, ஹிப்போகேம்பஸின் உள்கட்டமைப்புகள், நரம்பு இணைப்புகள் மற்றும் செயல்பாடுகளை உயிரோட்டமாக காண்பிப்பதாக தெரிவிக்கிறது நரம்பியல் ஆய்வுக்கட்டுரை முடிவுகள்.

"புதிய அட்லஸ் வரைபடத்தை போன்று, இதுவரை இல்லாத வகையில் ஹிப்போகேம்பஸின் மிகவும் விரிவான வரைபடத்தை உருவாக்கியுள்ளோம்" என கூறுகிறார் இந்த ஆய்வை செய்தவரும், சவுத் கலிபோர்னியா பல்கலைகழகத்தின் கிக் ஸ்கூல் ஆப் மெடிசன்-ஐ சேர்ந்தவருமான மைக்கேல் பென்கவுஸ்கி.

"இந்த விரிவான வரைபடத்தின் மூலம் அனைத்தும் பகுதிகளையும், அவற்றின் செயல்பாடுகளையும் நம்மால் தெளிவாக பார்க்கமுடியும். இதன்மூலம் ஹிப்போகேம்பஸ்-ஐ விஞ்ஞானிகள் புரிந்துகொள்வதுடன், எப்படி இதன் சீர்கேடு நோய்களுக்கு வழிவகுக்கிறது என்பதையும் அறியமுடியும்" என்கிறார் மைக்கேல்.

மூளையின் அடிப்பகுதியில் அமைந்திருக்கும் மனிதனின் ஹிப்போகேம்பஸ், கடற்குதிரையின் வடிவத்தை ஒத்திருக்கும். இது நினைவுகளை சேமிப்பது, உணர்வுகளை சீர்படுத்த உதவுவது மற்றும் சுற்றுபுறத்தை ஆராய்ந்து நகர்வதற்கு வழிகாட்டுதல் போன்றவற்றை செய்கிறது.

மூளையின் விரிவான மேப் தயார் ! விஞ்ஞானிகள் அசத்தல்..!

அல்சைமர் நோயால் முதலில் பாதிக்கப்படுவது மூளையின் இந்த பகுதி தான் மற்றும் ஹிப்போகேம்பஸ் பாதிப்பு, வலிப்பு மற்றும் இதர நோய்களுக்கு வழிவகுக்கும்.

எலியின் மூளை மனித மூளையை போன்றே கட்டமைக்கப்பட்டுள்ளதால், விஞ்ஞானிகள் எலியின் மூளையை வைத்து இதில் செயல்பட்டனர்.

ஹிப்போகேம்பஸின் இந்த புதிய வரைபடத்தை பயன்படுத்தி விஞ்ஞானிகள், மரபணு சம்பந்தப்பட்ட மருந்துகளை குறைந்த பக்கவிளைவுகளுடன் குறிப்பிட்ட நரம்புகளில் செலுத்தமுடியும் என்கிறார் யூ.எஸ்.சி நரம்பியல் துறை போராசிரியர் ஹாங்-வை டாங்.

நீண்டகாலமாக விஞ்ஞானிகள் ஹிப்போகேம்பஸின் 4 அடிப்படை பகுதிகளின் கட்டமைப்புகளை மட்டுமே தெரிந்துவைத்திருந்தனர். ஆனால் இந்த புதிய வரைபடத்தின் உதவியுடன், ஹிப்போகேம்பஸின் உட்பகுதிகள் மற்றும் எப்படி நரம்புகள் அனைத்து பாகங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன என்பதை விஞ்ஞானிகள் காண்பிக்கமுடியும்.

மூளையின் விரிவான மேப் தயார் ! விஞ்ஞானிகள் அசத்தல்..!

"எலியின் ஹிப்போகேம்பஸ் மரபணு செயல்பாடுகளை, வரைபடத்துடன் சேர்த்தீ பார்க்கும் போது எங்களின் ஒட்டுமொத்த புரிதலும் மாறியது. வேறு செயல்பாடுகள் செய்வதை காணமுடிகிறது மற்றும் எப்படி ஒட்டுமொத்த பகுதிகளும் இணைந்து செயல்படுகின்றன என்ற புதிய புரிதல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆழ்ந்த மற்றும் விரிவான தாக்கம் ஏற்படும்" என்கிறார் மைக்கேல்.
Best Mobiles in India

English summary
Most Detailed' Map of Hippocampus Created, Scientists Claim: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X