உடனடி லோன் வசதியை அறிமுகப்படுத்திய மொபிகுவிக்.!

ஏற்கனவே 2017ல் மொபிகுவிக் மற்றும் பஜாஜ் பின்சர்வ் கூட்டணி அமைத்து, அடுத்த 12 மாதத்தில் ரூ1 கோடி மதிப்பிலான கடனை டிஜிட்டல்மயமாக்க வேண்டும் என களமிறங்கின.

|

டிஜிட்டல் நிதி சேவை வழங்கும் நிறுவனமான மொபிகுவிக், தனது மொபைல் செயலி வாயிலாக ரூ5,000 உடனடி லோன் வழங்கும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

உடனடி லோன் வசதியை அறிமுகப்படுத்திய மொபிகுவிக்.!

இந்த வசதி வங்கியில்லா நிதி நிறுவனமான(Non Banking Financial Company - NBFC) பஜாஜ் பின்சர்வ் உடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது. இது மில்லியன் நியூ டூ கிரிடிட் (New To Credit) வாடிக்கையாளர்கள் மற்றும் சிறு தொழில் நிறுவன முதலாளிகளை குறிவைத்து துவங்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் மற்றும் ஆப்லைன்

ஆன்லைன் மற்றும் ஆப்லைன்

இந்த கடன் தொகையை ஆன்லைன் மற்றும் ஆப்லைன் வர்த்தகர்களுக்கு கட்டணம் செலுத்துதல், வாகன பயணக்கட்டணம் செலுத்துதல் போன்ற பலவித தேவைகளுக்கும் பயன்படுத்தலாம்.

கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு

கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு

கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு எளிதாகவும் உடனடியாகவும் கடன் வழங்கும் நோக்கத்துடன், மொபிகுவிக் இந்த புதிய முறை கடன் வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதாக அறிக்கையொன்றில் கூறியுள்ளது.

மொபிகுவிக் மற்றும் பஜாஜ் பின்சர்வ்

மொபிகுவிக் மற்றும் பஜாஜ் பின்சர்வ்

ஏற்கனவே 2017ல் மொபிகுவிக் மற்றும் பஜாஜ் பின்சர்வ் கூட்டணி அமைத்து, அடுத்த 12 மாதத்தில் ரூ1 கோடி மதிப்பிலான கடனை டிஜிட்டல்மயமாக்க வேண்டும் என களமிறங்கின. இந்த கூட்டணியின் ஒரு பகுதியாக, 2017அக்டோபரில் இரு நிறுவனங்களும் இணைந்து 'பஜாஜ் பின்சர்வ் வாலட்' (Bajaj Finserv Wallet) என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தின.

பயனர்களின் எண்ணிக்கை

பயனர்களின் எண்ணிக்கை

இந்த உடனடி லோன் வழங்கும் திட்டத்தை அறிவித்து உரையாற்றிய மொபிகுவிக் நிறுவன இணை நிறுவனர் மற்றும் இயக்குனருமான உபசானா டாகு கூறுகையில், " சிறிய அளவிலான பணம் உடனடி கடனாக கிடைப்பது கிடைத்தற்கரிய வாய்ப்பாகும். இந்த ஆண்டு ஸ்மார்ட்போன் பயன்படுத்து பயனர்களின் எண்ணிக்கை 16% வரை உயர வாய்ப்புள்ள நிலையில், இணைய பணபரிமாற்றத்தின் பயனர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 30% வரை உயர்ந்து வருகிறது. இதுவரை கடன் வசதியே கிடைக்காத புதிய வாடிக்கையாளர்களை இந்த உடனடி கடன் திட்டத்தின் வாயிலாக அணுக முடியும் என நாங்கள் நம்புகிறோம்.

ரூ3500 கோடி

ரூ3500 கோடி

நாடு முழுவதும் உள்ள மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு ரூ3500 கோடி மதிப்புள்ள முன்கூட்டியே ஒப்புதல் அளித்த (pre approved) கடன் ஏற்கனவே உள்ளது. கடன் என்பது அரிதினும் அரிதான வாய்ப்பு. தனிநபர் மற்றும் தொழில்துறையினரின் என பலதரப்பட்ட மக்களின் சிறிய அளவிலான உடனடி கடன் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இதே போன்ற திட்டங்களை அறிமுகப்படுத்தும் பணியில் ஈடுபட்டுவருகிறோம்" என தெரிவித்தார்.

Best Mobiles in India

English summary
MobiKwik launches instant loan facility on its app in partnership with Bajaj Finserv: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X