Home
Apps

ஐஆர்சிடிசி செயலியுடன் கைகோர்த்தது மொபிக்விக்

இந்தியாவை டிஜிட்டல் மயமாக்குவதற்கு அடுத்த படியாக மொபிக்விக் தற்போது ஐஆர்சிடிசி உடன் இணைந்து செயல்படுகின்றது.

By Siva

ஐஆர்சிடிசி செயலியில் இனி ரயில்வே டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும் என்றால் டிஜிட்டல் பேமெண்ட் சேவை செய்யும் நிறுவனங்களில் ஒன்றான மொபிக்விக் தளத்தை இனிமேல் பயன்படுத்தி கொள்ளலாம். ஏனெனில் ஐஆர்சிடிசி உடன் மொபிக்வி தற்போது ஒப்பந்தம் செய்துள்ளது.

ஐஆர்சிடிசி செயலியுடன் கைகோர்த்தது மொபிக்விக்

இதுகுறித்து மொபிக்விக் தலைமை பிசினஸ் அதிகாரி வினீத் சிங் கூறியபோது, 'பொதுமக்கள் கரன்சியை கையில் வைத்து கொள்ளாமல் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்வதற்கு உதவியாக மொபிக்விக் செயல்பட்டு வருகிறது. இந்தியாவை டிஜிட்டல் மயமாக்குவதற்கு அடுத்த படியாக மொபிக்விக் தற்போது ஐஆர்சிடிசி உடன் இணைந்து செயல்படுகின்றது.

மொபிக்விக் செய்துள்ள இந்த ஒப்பந்தம் காரணமாக இனிமேல் ரயில் பயணிகள் தங்களது பயண டிக்கெட்டுக்களை பாதுகாப்பாக, விரைவாக ஒருசில நொடிகளில் பெற்று கொள்ளலாம்.

மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை பின்னர் நாடே டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறியுள்ள நிலையில் மொபிக்விக் தற்போது ஐஆர்சிடிசி உடன் ஒப்பந்தம் செய்துள்ளது அதன் பயனை அதிகரிக்கும் வகையில் இருக்கும். இந்த பொருளாதார வருடத்தில் மட்டும் 17% டிக்கெட்டுக்கள் கரன்சியின் உதவியின்றி டிஜிட்டல் பேமெண்ட் மூலம் தான் நடைபெற்றுள்ளது. இதில் முன்பதிவு மற்றும் முன்பதிவு இல்லாத பரிமாற்றங்களும் அடங்கும்

தற்போது மொபிக்விக் டிஜிட்டல் பேமெண்ட் சேவை 3000க்கும் அதிகமன இகாமர்ஸ் இணையதளங்கள் மற்றும் செயலியுடன் தொடர்பை வைத்துள்ளது. மாதம் ஒன்றுக்கு மொபிக்விக் மூலம் 100 மில்லியனுக்கும் அதிகமான பரிமாற்றங்கள் நடைபெற்று வருகிறது. மொபிக்விக் பரிவர்த்தனையில் பலகட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதால் எந்தவிதமான அச்சுறுத்தலுக்கும் இடமிருக்காது.

மேலும் ஒரே ஒரு மொபைல் செயலி அக்கவுண்ட் மூலம் பல வங்கிகளின் கணக்குகளை நாம் கையாளும் வசதியும் இதில் உண்டு. ஒவ்வொரு வங்கியின் பணப்பரிமாற்றங்கள், பேலன்ஸ் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் ஒரே இடத்தில் பெற்று கொள்ளலாம். மேலும் இந்த செயலி 2ஜி உள்ளிட்ட குறைந்த வேகத்தில் இயங்கும் இண்டர்நெட்டிலும் கூட மிகச்சிரத்தையாக செயல்படும் என்பது இதன் கூடுதல் சிறப்பு ஆகும்

Best Mobiles in India

English summary
Mobikwik's Payment Gateway currently powers payments for more than 3000 e-commerce websites and apps.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X