Home
Apps

மொபோமார்கெட் : தலைசிறந்த மூன்றாம் தரப்பு ஆப் ஸ்டோர்

By Super

ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கென பிரத்யேகமான ஆப் ஸ்டோர் ஒன்றை கூகுள் மக்கள் பயன்பாட்டிற்காக வழங்கியுள்ளது. கூகுள் ப்ளே ஸ்டோரில் லட்ச கணக்கான செயலிகள் குவிந்து கிடக்கின்றது. அதிகப்படியான செயலிகள் இருப்பதால் சரியான செயலியை தேர்வு செய்வது மக்களுக்கு சற்றே சிரமமான காரியமே.

இந்நிலையில் மொபோமார்கெட் எனும் மூன்றாம் தரப்பு ஆப் ஸ்டோர் கூகுள் ப்ளே ஸ்டோரில் இல்லாத பல்வேறு செயலிகளை வழங்குகின்றது. அதிகப்படியான செயலிகளை கொண்ட ஆண்ட்ராய்டு செயலியான மொபோமார்கெட் ஒரு ஆப் ஸ்டோர் ஆகும். இங்கு பிரபல பிரான்ட் மற்றும் கேமிங் நிறுவனங்களின் புதிய கேம்களை பதிவிறக்கம் செய்திட முடியும். இந்தியாவில் பல மொழிகள் பயன்படுத்தப்படுவதால் இந்நிறுவனம் தமிழ் உட்பட மூன்று மொழிகளில் இந்த செயலி வேலை செய்கின்றது.

மொபோமார்கெட்

மொபோமார்கெட்

மற்றவைகளை விட மொபோமார்கெட் எந்தளவு சிறப்பானது என்பதை புரிந்து கொள்ள இந்த செயலியை பயன்படுத்தினோம். இந்த செயலி வாடிக்கையாளர்கள் சிரமம் இன்றி பயன்படுத்துமளவு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் செயலிகள் அழகாக வகைப்படுத்தப்பட்டுள்ளன, இதனால் செயலிகளை கண்டறிவது எளிமையாக இருக்கின்றது. ஆப் ஸ்டோரில் சிறப்பான செயலியை கண்டறிய ஏதுவாக செயலிகளை இந்த ஆப் பட்டியலிடுகின்றது.

செயலி

செயலி

மொபோமார்கெட் செயலியில் க்ளீனர் அம்சமும் வழங்கப்பட்டுள்ளதால், மொபைல் போன் எவ்வித பிரச்சனைகளும் இல்லாமல் இயங்கும். இதோடு கருவியின் வேகம் சீராக இருக்க இந்த க்ளீனர் செயலி வழி செய்யும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மொபோமார்கெட்

மொபோமார்கெட்

மேலும் இந்த செயலியை கொண்டு அனைத்து வித செயலிகளையும் ஒரே தளத்தில் பயன்படுத்த முடியும். பல்வேறு புதிய செயலி மற்றும் கேம்களை எளிமையாக கண்டறிய முடியும். வேண்டும் நேரத்தில் பதிவிறக்கம் செய்து தேவையில்லாத போது அதனினை அழித்து விடலாம். இதற்கு மொபோமார்கெட் செயலியின் ஏபிகே தரவினை அந்நிறுவனத்தின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின் அதனினை இன்ஸ்டால் செய்து லாக் இன் செய்த பின் செயலியை பன்படுத்த முடியும்.

முக்கிய அம்சங்கள்

முக்கிய அம்சங்கள்

இந்த ஸ்டோரில் இருக்கும் பல்வேறு விதமான செயலிகளை பதிவிறக்கம் செய்ய பரிந்துரைகள் வழங்கப்படும். இது சற்றே கடுப்பாக இருக்கலாம்.

ஆனால் இதன் நன்மை என்னவென்றால் கேம் மற்றும் செயலிகளை பல்வேறு பிரிவில் எளிதாக கண்டுபிடிக்க முடியும். இதன் 'ஃபோகஸ் பேன்' எனும் அம்சமானது செயலிகளை அழகான வடிவில் வழங்குகின்றது.

மொபோமார்கெட் செயலி

மொபோமார்கெட் செயலி

மொபோமார்கெட் செயலியின் முக்கிய அம்சம் இது செயலி மற்றும் கேம்களை தேர்ந்தெடுக்கும் பணியை சுலபமாக்குகின்றது. இதனால் குறிப்பிட்ட மாதத்தில் பிரபலமாக இருக்கும் செயலி மற்றும் கேம்களில் இருந்து உங்களுக்கு பிடித்தமானவற்றை தேர்ந்தெடுக்க முடியும். இதோடு இல்லாமல் கட்டாயம் இருக்க வேண்டும் எனும் 'மஸ்ட்-ஹேவ்' பகுதியில் பயனுள்ள செயலிகளை கண்டறிய முடியும்.

உங்களுக்கு பிடித்த கேமினை தேர்ந்தெடுத்து, அதனினை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். மொபோமார்கெட் செயலியில் கூகுள் ப்ளே ஸ்டோரில் இல்லாத செயலிகளையும் பதிவிறக்கம் செய்ய முடியும்.

செயலி மற்றும் கேம்

செயலி மற்றும் கேம்

ஒரு கேமினை பதிவிறக்கம் செய்ய முதலில் ஆண்ட்ராய்டு ஏபிகே இன்ஸ்டாலரை வைத்திருக்க வேண்டும். ஏபிகே மூலம் செயலியை பதிவிறக்கம் செய்வதன் மூலம் மற்றவைகளில் வழங்கப்படாத அதிகப்படியான அம்சங்களை அனுபவிக்க முடியும்.

இன்டர்ஃபேஸ்

இன்டர்ஃபேஸ்

மொபோமர்கெட் செயலி மற்ற ப்ளே ஸ்டோர்களை போன்று குழப்பமாக இல்லாத படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயலியின் இன்டர்ஃபேஸ் அழகாகவும் எளிமையாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் தேவையான செயலியை கண்டுபிடிப்பதில் எவ்வித சிரமமும் இருக்காது. இந்த செயலியில் கேம் மற்றும் செயலிகள் அழகான வடிவில் வரிசை படுத்தப்பட்டுள்ளது. இதன் யூஸர் இன்டர்ஃபேஸ் எவ்வித பிரச்சனையும் இன்றி வேகமாக இயங்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இன்டர்ஃபேஸ்

இன்டர்ஃபேஸ்

மொபோமார்கெட் ஸ்டோர் இன்டர்ஃபேஸ் பார்க்கவே வித்தியாசமாகவும் பயன்படுத்த சிறந்த அனுபவத்தையும் வழங்குகின்றது. இந்த செயலி மற்ற மூன்றாம் தரப்பு செயலிகளை விட வேகமாகவும், சிறப்பாகவும் வேலை செய்கின்றது. செயலி மற்றும் கேம்கள் எளிமையாக வரிசை படுத்தப்பட்டுள்ளதால் செயலிகள் வேகமாக பதிவிறக்கம் செய்ய முடிகின்றது. இது வாடிக்கையாளர்களுக்கு முற்றிலும் புதிய அனுபவமாக இருக்கும்.

ஆண்ட்ராய்டு

ஆண்ட்ராய்டு

ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் அதிகாரப்பூர்வ ப்ளே ஸ்டோருக்கு கச்சிதமான மாற்றாக மொபோமார்கெட் இருக்கின்றது. கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கும் பெரும்பாலான செயலி மற்றும் கேம்கள் இங்கு கிடைக்கின்றது. இதோடு பல்வேறு பிரிவுகளில் வரிசை படுத்தப்பட்ட எக்கச்சக்கமான செயலிகளையும் கொண்டிருக்கின்றது. பதிவிறக்கம் செய்ய சொல்லும் பரிந்துரைகளை நிறுத்தும் அம்சம் வேண்டும் என்றாலும், செட்டிங்ஸ் பகுதியில் உங்களுக்கு ஏற்ற பிரிவுகளை தேர்வு செய்ய முடியும். இதனால் உங்களுக்கு விருப்பமுள்ள பிரிவுகளில் செயலிகளை பற்றி தெரிந்து கொள்ள முடியும்.

Best Mobiles in India

English summary
Mobomarket: A simple and intuitive third party app store that supports 4 Indian languages
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X