மொபிவிக் மூலம் இனி ஓலா கேப் புக்கிங் செய்யலாம்!
இது தவிர, மொபிவிக் பயனர்கள் செய்யும் ஒவ்வொரு சவாரியிலும் 10 சதவீதம் சூப்பர்கேஷ் என்ற முறையில், ரூ.100 வரை கட்டணத்தில் தள்ளுபடி பெறலாம்.
மொபிவிக் மற்றும் ஓலா ஆகிய நிறுவனங்கள் தற்போது கைகோர்த்துள்ளன. இந்தக் கூட்டுறவின் மூலம் மொபிவிக் அப்ளிகேஷனைப் பயன்படுத்தி இந்தியாவில் உள்ள 110 நகரங்களில் ஓலா கேப்கள் மற்றும் ஆட்டோக்களை, மொபிவிக் பயனர்கள் முன்பதிவு செய்ய முடியும்.

மேலும் கட்டணம் குறைந்த தேர்வுகளான ஓலா ஆட்டோ, மைக்ரோ மற்றும் மினி ஆகியவை முதல் பிரீமியம் வகைகளான ஓலா பிரைம், ஓலா பிரைம் ப்ளே, ஓலா பிரைம் எஸ்யூவி மற்றும் ஓலா லக்ஸ் ஆகியவை வரையிலான ஓலா நிறுவனத்தின் பல்வேறு வகையான பயண வசதிகளை, மொபிவிக் பயனர்கள் பயன்படுத்த முடியும்.
பல அப்ளிகேஷன்களுக்கு இடையிலான குழப்பத்தைத் தவிர்த்து, வாடிக்கையாளர்களுக்கு தேவையான ஓலா சவாரியை, தங்களின் மொபிவிக் அப்ளிகேஷனில் இருந்தே நேரடியாக முன்பதிவு செய்து, மொபிவிக் வாலெட்டில் இருந்து கட்டணத்தையும் செலுத்தக் கூடிய ஒரு எளிய அனுபவத்தை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் அறிமுக சலுகையாக, முதல் 5 சவாரிகளுக்கு ரூ.50 சூப்பர்கேஷ்ஷாக மொபிவிக் வழங்குகிறது. மொபிவிக் அப்ளிகேஷனின் நவீன பதிப்பைக் கொண்டுள்ள ஆன்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டுமே மேற்கண்ட ஓலா கேப்கள் வசதி அளிக்கப்படுகிறது.
இது தவிர, மொபிவிக் பயனர்கள் செய்யும் ஒவ்வொரு சவாரியிலும் 10 சதவீதம் சூப்பர்கேஷ் என்ற முறையில், ரூ.100 வரை கட்டணத்தில் தள்ளுபடி பெறலாம். மேலும் மொபிவிக் வாலெட் மூலம் மாலை 4 மணியில் இருந்து 7 மணி வரைக்குள் மற்றும் காலை 8 மணியில் இருந்து 10 மணி வரைக்குள் முன்பதிவு செய்யப்படும் சவாரிகளில், தினமும் 1,000 பயனர்களுக்கு 100 சதவீத கட்டணத்தை திரும்ப பெறுவதற்கான (கேஷ்பேக்) வாய்ப்பை, மொபிவிக் நிறுவனம் அளித்துள்ளது.
இது குறித்து மொபிவிக் நிறுவனத்தின் சந்தைப்படுத்துதல் மற்றும் வளர்ச்சியின் துணை தலைவரான டாமன் சோனி கூறுகையில், "டிஜிட்டல் முறையில் கட்டணம் செலுத்துவதற்கு கேப் முன்பதிவு என்பது நம்பகமான முறை என்று நாங்கள் நம்புகிறோம். கடந்த சில மாதங்களாக, எங்கள் அப்ளிகேஷனை கச்சிதமாக இயக்கக் கூடிய ஒரு முடுக்குவி (மொபைலிட்டி இன்னேபிளர்) தேவை என்று எங்கள் நுகர்வோர்களிடம் இருந்து கருத்துகளைப் பெற்று வந்தோம்.
இந்நிலையில் ஓலா உடன் சவாரியை முன்பதிவு செய்வதற்கான ஒரு தேறிய இணைப்பாளரை நாங்கள் இணைத்துள்ளோம். இதன்மூலம் வருங்காலத்தில் சிறப்பாக செயல்படும் வகைகளில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்று நம்புகிறோம். டிஜிட்டல் பணபரிமாற்றங்களை எளிதாகவும் தங்குதடையின்றியும் நடத்த விரும்புகிறோம். இது போன்ற முயற்சிகளில் ஈடுபடுவதில் ஓலா முக்கியத்துவம் வகிக்கும்" என்றார்.

இது குறித்து இந்தக் கூட்டணியில் ஓலா தரப்பில் தலைவராக உள்ள சவுரப் மிஸ்ரா கூறுகையில், "வாடிக்கையாளர்களின் அனுபவத்தை சிறப்பாக மாற்றுவதில், மூலோபாயம் கொண்ட கூட்டுறவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சேவைகளின் ஒருங்கிணைப்புகளால் வாடிக்கையாளர்கள் மேலும் வலுவடைந்து, அவர்களின் வாழ்க்கை எளிதாகவும் சுமூகமாகவும் மாறுகிறது.
இந்தக் கூட்டுறவின் மூலம் ஒற்றை அப்ளிகேஷனைப் பயன்படுத்தி, தங்கள் விருப்பத்திற்கேற்ற ஒரு சவாரியை மொபிவிக் பயனர்களால் முன்பதிவு செய்ய முடிகிறது. இந்த அப்ளிகேஷன் மூலம் ஓலா முன்பதிவு செய்ய, மொபிவிக் பயனர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications